கேரள இலக்கிய விழா

நாளை மதியத்துக்குள் உல்லாசம், உல்லாசம்… நாவலுக்கான முன்பதிவுத் திட்டம் பற்றிய விவரங்கள் குறித்த கட்டுரை வெளியாகும்.

***

கோழிக்கோடு நகரில் ஜனவரி 11இலிருந்து 14 வரை நடக்க உள்ள கேரள இலக்கிய விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன்.

அதில் பதின்மூன்றாம் தேதி காலை பத்து மணியிலிருந்து பதினோரு மணி வரை Conversations with Aurangzeb: A Novel குறித்த உரையாடல் எனக்கும் ஷியாஸ் முஹம்மதுவுக்கும் நடக்க உள்ளது. பின்வருவது ஷியாஸ் முஹம்மது பற்றிய குறிப்பு:

Shiyas Mohammed is an educator and researcher. He held positions like State Resource Person in English, SCERT Kerala; Member of the Text Book Development Committee for the Government of Kerala; and English Communication Expert for various educational groups. He has also written an English language column for Madhyamam Daily and edited a book on National Education Policy.

அதே பதின்மூன்றாம் தேதி மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நானும் ஜெயமோகனும் கன்னட எழுத்தாளர் வசுதேந்த்ராவும் ஜே. தேவிகாவும் உரையாடுகிறோம். அதன் தலைப்பு:

Translating India: A South Indian Context

இந்த இரண்டு அமர்வுகளுக்கும் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.