என் இளம் தோழி சொன்னாள்
என் நண்பர்கள் பலர்
அவளுக்கு நட்பு விண்ணப்பம் அனுப்புவதாக
அதில் என்ன தப்பு என்றேன்
வேறு யாருமே எனக்கு நட்பு விண்ணப்பம்
அனுப்புவதில்லை என்றாள்
ஏன் என்றேன்
ஃபேஸ்புக்கில் நானொரு ஃபேக் ஐடி
மட்டுமல்லாமல் அங்கே
நீங்கள் ஒருவர்தானே என்
நண்பர்
என்றாள்