இரண்டு புகைப்படங்கள்

ஹிந்து மதம் என்ற தலைப்பிட்ட சென்ற குறிப்போடு தொடர்புடைய இரண்டு புகைப்படங்கள். இரண்டுமே மனோகரன் மாசாணம் எடுத்தவை. இடம்: பாங்காக்கில் உள்ள சொர்ண புத்தர் ஆலயம்.

நிறமேறும் வண்ணங்கள் (சிறுகதை) : அராத்து

புக்கட் பங்களா தெருவில் இருக்கும் ஒரு அமெரிக்கன் பப்பில் இருந்து அவர்கள் வெளிவந்தார்கள். குதூகலமாக ஆடிக்கொண்டே வெளியே வரும் அவர் ஒரு எழுத்தாளர். அந்த வண்ணமயமான இடத்துக்கு சற்றும் பொருத்தமில்லாமல் சட்டைப்பாக்கெட்டில் கருநீல வண்ணத்தில் பாஸ்போர்ட் தலை நீட்டிக்கொண்டு இருந்தது. கதை அவரின் பாக்கெட்டில் நுழைந்து அவரின் பாஸ்போர்ட் பக்கத்தை இரண்டு புரட்டு புரட்டியது.  பாஸ்போர்ட்டினுள் இருக்கும் தகவல் மூலம் அவருக்கு வயது 70 . பெயர் ஊர் எல்லாம் பார்த்தால் கதை டிரான்ஸில் (trance) மாட்டிக்கொள்ளும் … Read more

the outsider (13)

உலகின் கலாச்சார கேந்திரம் சீலே என்றால் சீலேயின் கலாச்சார கேந்திரம் கான்ஸெப்ஸியோன் என்று சொல்லலாம்.  சீலேயின் கல்லூரி நகரம் என்று அழைக்கப்படும் கான்ஸெப்ஸியோனில்தான் அதிக அளவில் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இருக்கின்றன.  அங்கேதான் சீலேயிலேயே தீவிரமான கலை இலக்கியச் செயல்பாடுகளும் அதிக அளவிலான நாடக அரங்குகளும் இருக்கின்றன.  அதன் காரணமாகவே சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களிலும் கான்ஸெப்ஸியோன் முன்னணியில் இருந்தது.  அதனால் கான்ஸெப்ஸியோனை போராட்டங்களின் கேந்திரம் என்றே அழைத்தனர்.  1932இலிருந்து 1973இல் பினோசெத்தின் ராணுவ ஆட்சி தொடங்கும் வரை … Read more

the outsider (12)

அக்டோபர் 10ஆம் தேதி த அவ்ட்ஸைடர் 11 வந்துள்ளது.  தொடர்ச்சி வேண்டுவோர் அதைப் படித்து விட்டு இங்கே வரலாம்.  (ஸ்பானிஷை தென்னமெரிக்காவின் ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு மாதிரி உச்சரிக்கிறார்கள், பேசுகிறார்கள்.  சீலேயிலேயே தெற்கு சீலேயர்கள் பேசுவது ஸ்பானிஷே இல்லை என்று வட சீலேயர்கள் கிண்டலடிக்கிறார்கள்.  மெக்ஸிகோவின் ஸ்பானிஷ் எதையோ மென்று மென்று துப்புவது போல் உள்ளது.  மெக்ஸிகோ என்று சொல்லாதே, மெஹீகோ என்று சொல் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.  ஸ்பானிஷின் தாய் தேசமான ஸ்பெயினில் பேசப்படும் ஸ்பானிஷ் தென்னமெரிக்க … Read more