இதயம் பலஹீனமானவர்கள் படிக்க வேண்டாம்… (மீண்டும்)

சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட இந்தக் குறிப்பிட்ட  கட்டுரை காணாமல் போய் விட்டதால் மீண்டும் பதிவிடுகிறேன்.

பத்துப் பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை அவந்திகாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆயுள் காப்பீடு செய்து கொள்ள முயன்றேன்.  அதற்கான உடல் தகுதியைப் பரிசோதிக்க ஒரு மருத்துவரிடம் அனுப்பப்பட்டேன்.  மருத்துவர் மிக மிக செக்ஸியான ஒரு இளம் பெண்.  அப்படிப்பட்ட பெண் மருத்துவர்கள் கடுகடு என்று இருப்பர்.  அதற்கு மாறாக, இந்தப் பெண் கலகலவென்று சிரித்துப் பேசிக் கொண்டு சோதனைகள் செய்தார்.  ஈஸிஜி, எக்கோ போன்ற பரிசோதனைகளைச் செய்யும் போது எனக்கு மூச்சு முட்டியது என்றே சொல்ல வேண்டும்.  ட்ரெட் மில் சோதனையை என்னால் செய்ய முடியாமல் போனது.  நீங்கள் உடனடியாக ஆஞ்ஜியோகிராம் செய்து கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் ஹார்ட் அட்டாக் வருவதற்கான முழு சாத்தியமும் உள்ளது என்று சொல்லி அனுப்பி விட்டார் அந்த செக்ஸியான இளம் பெண் மருத்துவர்.  ஆயுள் காப்பீட்டுக்கு நான் தகுதி இல்லாதவன் ஆனேன்.  (என் இதயப் படபடப்புக்குக் காரணம் அந்தப் பெண் மருத்துவர் தான் என்றும் மனதோரம் நினைத்துக் கொண்டேன்.) ஆஞ்ஜியோகிராம் செய்து பார்த்து இதயக் குழாய்களில் அடைப்பு இருந்தால் ஆஞ்ஜியோப்ளாஸ்டி செய்ய இரண்டு லட்சம் ஆகும் என்றார்கள்.  நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்ததால் அலுவலகத்திலிருந்து இரண்டு லட்சம் வந்திருந்தது.  உடம்பை கவனித்திருக்கலாம்.  கார்த்திக் கல்லூரியில் சேர்ந்திருந்தான்.  மரைன் எஞ்ஜினியரிங்.  இரண்டு லட்சம் கட்ட வேண்டும்.  கட்டி விட்டேன்.  நாம் செத்தால் பரவாயில்லை; நம் பையனும் நம்மைப் போல் பிச்சை எடுக்க வேண்டாம் என்று எண்ணினேன்.  இரண்டு ஆண்டுகள் சென்று ஹார்ட் அட்டாக் வந்து பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டேன். எனக்கு மட்டும் அல்ல; இந்தியக் குடிமகர்கள் அனைவருக்கும் தங்கள் உயிரை விடத் தங்கள் பிள்ளைகளின் படிப்பு தான் முக்கியமாக இருக்கிறது.

துருக்கி சென்று வர இரண்டு லட்சம் ரூபாய் ஆயிற்று.  அதில் எழுபது ஆயிரத்தை வாசகர்களும் நண்பர்களும் கொடுத்து விட்டனர்.  மீதி 1,30,000-ஐ ஒரு நண்பர் கடனாகக் கொடுத்தார்.  நான் வாழ்க்கையில் கடனே வாங்கியதில்லை.  பிச்சைக்காரன் கடன் வாங்க முடியாது அல்லவா, அதுதான் காரணம்.  ஆனாலும் துருக்கி சென்றே ஆக வேண்டும் என்பதால் கடன் வாங்கிக் கொண்டேன்.  கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கலாம் என்று இருந்தேன்.  போய் விட்டு வந்த பிறகுதான் தெரிந்தது, அவர் தன் மகளைக் கல்லூரியில் சேர்ப்பதற்காக வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார் என்று.  இதுவும் அவராகச் சொல்லவில்லை.  நானே தெரிந்து கொண்டேன்.  வேறொரு நண்பரிடமிருந்து கடன் வாங்கி மகளைக் கல்லூரியில் சேர்த்திருக்கிறார்.

ஒரு கலவையான உணர்வுநிலைக்கு ஆட்பட்டேன்.   ஏதாவது செய்து அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.  என்னுடைய முக்கியமான சில புத்தகங்களை நண்பர்களிடம்/வாசகர்களிடம் கொடுத்து விடலாம் என்று ஒரு யோசனை வந்தது.

1.தென் கிழக்கு ஆசிய நாடுகளின் வரலாறு (தமிழ்) 680 பக்கம்

2. Sartre & Marxism : Pietro Chiodi : 8.2.1982 அன்று தில்லியில் வாங்கிய நூல்.  அப்போதைய விலை 4.50 பவுண்டு.  (அப்போது என் சம்பளம் 600 ரூபாய்.)  ஜான் பால் சார்த்தர் பற்றிய ஒரு முக்கியமான நூல் இது.  நூலின் பக்கவாட்டில் குறிப்புகள் எழுதியிருக்கிறேன்.  அக்குறிப்புகள் நூலைப் படிக்க பாதகமாக இராது.  உதவியாகவே இருக்கும்.

3. Bengali Theatre

4. Considerations on Western Marxism : Perry Anderson 1985-ஆம் ஆண்டு வாங்கியது.  Verso Publication.  அப்போதைய விலை நான்கு பவுண்டு.

5. Marxism and Politics : Ralph Miliband 8.2.1982 அன்று வாங்கியது.  ரால்ஃப் மிலிபேண்ட் ஒரு முக்கியமான மார்க்ஸீய எழுத்தாளர்.

6. The Chinese Literary Scene : Kai Yu Hsu பெங்குவின் பதிப்பு.  1980-இல் வாங்கியது.

7. The Rape of Clarissa : Terry Eagleton

8. ஃபிடல் காஸ்ட்ரோ உரைகள்

9. The Riddle of the Self

9. The Fugitive Years : Robert Bradshaw செப்டெம்பெர் 1990-இல் வாங்கியது.

10. Art and Society : Essays in Marxist Aesthetics : Adolfo Sanchez Vazquez :  மிக முக்கியமான புத்தகம்.  1980-இல் வாங்கியது.

11. Lust for Life : வான்கோவின் வாழ்க்கை வரலாறு.

12. People’s Theatre

13. From Rousseau to Lenin : Lucio Colletti  7.2.1982 அன்று வாங்கியது.

14. Marxists on Literature : An Anthology : David Craig தொகுத்த மிக முக்கியமான புத்தகம்.  31.5.1980 என்ற தேதி போட்டு நிவேதிதா என்று கையெழுத்திட்டிருக்கிறேன்.  அந்த சமயத்தில் சாரு சேரவில்லை போலும்.

15.  The Textures of Silence : A novel that will alter your view of the world in which we live: Gordon Vorster  21.9.1990 அன்று வாங்கியது – researchpaperhouse.com.

16. The Wandering Unicorn : Manuel Mujica Lainez : புத்தகத்தில் ஆகஸ்ட் 1990-இல் வாங்கியது என்ற விபரம் உள்ளது.

17. Chinese Literature : Autumn 1988 முக்கியமான புத்தகம்.  க்ராண்டா மாதிரியான தொகை நூல்.

18. Art Now : Herbert Reed நவீன ஓவியம் குறித்த ஒரு அடிப்படையான நூல்.  பல ஓவியர்களின் படைப்புகளும் உண்டு.

19. Vladimir Mayakovsky Selected Verse.  மிக முக்கியமான புத்தகம்.

20. His Nameless Love: Portraits of Russian Writers.  முக்கியமான நூல்.  7.2.1982 என்று தேதியிட்டு சாரு என்று கையெழுத்திட்டிருக்கிறேன்.

21. The Bridges of Madison County

22. ஒப்பியல் இலக்கியம் : க. கைலாசபதி

23. Marx’s Theory of Alienation: I. Meszaros   இஸ்த்வான் மேஸாரோஸ் ஒரு முக்கியமான மார்க்ஸீய அறிஞர்.  ஹங்கேரியைச் சேர்ந்தவர்.  இந்தப் பெரிய நூலைக் காப்பி அடித்தே தமிழின் மார்க்ஸீய அறிஞர் தன்னுடைய நூலை எழுதினார்.  பெயரைச் சொன்னால் கேஸ் போடுவார்.  போட்டால் பரவாயில்லை.  ஆனால் இப்போது என்னால் ஊட்டி வரை ரயில் பயணம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை.

24. Marxist Sociology : Tom Bottomore சமூகவியலில் இது ஒரு முக்கியமான அடிப்படை நூல்.

25. The Life and Death of Eva Peron சீலேயின் ’புரட்சித் தலைவி’ பற்றிய அட்டகாசமான நூல்.

26. Tribal Guerrillas : The Santals of West Bengal and the Naxalite Movement  பெயரிலேயே இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் தெரியும்.

27. Song of Solomon : Toni Morrison எழுதிய முக்கியமான நாவல்

28. Sanity, Madness and the Family : R.D. Laing எழுதிய இந்த நூலை மிகக் குறைந்த சம்பளப் பணத்தில் வாங்கி விட்டு (1979) பல தினங்கள் பட்டினி கிடந்திருக்கிறேன்.    என் வாழ்வியல் கோட்பாடுகளையே மாற்றி அமைத்த புத்தகங்களில் இது ஒன்று.  இந்த நூல் பற்றி என் கட்டுரைகளில் பல இடங்களில் எழுதியிருக்கிறேன்.

29. சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதை.  இந்த நூலின் முக்கியத்துவம் என்னவென்றால் 15 ரூபாய்க்கு பாக்கெட் நாவல் அசோகன் பதிப்பித்த பாக்கெட் நாவல்.

30.  Gulliver’s Travels

31. Subaltern Studies IV edited by Ranajit Guha.  நான் பலமுறை குறிப்பிட்டுள்ள சமூகவியல் நூல்.

32. Marx and Engels : On Religion

33. Modern Short Stories : Macmillan

34. Picasso : 80 Colour Plates

35. What is History?  E.H. Carr

36. The Communists and Peace : Jean Paul Sartre  11.1.1983 அன்று வாங்கியது.

37. Call to Arms : Lu Xun எழுதிய நாவல்.

38. Undesirable Alien : Novel : Regis Debrary  சே குவேரா, சார்த்தர் ஆகியோரின் நண்பர் எழுதிய நாவல்.  24.3.1980 அன்று வாங்கி நிவேதிதா என்று அழகாகக் கையெழுத்திட்டிருக்கிறேன்.

39. Siberian Stories : Vasili and Vasiliya

40. For the Liberation of Brazil : Carlos Marighela

41. Landscape in Concrete : Jakov Lind

42. The Dancing of Wu Li Masters.  Gary Zukav 10.11.1993 பௌதிகம் பற்றிய ஒரு மிக சுவாரசியமான நூல்.

மேற்கண்ட நூல்களில் சில மிக மிக அரிதானவை.  சில சாதாரணமானவை.  சில விலை மதிக்க முடியாதவை.  நான் விலையைக் கேட்கவில்லை.  சுமை கூலியை மட்டுமே கேட்கிறேன்.  35 ஆண்டுகள் சுமந்து திரிந்திருக்கிறோம், நானும் அவந்திகாவும்.  ஒரு நண்பர் தன் மகளின் கல்லூரி அட்மிஷன் பணத்தை என் பயணத்துக்காகக் கொடுத்தார் என்றதும் இந்தப் புத்தகங்களை நண்பர்களுக்குக் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

இவ்வளவையும் ஒருவரே வாங்கிக் கொள்ள முடியாது.  தேவையெனில் எழுதுங்கள்.  அல்லது, பண உதவி மட்டும் செய்கிறேன் என்றாலும் சரி.  நூறு ரூபாயாக இருந்தாலும் சரி.  துருக்கி பயணம் ஆயிரம் பக்கங்களுக்கான விஷயங்களைக் கொடுத்துள்ளது.  அதற்கு நான் செலவு செய்த இரண்டு லட்சம் ஒன்றுமே இல்லை.  பணம் அனுப்ப என் வங்கி விபரம்:

A/c holder Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account Number : 911010057338057

Branch Name: Mylapore

IFSC code : UTIB0000006

ICICI account No. 602601 505045

Name : K. Arivazhagan

T. Nagar branch.