ஜென்மா

ஒரு இந்தியத் தாய். அவளுக்கு ஒரு மகன்.  மகனுக்கு ஒரு வயது ஆவதற்குள் கணவன் இறந்து விட்டான்.  வேறு எந்த ஆதரவும் இல்லாமல் மகனைத் தன் ரத்தத்தை வியர்வையாக்கிப் படிக்க வைத்தாள்.   மகன் பெரிய வேலைக்குப் போனான்.  கை நிறைய சம்பாதித்தான்.  அறுபது வயது ஆன அந்தத் தாய்க்கு ஏதோ பென்ஷன் கிடைக்கிறது.  மகன் எதுவும் பணம் அனுப்புவதில்லை.  அவனுக்கு ஏகப்பட்ட கடமைகள்.  அவனுடைய திருமணக் கடன் அடைக்க வேண்டும்.  வீடு வாங்கிய கடனை அடைக்க வேண்டும்.  … Read more

Flap

அதற்கு flap என்றுதான் பெயரா அல்லது வேறு பெயரா என்று எனக்குத் தெரியாது.  தெரிந்தவர்கள் என்னைத் திருத்தலாம்.  ஆனால் ஏதோ கொலைக் குற்றம் செய்து விட்டது போல் இது கூடத் தெரியாத நீயெல்லாம் ஒரு எழுத்தாளனா என்று அஞ்சல் போடாதீர்கள்.  ஃப்ளாப் என்ற வார்த்தையையே இன்றுதான் முதல்முதலாகக் கேள்விப்படுகிறேன்.  அதுவும் அருணாசலம் சொன்னதால். சற்று நேரத்துக்கு முன்புதான் அவர் ஒரு மெஸேஜ் அனுப்பினார்.  ”சென்னை வந்திருக்கிறேன்; இப்போது உங்களை ஃபோனில் அழைக்கலாமா? மதிய உணவுக்குச் சந்திக்கலாமா?”  இப்போது … Read more

புரியாத விஷயம்…

கோவையில் நடக்கும் கண்ணதாசன் விருது வழங்கும் விழாவுக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.  15, 16, 17 ஆகிய மூன்று தினங்களும் கோவையில் விஜய் பார்க் இன் ஓட்டலில்தான் தங்கியிருப்பேன்.  அதற்கு முன்னால் ஒருசில வார்த்தைகள். சமீபத்தில் நண்பர்களுடன் சவேரா மூங்கில பாருக்குப் போயிருந்தேன்.  முன்பெல்லாம் அது என் வாசஸ்தலங்களில் ஒன்று.  மதியம் போனால் இரவு பதினோரு மணிக்குத்தான் கிளம்புவேன்.  இப்போது மதுவை நிறுத்திய பிறகு அந்த பாருக்கு பத்தடி முன்னால் உள்ள மால்குடி உணவகத்தோடு நிறுத்திக் கொள்வது.  … Read more

கண்ணதாசன் விருது

கோவை கண்ணதாசன் கழகத்தின் கண்ணதாசன் விருது அடியேனுக்கும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கும் வழங்கப்பட உள்ள செய்தியை முன்பே உங்களிடம் பகிர்ந்திருந்தேன். விழா வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவையில் மாலை ஆறேகால் மணிக்கு நடைபெறும். அழைப்பிதழை இங்கே இணைத்திருக்கிறேன். அனைவரையும் விழாவில் கலந்து கொள்ள அழைக்கிறேன். விழா நடக்கும் இடம்: சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, கோவை

பப்புவின் மறைவு…

நேற்று இரவு முகநூலில் எழுதிய குறிப்பு இது: 12 ஆண்டுகளாக என்னோடும் அவந்திகாவோடும் வாழ்ந்த பப்பு இன்று உயிர் நீத்தது. என்னை அதன் மரணத் துயரத்திலிருந்து காப்பாற்றுவதற்காக மூன்று மாதமாக உயிருக்குப் போராடி எங்கள் இருவருக்கும் பயிற்சி அளித்தது. அப்படியில்லாமல் ஸோரோ திடீரென்று ஒருநாள் இறந்து போனதால் மூன்று மாதம் நான் பைத்தியமாக வாழ்ந்தேன். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போனேன் என்பது கூட பிரச்சினை இல்லை. மூளை கலங்கிப் போனதுதான் கொடூரமாக இருந்தது. பைத்திய நிலை … Read more

தண்ணீர்

கடந்த முப்பது ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன்.  சென்னையில் வசிக்கிறேன் என்று பேர்தானே தவிர ஒவ்வொரு ஊருக்கும் உரிய ஏராளமான குணாம்சங்களோடு சென்னையை நான் அறிந்தவன் அல்ல.  சென்னையை விட எனக்கு தில்லி நன்றாகத் தெரியும்.  தில்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கும் எனக்கு அத்துப்படி.  அதற்குக் காரணம், தில்லியின் நான்கு மூலைகளிலும் நான் வசித்திருக்கிறேன்.  கிழக்கு மூலையான கல்யாண்வாஸ், கல்யாண்புரி, திர்லோக்புரியின் (ஞாபகம் இருக்கிறதா?) எதிரே உள்ள மயூர் விஹார், மேற்கு மூலையான பொஸங்கிப்பூர், ஜனக்புரி, தெற்குப் பகுதியான … Read more