சாரு பற்றி லட்சுமி சரவணகுமார்

இதற்கு முன் வந்த விஷ்ணுபுரம் விழா அழைப்பிதழைப் பார்த்திருப்பீர்கள். அதில் உள்ள என் புகைப்படம் பித்துக்குளி முருகதாஸ் மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றியது. தோன்றியவுடனேயே நண்பர்கள் சிலரும் அதேபோல் அபிப்பிராயப்பட்டு எனக்குத் தெரிவித்தார்கள். அந்தப் புகைப்படத்தை அனுப்பியவனே நான்தான் என்பதால் கமுக்கமாக இருந்து விட்டேன். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. கடைசியில் பார்த்தால் விழாக் குழுவினரே அழைப்பிதழை மாற்றி விட்டார்கள். இப்போதைய அழைப்பிதழ் பிரமாதமாக வந்துள்ளது. எனவே இதையே அழைப்பாகக் கொண்டு விழாவுக்கு வந்து விடுங்கள். முக்கியமாக இரண்டு … Read more

சாருவும் விருதும்…

சுமந்தலைதல் என்பது வேறு.. எடுத்துக் கொள்வது என்பது வேறு.விரும்பியவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஏற்றுக்கொண்டதற்கு காரணங்களை கற்பித்துக் கொண்டே ஒரு சித்தாந்தத்திற்குள் பிடிபட்டு, செக்கு மாடு போல அது சார்ந்தே சிந்திப்பதிலும், செயல்படுவதில் இருந்தும், ஒரு வாசகன் வெளிவர வேண்டுமானால், தமிழில் சாருவின் படைப்புகளை வாசிப்பதால் சாத்தியப்படும். நாற்பதாண்டு காலமாக தமிழில் வாசித்து வரும் எனக்கு, சாருவின் எழுத்துகள் அறிமுகமான போது தான், தொடர் வாசிப்பு மற்றும் பன்முக சிந்தனை குறித்த ஒரு தெளிவான பார்வை கிடைக்கத் தொடங்கியது. … Read more

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்

1978இலிருந்து 1988 வரை நான் தில்லியில் இருந்த காலகட்டத்தை என் வாழ்வின் பொற்காலம் என்று சொல்ல்லாம்.  அச்சமயத்தில் திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரியிலிருந்து எம்.டி. முத்துக்குமாரசாமி என்ற முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைக்கு ஒரு கதை கேட்டு  எனக்குக் கடிதம் எழுதினார். கல்லூரி மாணவர்களே நடத்திய பத்திரிகை அது.  எம்.டி.எம். என்று அழைக்கப்பட்ட அவர் அந்த மாணவர் இதழிலேயே ஸில்வியா என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதினார். மிஷல் ஃபூக்கோ, ஜாக் தெரிதா போன்ற … Read more

விஷ்ணுபுரம் விழா அழைப்பிதழ்

டிசம்பர் 18 அன்று மதியம் இரண்டிலிருந்து மூன்றரை வரை நான் கலந்து கொள்ளும் கலந்துரையாடலும் உண்டு. அந்த அமர்வின் ஒருங்கிணைப்பாளர்: ஜெயமோகன்

இந்தியத் தத்துவம் குறித்த ஒரு நூல்: ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங்

என் நண்பர்கள் யாரேனும் பதிப்பகம் ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னாலோ, கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறேன் என்று சொன்னாலோ ரொம்ப வருத்தப்படுவேன். முன்னது, எல்லோரிடமிருந்தும் கல்லடி பட வேண்டும். முக்கியமாக, எழுத்தாளர்களிடமிருந்து. பணமும் கிடைக்காமல் மாடு மாதிரி உழைக்க வேண்டும். கெத்து மட்டும் இருக்கும். எனக்கு இந்த காரியத்துக்கு ஆகாத கெத்து பிடிக்காது. திருமணம் ஒரே ஒருத்தரிடமிருந்து கல்லடி சொல்லடி செருப்படி எல்லாம் பட வேண்டும். ஆணோ பெண்ணோ ஒருத்தரின் கையில்தான் சவுக்கு இருப்பதை இதுவரை பார்த்திருக்கிறேன். சமமாக … Read more

துறவு

டியர் சாரு, Rishi here.  பூச்சி அத்தியாயங்களை உங்களுக்கு அனுப்பி விட்டு படிக்க ஆரம்பித்தேன். நிறைய அத்தியாயங்களை நான் படிக்காமல் தவறவிட்டு விட்டது தெரிய வந்தது. பூச்சி 80ல் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சூபியான மன்ஸூர் அல்ஹலாஜ் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.  அவர் இந்தியத் தத்துவமும் சூஃபி தத்துவமும் ஒன்று என உணர்ந்தார் என்று வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த சிவவாக்கியர் பாடலும் வருகிறது. நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து … Read more