மனுஷ்ய புத்திரன் புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

வைரமுத்துவையும் வைத்துக் கொண்டு சிறப்புரை சாரு நிவேதிதா என்று போட ஹமீதுக்கு எத்தனை தைரியமும் என் மீது நம்பிக்கையும் இருக்க வேண்டும்? வைரமுத்துவிடம் தமிழ் விளையாடும். எனக்குப் பேச வராது. ஆனால் ஒன்று உறுதி. என் மனதிலிருந்து பேசுவேன். வந்து விடுங்கள்.

கலையும் மீறலும்: உரையாடல்: அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் எட்டாம் தேதி ஞாயிறு காலை பத்திலிருந்து பதினோரு மணி வரை வாசகர்களுடன் உரையாடுகிறேன். எல்லோரும் திரளாக வரும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒருங்கிணைப்பாளர் நெல்சன் சேவியர். இங்கே பாரதீய வித்யா பவனில் ஆராவமுதாச்சாரியாரின் திருப்பாவை உபந்நியாசம் நிகழ்ந்த போது இரண்டு வார காலம் தினமும் காலை ஏழு மணிக்கு நூறு பேர் வந்தார்கள். இலக்கியத்தில் அல்ல, ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள். ஆண்டாளிடம் பக்தி கொண்டவர்கள். அப்படி ஒரு நூறு பேராவது வந்தால் மகிழ்ச்சி … Read more

DJ சாரு நிவேதிதா

உங்களுக்கு DJ என்றால் என்னவென்று தெரியுமா? தெரியாது என்றால் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மேலே ஒரு வார்த்தை கூட படிக்க வேண்டாம். நீங்கள் மார்க்கேஸ், போர்ஹேஸ் போன்றவர்களைப் படிப்பதோடு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கலாம். டீஜே என்றால் தெரியும் என்றால் மேலே படியுங்கள். டீஜேக்களை பப்பில், டான்ஸ் பார்களில் பார்க்கலாம். குறுந்தாடி வைத்துக் கொண்டு அவ்வப்போது குட்டியூண்டு கிளாஸ்களில் டக்கீலா மாதிரி சரக்கு அடித்துக் கொண்டு, அல்லது பியர் கிளாஸ்களோடு ஏதோ ஒரு எந்திரத்தில் மேலும் கீழும் எதையோ … Read more

ஒன்றே ஒன்று கிடைத்தது…

சீனியோடு இருக்கும் ஒரே ஒரு புகைப்படம் – இயல்பாக எடுக்கப்பட்டது – அது என்னுடைய இயல்பான சிரிப்பு, சீஸ் அல்ல – பின்னால் நிற்பது கன்னடத்துப் பைங்கிளி ஸ்ரீ. மற்றும் சில தாய்லாந்து புகைப்படங்கள் சீனியோடு உள்ளது. அதெல்லாம் ஒளி எடுத்தது என்பதால் இங்கே வெளியிடவில்லை. ஒளிக்கு இயற்கைக் காட்சிகள்தான் பிரமாதமாக வரும். மனிதர்களிடம் அவருக்கு வித்தை வராது. மற்றபடி த அவ்ட்ஸைடர் படத்தில் ஒளிப்பதிவில் கலக்கி இருக்கிறார். ஸ்டில் ஃபோட்டாக்ரஃபி வேறு, சினிமாட்டாக்ராஃபி வேறு துறை … Read more

சௌந்தரும் நானும்…

என் வாழ்வில் அராத்து அளவுக்கு என்னைப் பாதித்த மனிதர்கள் யாரும் இல்லை. ஒரே காரணம்தான், நான் எப்படி வாழ நினைக்கிறேனோ அப்படி வாழ்கிறார் அவர். இந்த உலகில் சுதந்திரம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இருப்பவர்கள் நான் பார்த்த வரை அவந்திகாவும் அராத்துவும்தான். ஆனால் தான் சுதந்திரமாக இருப்பது அவந்திகாவுக்குத் தெரியாது. அராத்துவுக்குத் தெரியும். அராத்துவுக்கு அடுத்தபடியாக என்னைப் பாதித்த மனிதர் சௌந்தர் ராஜன் என்ற பெயரைக் கொண்ட யோகா குரு சௌந்தர். சௌந்தரை விட மூத்தவரான ஜெயமோகனே … Read more

ஃபிலிஸ்டைன் சமூகத்தின் குறியீடு: விகடன்

உத்தேசமாக 1975ஆக இருக்கலாம்.   கொஞ்சம் முன்னே பின்னே பார்த்துக் கொள்ளுங்கள்.  அப்போது எங்களுக்கெல்லாம் ஆதவன் ஒரு பெரிய நாயகன்.  தில்லியில் நேஷனல் புக் ட்ரஸ்டில் வேலையில் இருந்தார்.  அவ்வப்போது அவர் கதைகள் விகடனில் வரும்.  நான் ஆதவன் வெறியன்.  ஒருநாள் விகடனில் ஆதவன் ஒரு பிக்பாக்கெட் என்பது மாதிரி கட்டம் கட்டிய ஒரு பெட்டிச் செய்தி வந்தது.  அவர் தீபத்தில் எழுதிய கதையை விகடனுக்கும் கொடுத்து பணம் வாங்கி விட்டாராம்.  அதிலும் விகடன் அலுவலகத்துக்கு நேரிலேயே வந்து … Read more