ஒரு சந்திப்பு

தினமும் 2000 இலிருந்து 3000 வார்த்தைகள் எழுதுகிறேன்.  இந்த அளவுக்கு என் வாழ்நாளில் எப்போதும் எழுதியதில்லை.  மழை காரணமாக வீட்டை விட்டும் வெளியே செல்ல முடியவில்லை.  அதனால், ஒரு மாற்றத்துக்காக இந்த மாதம் 19, 20, 21 (சனி, ஞாயிறு, திங்கள்) மூன்று நாளும் ஏற்காட்டில் இருப்பேன்.  18 இரவே ஏற்காடு வந்து விடுவேன்.  ஏற்காடு என்றாலே கொலைப்பசி என்ற விஷயம் பயமுறுத்துகிறது.  இந்த முறை செல்வகுமார் என்னோடு வருவதால் – அவரிடம் காரும் இருக்கிறது என்பதால் … Read more

த அவ்ட்ஸைடர் – 24

இம்மாதிரி சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்வதென்று எல்லோரும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறோம்.  எந்தக் குற்றமும் செய்யாத ஒரு சாதாரண சராசரி மனிதனின் முகபாவம் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட முகபாவத்தோடு நாங்கள் எங்கள் வீட்டை நோக்கிச் சென்றோம்.  வீட்டின் உள்ளே சென்றவுடன் யாரிடமும் எதுவும் பேசவில்லை.  விளக்கையும் ஐந்து நிமிடத்தில் அணைத்து விட்டோம்.  ஆயுதங்கள் காரிலேயே இருந்தன.  அதைப் பற்றியும் கவலைப்படவில்லை.  இம்மாதிரி சமயங்களில் மற்றவர்களாக இருந்தால் உடனடியாக, ரகசியமாக ஆயுதங்களை எடுத்து வைத்துக் காபந்து பண்ணுவார்கள்.  போலீஸ் வேறு … Read more

த அவ்ட்ஸைடர் 23

அதோடு விடவில்லை ஜூலியா.  நான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ரமோனிடம் சொன்னால் உங்கள் இருவரையும் கழுத்தை நெறித்துக் கொன்று விடுவேன் என்றும் சொன்னாள்.  சூஸானா தன் ’புதிய கணவன்’ ஆர்மாந்தோவுடன் பராகுவாய் திரும்புகிறாள்.  மூன்று வாரங்களுக்கு முன்புதான் கணவன் ஃப்ரான்சிஸ்கோவுடன் அசுன்ஸியோனில் சுற்றித் திரிந்தாள்.  வழக்கம்போல் விமான நிலையத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.  சாதாரணமாகவே அசுன்ஸியோன் விமான நிலையத்தில் யார் வேண்டுமானாலும் போகலாம், வரலாம்; தேன் நிலவுத் தம்பதிகளை யார் தொந்தரவு செய்யப் போகிறார்கள்?  ஆர்மாந்தோ ஒரு … Read more

த அவ்ட்ஸைடர் : 22

இன்றும் வினித்திடம் பேசினேன்.  அவர் ஒரு கேள்வி கேட்டார். ”உங்களைப் பற்றிய ஆவணப்படம் குறித்துதான் இந்த அவ்ட்ஸைடர் தொடரை எழுத ஆரம்பித்தீர்கள்.  இப்போது சீலேயிலிருந்து கிளம்பி அர்ஜெண்டினா, கொலம்பியா, பராகுவாய், நிகாராகுவா என்று எங்கெங்கோ சுற்றுகிறீர்களே, படம் பார்ப்பவர்கள் இது பற்றியெல்லாம் படத்தில் வரும் என்று எதிர்பார்க்க மாட்டார்களா?  சீலே போவதற்கே பணம் தட்டுப்பாடாக இருக்கிறதே?  இங்கெல்லாம் எப்படிப் போவீர்கள், அதுவும் ரெண்டு பேர்?” சீலேயுடன் படத்தை முடித்து விட்டு, இறுதியில் ஒரு அறிவிப்பைப் போட்டு விட … Read more

கனவு வைன் யோகா (மூன்றாம் அத்தியாயம்) Revised

(சற்று முன்னர் பதிவேற்றம் செய்த கதையில் நிறைய பிழைகள் இருந்ததால் பிழை திருத்தம் செய்து, கதையிலும் சில நகாசு வேலைகள் செய்து இப்போது திரும்பவும் ஏற்றியிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.) பரோலில் வெளியே வரும் கைதி திரும்பச் செல்வதற்குத் தாமதமாகி விட்டால் காவல் துறை என்ன செய்யும்?  அந்த சூழலைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  நான் இந்த பூலோகத்தில் எங்கே போயிருந்தாலும் பத்தினி ஃபோன் செய்யும் போது எடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் ஃபோனிலேயே பெரும் ரகளை … Read more

தூக்கப் பஞ்சாயத்து

இந்தத் தூக்கப் பஞ்சாயத்து இன்னும் ஓயாது போலிருக்கிறது.  இதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு ஆலோசனை.  எழுத்தாளர்களின் பேச்சைக் கேட்டோ, அவர்களின் வாழ்க்கையைப் பார்த்தோ உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.   ஏனென்றால், எழுத்தாளர்கள் அதிமனிதர்கள்.  அவர்கள் செய்வதைப் பார்த்து நீங்களும் செய்தால் அது உங்களைப் படுகுழியில்தான் தள்ளும். உதாரணமாக, சாரு வைன் அருந்துகிறார் என்று நீங்களும் அருந்தினால் நீங்கள் காலி.  நான் அஞ்சு வருடம் குடிக்காமல் இருப்பேன்.  வேறு யாராலும் முடியாது. ஆகவே, எழுத்தாளர்கள் எழுதி வைத்துள்ளவற்றைப் படியுங்கள்.  … Read more