
‘ஜோடிப்புறாவை எங்கே காணோம்?’ வாசித்தேன். வாசகர்கள் பொதுவாக உங்கள் எழுத்தைக் குறித்து குறிப்பிடுகையில், சந்நதம் வந்து ஆடியிருக்கிறீர்கள் என்பார்கள். அப்படி ஆடும் பொழுது இரண்டு கைகளிலும் வாளைக் கொடுத்தால் என்னவாகும்? அதுதான் இந்த நாவல். விஷயதானம் அளித்தவர்களை எல்லாம் குத்திக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறீர்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்களை. மாயமான் வேட்டைக்கு ஒரு விவேக் போல, ஜோடிப்புறாவுக்கு ஒரு திவ்யா. இரண்டு கதாப்பாத்திரங்களும் இன்றைய இளைஞர்களின் வறட்டுத்தனமான பிடிவாதம், சுரணையின்மை, கருணையின்மை போன்றவற்றைப் பிரதிபலிக்கும் இருவேறு வடிவங்கள். பிராணிகளின் மீது அன்பு செலுத்தும் விநோதினி சொல்லும் கதைகளில், அவள் தங்கியிருக்கும் விடுதியில் இருக்கும் பெண்கள், நோய்மையில் இருக்கும் கருப்புப் பூனை மீது காட்டும் ரேஸிஸம், தீண்டாமை குறித்தெல்லாம் கூறியது முக்கியமானது.
பிராணிநல ஆர்வலர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் பாதிபேர் அப்படித்தான் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாகப் பெண்கள். பிராணிகளிடம் மட்டுமில்லை, மனிதர்களிடமும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். வசதியானவர்களைப் பார்த்தால் மட்டும் அவர்களிடம் கருணை பொங்கி வழியும். அதிலும் முதியவர்களிடம் பார்க்க வேண்டுமே. ஆள் பார்க்க நல்ல வசதியாகத் தெரிந்தால், சாதாரணமாக நடந்து சென்றால் கூட, “அங்கிள் நான் வேணா கூட வரட்டுமா? என்ன புடுச்சிக்கங்க” என்று கருணை பொங்க உதவச் செல்வார்கள். இதுவே பஞ்சத்தில் கிடப்பவர் போலிருந்து தடுமாறி நடந்து வந்தால், குஷ்டரோகியைக் கண்டதுபோல் விலகி ஓடுவார்கள்.
கொக்கரக்கோ-பெருமாளின் விவாதகங்களை விட, அதைப் படித்துவிட்டு வைதேகி கூறும் பதில், பின்நவீனத்துவம் குறித்து எளிமையாக விளக்கி விடுகிறது. அன்பு நாவலில் வைதேகிக்குப் பேச இடமில்லை. ஆனால் இந்த நாவலில் அவளுக்குப் பேச இடமிருக்கிறது. தான் தேர்ந்தெடுத்த தனிமைக்கான காரணத்தைக் கூறும் பொழுது பெருமாள் மீது ஆத்திரமாக வந்தது. வழக்கம் போல் பகடிக்கும் நாவலில் பஞ்சமில்லை. அதிலும் அநுத்தமாவின் தோழிகள் பெருமாளிடம் பாராமுகம் கொண்டதற்காக ஒரு பா இயற்றியிருக்கியிருக்கிறீர்கள் பாருங்கள். ஐந்து நிமிடங்கள் இடைவிடாமல் சிரித்திருப்பேன். ஆண்-பெண் உறவில் வெளிப்படைத்தன்மை குறித்து பெருமாள் கூறும் அத்தியாயங்கள், அரைகுறைப் பெண்ணியவாதிகளால் கண்டனத்துக்கு உள்ளாக வாய்ப்பிருக்கிறது.
இயற்கையிலேயே சமத்துவம் என்பது இல்லாத போது ஆண்-பெண் உறவில் மட்டும் எங்கிருந்து வரப்போகிறது? பெருமாள் சொல்வது போல் காலணி இடம் மாறியிருக்கிறது. அவ்வளவே. தொலைக்காட்சி விவாதங்களை எல்லாம் பாருங்கள். ஆண்களின் ஒப்பாரிக் கூடமாக இருக்கிறது. பெண்களெல்லாம் ரசித்துச் சிரிக்கிறார்கள் அதனைப் பார்த்து. நாவல் நூற்றியிருபது பக்கங்கள்தான் என்பது ஏமாற்றமாக இருந்தது. ‘எல்லாரும் இன்புற்றிருக்க’ குறுநாவலை விட ஜோடிப்புறாவே எனக்குப் பிடித்திருக்கிறது.
செந்தமிழ்
நாவலின் பிடிஎஃப் தேவைப்படுபவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். விலை எதுவும் இல்லை. நீங்கள் தரும் நன்கொடைதான்.
நன்கொடை அனுப்ப விரும்புபவர்களுக்கு விவரம் கீழே, நன்கொடை அனுப்பும் நண்பர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும்.
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai