லா.ச.ரா. நூற்றாண்டு விழா

வரும் 30 /10/2015 மாலை 6 மணி அளவில் ரஷ்ய கலாச்சார மையத்தில்  லா.ச.ரா-வின் நூற்றாண்டு விழா மற்றும் புத்தக வெளியீடு.  சிறப்புரை அடியேன்.  அவசியம் கலந்து கொள்ளவும்.      

ஊடக வன்முறை

நடிகர் சங்கத் தேர்தலுக்கு மறுநாள் பேப்பர் வாங்கக் கடைக்குப் போகும் போது தி இந்துவில் பாண்டவர் அணி வெற்றி பற்றிய செய்தியை (தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சரத்குமார் அணி தோற்று விடும் என்று எனக்குத் தெரியும்) தலைப்புச் செய்தியாகவோ முதல் பக்கத்திலோ போட்டிருந்தால் அன்றோடு தி இந்து படிப்பதை நிறுத்தி விட வேண்டும் என்ற யோசனையில்தான் போனேன்.  நல்லவேளையாக அந்தச் செய்தி முதல் பக்கத்தில் இல்லை.  எங்கேயோ எட்டாம் பக்க மூலையில் வந்திருந்தது.  தி இந்து என் … Read more

ப்ளூ கிராஸில் விட்டு விடுங்கள்…

புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்காகப் பணம் கேட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன்.  ஒருவர் கூட பணம் அனுப்பவில்லை.  அது எனக்குப் பெரிய பிரச்சினையும் இல்லை.  ஆனால் ஒரு விஷயம் எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்து கொண்டே இருக்கிறது.  அந்த ஆச்சரியத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.  தலைக்கு மேல் வேலை இருக்கிறது.  அந்திமழைக்கும் தினமணிக்கும் கட்டுரை அனுப்ப வேண்டும்.  அதையெல்லாம் விட்டு விட்டு இதை நெம்பிக் கொண்டிருக்கிறேன்.  காரணம், அந்த அளவுக்கு ஆச்சரியம். … Read more

நிலவு தேயாத தேசம்

சில மாதங்களுக்கு முன்பு ரொம்ப சத்தம் போடாமல் துருக்கி சென்று வந்தேன்.  அது பற்றிய தொடர் கட்டுரை அந்திமழை இணைய இதழில் வாரா வாரம் வர இருக்கிறது.  அது குறித்த விளம்பரம்:    

நாணயத்தின் இன்னொரு பக்கம்…

க.நா.சு.வைப் படிக்கும் போதுதான் புரிகிறது, ஒரு ஆள் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என்னைப் போல் புலம்பியிருக்கிறார் என்று.  அச்சு அசலாக அதே புலம்பல்.  ஒரு வார்த்தை மாறவில்லை.  என்ன புலம்பல்?  காசு இல்லை; பயணம் செய்ய முடியவில்லை; எழுத்தாளனுக்கு உரிய அங்கீகாரம் இல்லை; தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நாள் பூராவும் நேரம் செலவு செய்தாலும் ஒரு பைசா கொடுப்பதில்லை; எட்செட்ரா, எட்செட்ரா.  இது நாணயத்தின் ஒரு பக்கம்தான்.  இன்னொரு பக்கம் சொர்க்கம்.   அந்தப் பக்கத்தைப் பார்த்தால் என்னைப் … Read more

Social Activism

* Charu Nivedita was invited as the chief guest of Sambavas’ annual celebrations (a Dalit caste) at Chalakudy in Kerala on May 11, 2008. …………………………………. *  He inaugurated a meeting and spoke among the adivasis protesting against wanton clay mining at Velichikala, near Kollam. Charu Nivedita speaks at Velichikala anti-clay mining protest – The Hindu, … Read more