இப்போது நான் 2020இல் ஆறு மாதங்களில் எழுதிய பூச்சி பதிவுகளைத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் நான்கு தொகுதிகள். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். இப்போதுதான் இரண்டாம் தொகுதியை முடித்தேன். இன்னும் இரண்டு தொகுதிகள். அதனால்தான் ஆரோவில் பட்டறை பற்றி எழுதவில்லை. சுமார் முப்பது பேர் வந்திருந்தார்கள். எல்லோரும் புதுமுகம். ஒரு நாள் முழுவதும் இருந்து விவாதித்தார்கள். எல்லோருமே மூன்று கதைகளையும் படித்து விட்டு வந்திருந்தார்கள். குடி, கொண்டாட்டம், டான்ஸ் என்று போட்ட போது நூறு பேர். இப்போது மதியம் உணவு கூட தர மாட்டோம் என்று சொன்ன போதும் முப்பது பேர். எந்தவித ப்ரமோஷனும் செய்யாமல் இத்தனை பேர் வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. வந்திருக்கக் கூடிய சில தலைகளுக்கு பரீட்சை.
பட்டறையின் சில புகைப்படங்கள். எல்லா புகைப்படங்களும் எடுத்தவர் பாக்யராஜ்
பட்டறை முடிந்த மறுநாள் ஆவணப் படத்துக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆரோவில் கடற்கரையில் நடந்தது.