அ-காலம் தொடர் பற்றி…

இன்று அ-காலம் தொடர் பற்றி ப்ரியதர்ஷினி செல்வராஜ் எழுதிய எதிர்வினையைப் படித்தேன். இதை உங்களோடும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. பிஞ்ஜ் டாட் இன்னில் வரும் அந்தத் தொடரை வாசித்துப் பாருங்கள்…

எக்ஸைல் : மூன்றாம் பதிப்பு : விரைவில்

உலகில் வெகு அரிதாக எழுதப்படும் ஆட்டோஃபிக்‌ஷன் வகையில் எழுதப்பட்ட நாவல் எக்ஸைல் மூன்றாம் பதிப்பு விரைவில் வெளிவர உள்ளது. அட்டை ஓவியம் : Rohini

மாயமான் வேட்டை: எதிர்வினைகள்/ பதிவுகள்

சாரு சமீபமாக எழுதும் குறுங்கதைகள் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவரின் புனைவுக்கும் அ-புனைவுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதுதான் விமர்சிக்கப்படும் புள்ளி. எனக்கு அது விமர்சனமாக தெரியவில்லை. தன்னையே புனைவாக்குவது என்பது சுயபலிக்கு சமமாகும். தன்னை புனைதல் வழியாக தனக்கான வழியை வகுத்துக்கொள்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும். நம்புவீர்களோ இல்லையோ… நேற்று சாருவின் ராஸலீலா நினைவுக்கு வந்தது. அதோடு தன் பயண அனுபவங்களை கதைகளில் சேர்த்துவிடுவேன் என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. தென்னமெரிக்க பயணங்களை சாரு … Read more

5. ஒரு சீரியஸ் இலக்கியக் கதை போல் தோற்றமளிக்கும் செக்ஸ் கதை (கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)

அந்தத் தீவின் பெயர் யாவ் நாய் (Yao Noi).  பாங்காக்கிலிருந்து தெற்கே 660 கி.மீ. தூரம் சென்றால் அந்தமான் கடலில் உள்ள ஒரு குட்டியூண்டு தீவு.  இதற்கு மேல் தீவு பற்றிய விவரம் வேண்டாம். கொடுத்தால் இது பயணக் கட்டுரை ஆகி விடும்.  ஆனால் இதுவோ குட்டிக் கதை. (இரட்டை அர்த்தத்திலும் படித்துக் கொள்ளலாம்.)  ஒரு இலக்கியக் கருத்தரங்குக்காக சிங்கப்பூர் செல்ல இருந்தது எனக்கு.  அப்படியே ஒரு எட்டு வேறு ஏதாவது ஊருக்கும் போய் வரலாம், நீயும் … Read more

வந்து விட்டது முகமூடிகளின் பள்ளத்தாக்கு

இன்று மாலை (25-2-2021) நான்கு மணியிலிருந்து சென்னை புத்தக விழா ஸீரோ டிகிரி பதிப்பக அரங்கு 10 – 11 இல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவல் கிடைக்கும். இப்போதே தேவையானால் அண்ணா நகரில் உள்ள ஸீரோ டிகிரி பதிப்பக அலுவலகத்தில் கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். புத்தக விழா முடிவதற்குள் 3000 பிரதிகள் விற்க வேண்டியது உங்கள் கையில். நன்றி.