என்ன படிக்கிறேன், ஏன்? சி.சு. செல்லப்பா

சென்ற ‘இலக்கிய வட்டம்’ அரங்கில் எதுக்காக நான் எழுதுகிறேன் என்பதற்கு என்னால் திருப்தியாக விளக்கம் தரமுடியவில்லை என்று கூறி முடித்தேன். ஏனென்றால் எழுதவைக்க, தூண்டும் சக்தி அல்லது சக்திகள் எவை என்று திட்டமாக வகுத்துக்காட்ட முடியாது. எழுதுகிற ஒவ்வொருவரும் ஒரு சக்தியை குறிப்பிட்டாலும் பல சக்திகளைச்  சுட்டிச் சொன்னாலும் இத்தனையோடும், கூட ஏதோ ஒன்று (Plus One) இருக்கிறது என்பதுதான் படுகிறது எனக்கு. இந்த எதோ ஒன்று என்பது படைப்பாளியின் பரவச நிலையிலே எழுவது. இந்தப் பரவச நிலை ஒருவனுக்கு ஏற்படாது போனால் அவன் படைப்பாளி ஆகமுடியாது. அருள் என்ற வார்த்தையைக்கூட … Read more

நான்தான் ஔரங்ஸேப்: புரவி இலக்கிய கூடுகை

வரும் பதினாறாம் தேதி ஓசூரில் நான்தான் ஔரங்ஸேப் நாவல் பற்றிய மதிப்புரை சந்திப்பு நிகழ உள்ளது. அந்தத் தேதியில் நான் தாய்லாந்தில் இருப்பேன். அதனால் கலந்து கொள்ள இயலாது. முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள். விலாசம் அழைப்பிதழில் உள்ளது.

எனது நூலகம்

தியாகராஜா நாவலை விட்ட இடத்திலிருந்து எழுத ஆரம்பித்து விட்டேன். இனி ஒரு வருட காலத்துக்கு அந்த உலகில்தான் இருக்க முடியும். என் நண்பர்கள் சிலர் தங்கள் நாவலை எழுத பத்துப் பதினைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக கூறினார்கள். எனக்கு அந்த லக்‌ஷுரி இல்லை. வயது 70. எனவே ஒரு ஆண்டில் முடித்தாக வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன். இடையில் கட்டுரைகளில் காலம் கடத்தக் கூடாது. எழுதிக் கொண்டிருக்கும்போது ஏதோ புத்தகத்தை எடுக்கத் திரும்பினேன். அப்போது கண்ட காட்சியைப் … Read more

போல் தோ நா ஸரா (நடனம்)

ஆர்.ஆர். சபா என்று அழைக்கப்படும் ரசிக ரஞ்சனி சபாவில் இன்று மாலை ஐந்தரை மணிக்கு நான் கலந்து கொள்ளும் நடன விழா பற்றி எழுதியிருந்தேன். நடனம் தொடர்பான என்னுடைய ஒரு சிறிய குறிப்பு பின்வருவது. ஆறு ஆண்டுகளுக்கு முன் எழுதியது. போல் தோ நா ஸரா… – Charu Nivedita

ஸேவியன் க்ளாவர்

சாரு, நீங்கள் நடனம் பற்றி எழுதியதும் எனக்கு ஸேவியன் க்ளாவர் பற்றி ஞாபகம் வந்தது. உங்களுக்குப் பிடித்த கென்னி ஜியோடு இணைந்து அவர் உருவாக்கிய நடனத்தின் காணொலியை உங்களுக்கு அனுப்புகிறேன். ஏற்கனவே பார்த்திருந்தால் என்னைத் திட்ட வேண்டாம், ப்ளீஸ். ஸ்ரீ

செப் 29 மாலை: நாட்டிய நிகழ்ச்சியில் அடியேன்

நாளை – செப்டம்பர் 29 – மாலை ஐந்தரை மணிக்கு மைலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் நடக்க இருக்கும் நாட்டிய நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறேன். (30, சுந்தரேஷ்வரர் தெரு, மைலாப்பூர்) பொதுவாக கலை நிகழ்ச்சிகளின் போது பார்வையாளர் அனைவரும் நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறது என்றுதான் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அதற்கு முன்னால் பேசுபவர்களை நிகழ்ச்சிக்கு இடையூறாகவே நினைப்பார்கள். எனவே எனக்குக் கிடைக்கும் ஐந்து பத்து நிமிடங்களில் என்னுடைய ஆகச் சிறந்த ஒரு பேச்சை வழங்குவேன். ஏனென்றால், … Read more