விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 3 : ஸோர்பா த இண்டியன்

அனுவின் வயது 22. இப்போதுதான் சட்டப்படிப்பு முடித்திருக்கிறார்.  மாடலிங் செய்கிறார்.  எதற்கு இத்தனை முஸ்தீபு என்றால் வெள்ளிக்கிழமை இரவு (டிசம்பர் 16) என்னைச் சந்திப்பதற்காகவே தன் தமையன் சேகரனோடு வட சித்தூர் வந்து நள்ளிரவு இரண்டு மணி வரை பண்ணை வீட்டில் நடந்த ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத் தொடக்க விழா மற்றும் அராத்துவின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.  அன்றைய தினம் நான் களைப்பாக இருந்தேன்.  அருஞ்சொல் பேட்டியில் மும்முரமாக இருந்ததால் நான் ஒரு வாரமாக … Read more

த அவ்ட்ஸைடர் – 31

பப்பு லாப்ரடார் இனம்.  ஸோரோ க்ரேட் டேன்.  இரண்டு நாய்களும் அவைகளின் வாழ்க்கையில் அதிகமாக நேசித்தது என்னைத்தான்.  அப்புறம்தான் மற்றவர்கள்.   குணாதிசயங்களில் இரண்டும் இரண்டு வகை.  ஸோரோவுக்கு சூடு சுரணை எதுவும் கிடையாது, என்னைப் போலவே.  பப்புவுக்கு அது ஜாஸ்தி.  பப்புவை நான் ஏதாவது கடுமையாகத் திட்டி விட்டால் ஒரு நாள் முழுதும் சாப்பிடாது.  நான் நூறு முறை மன்னிப்புக் கேட்டாலும் சாப்பிடாது.  ஆண் நாயாக இருந்தாலும் பெண்கள் மாதிரி அடம்.  நாம் உயிரையே வைத்திருக்கும் இவனா … Read more

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 3 Miserere mei, Deus!

1770ஆம் ஆண்டு சிறுவன் மொட்ஸார்ட் தன் தந்தையுடன் ரோமில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்துக்கு ஒரு ஈஸ்டர் தினத்தன்று செல்கிறான்.  அப்போது அவன் வயது பதினான்கு.  அந்தக் காலத்தில் பாதிரிகள் மத்தியில் பிரபலமாக இருந்த ஒரு துதிப்பாடல் Miserere mei, Deus!  (என் மீது கருணை கொள்ளுங்கள், கடவுளே!) ஆனால் அந்தப் பாடலை செயிண்ட் பீட்டர் தேவாலயத்தைத் தவிர வேறு எங்கும் இசைப்பதில்லை.  அந்தப் பாடலை இயற்றியவர் க்ரிகேரியோ அலெக்ரி (Gregario Allegri:1582 – 1652).  அதைக் … Read more

த அவ்ட்ஸைடர் – 30

செல்வேந்திரனிடம் சொல்லியிருந்தேன், அவ்ட்ஸைடர் படத்தின் படத்தொகுப்பாளரையும் கலரிஸ்டாகவும் மற்றபடி படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த கணேஷ் அன்புவையும் மேடைக்கு அழைத்து சிறப்பு செய்ய வேண்டும் என்று.  அதிலும் இசையமைப்பாளர் சத்ய நாராயணனை மறந்து விட்டேன்.  இன்னொரு முக்கியஸ்தரையும் மறந்து போனேன்.  ஒளிப்பதிவாளர் ஒளி முருகவேள்.  ஒளியிடம் எனக்குப் பிடித்தது கொஞ்சம் கூட ஆணவமோ அகங்காரமோ இல்லாதது.  அவரை மேடைக்கு அழைக்கவில்லை.  நேற்று அவரைத் தொலைபேசியில் அழைத்து அது பற்றி என் வருத்தத்தைத் தெரிவித்த போது அவர் … Read more

the outsider – ஒரு கடிதம்

சாருவைப் பற்றிய ஒரு அட்டகாசமான Documentary, ” THE OUTSIDER ” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது…மிக நேர்த்தியாக வித்தியாசமாக இந்த ஆவணப்படத்தை அன்பு நண்பர் அராத்து இயக்கியுள்ளார். நேற்று அப்படத்தை சுமார் 500 பேர் மெய்மறந்து ரசித்துப் பார்த்ததை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றேன்..படம் முடிந்த பிறகும் கைதட்டல் அடங்க சிறிது நேரமானது… சாருவின் சிறுவயது நாகூர் வாழ்க்கை, தஞ்சாவூர் கல்லூரிக் காலம், அவருடைய தபால்துறை பணி, தாய்லாந்து தீவுப் பயணங்கள், சீலே சார்ந்த கலாச்சாரக் காட்சிகள், … Read more