அன்பு: மூன்றே நாளில் 500 பிரதிகள்

கிட்டத்தட்ட கமலின் விக்ரம் மாதிரி வெற்றி அடைந்திருக்கிறது அன்பு நாவல். மூன்று நாளில் 500 பிரதிகள் விற்று விட்டன. அது உண்மையில் 510 ஆகத்தான் இருந்திருக்க வேண்டும். சுமார் அரை மணி நேரம் நேற்று அன்பு பிரதிகள் கைவசம் இல்லாமல் போனது. அப்போதே ஒரு பத்து பேர் வந்து கேட்டு விட்டுப் போனார்கள். என் எழுத்து வாழ்வில் இந்த அளவுக்கு வேறு எந்த நூலும் விற்றதில்லை. அனைவருக்கும் நன்றி. இன்றும் நாளையும் புத்தக விழா கடைசி. மாலை ஐந்திலிருந்து எட்டரை வரை எஃப் 19 ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். புத்தகத்தில் அதை எழுதியவரின் கையெழுத்தும் முக்கியம் என்று நீங்கள் கருதினால் நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

நான் தில்லி கர்ஸன் ரோட்டில் தி.ஜானகிராமன் வீட்டுக்கு அடுத்த கட்டிடத்தில் ஒரு ஆண்டு காலம் வேலை பார்த்தேன். இப்போது அந்தச் சாலையின் பெயர் கஸ்தூர் பா காந்தி மார்க். வெங்கட் சாமிநாதனோடு அவர் வீட்டுக்கும் போயிருக்கிறேன். ஆனால் அவரோடு ஒரு புகைப்படம் எடுத்ததில்லை. (எண்பதுகளில் அது சாத்தியம் இல்லை) அல்லது சாத்தியப்பட்டிருக்கக் கூடிய ஒரு கையெழுத்தும் வாங்கியது இல்லை.

ஞாபகம் வந்தது. அவ்வளவுதான்.