எதை எழுத வேண்டும்?

இஸ்லாமிய வெறுப்பைத் தவிர அநேகமாக மற்ற எல்லா விஷயங்களிலும் மிஷல் வெல்பெக்குக்கும் (Michel Houllebecq) எனக்கும் ஒத்த தன்மைகளைப் பார்க்கலாம்.  அதில் ஒன்று செக்ஸ்.  இன்னமும் அவரை செக்ஸ் எழுத்தாளர் என்றே பெரும்பாலோர் அழைக்கின்றனர்.  அவரும் அதை ஒத்துக் கொள்ளவே செய்கிறார்.  ஐரோப்பாவில் ஒரு எழுத்தாளர் செக்ஸை எழுதுவதைத் தவிர்க்கவே முடியாது என்கிறார்.  இங்கே (ஐரோப்பாவில்) சிலருக்கு செக்ஸ் தினமும் கிடைக்கிறது.  ஆனால் பலருக்கோ அவர்கள் வாழ்நாளிலேயே ஐந்தாறு தடவைகள்தான் கிடைக்கிறது.  சிலருக்கு வாழ்வில் ஒருமுறை கூட … Read more

வரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…

திரைப்படங்களுக்கு வசனம் எழுதி சம்பாதிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  முதல் பிரச்சினை ஜால்ரா அடிக்க வேண்டும்.  என் நண்பர் ஒருவர் ஒரு படத்துக்கு வசனம் எழுதினார்.  முழுசாக அல்ல.  வசனத்தில் உதவி.  ஆனால் டைட்டிலில் பெயர் வந்தது.  அதுதான் பெரிய விஷயம்.  அவர் ஒரு படத்துக்கு முகநூலில் விமர்சனம் எழுதினார்.  அந்தப் படத்தின் இயக்குனர் இவர் வசன உதவி செய்த படத்தின் இயக்குனரின் நண்பர்.  உடனே இவருடைய இயக்குனர் அந்த விமர்சனத்தை நீக்கச் … Read more

சீலே – 2 To Bury Our Fathers…

ஹோர்ஹே பார்ரோஸ் தொர்ரியல்பா (Jorge Barros Torrealba) சந்த்தியாகோவிலுள்ள ஒரு புத்தக வெளியீட்டாளர். செப்டம்பர் 11, 1973லிருந்து 1988 வரையிலான பதினைந்து ஆண்டுகளில் பத்துக்கு ஒருவர் வீதம் சீலேயை விட்டு வெளியேறினார்கள். அதிபர் சால்வதோர் அயெந்தேயின் ஆட்சியில் பார்ரோஸ் அரசாங்கப் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். பிறகு அயெந்தே கொல்லப்பட்ட பிறகு இவரும் மற்றவர்களைப் போலவே நாட்டை விட்டு வெளியேறினார். 1976இலிருந்து 1980 வரை வெனிஸுவலாவில் இருந்தார். 1978 இல் சீலேயில் அடக்குமுறை அதன் உச்சகட்டத்தை எட்டியது. … Read more

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ் பெண்களை மையப்படுத்திய படம்.  ஆரண்ய காண்டத்தின் ஆரம்பக் காட்சிக்கும் சூப்பர் டீலக்ஸின் ஆரம்பக் காட்சிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. படுக்கையில் பெண்ணிடம் ஆண் தோல்வியுற்று அவளைச் சித்திரவதை செய்வது ஆரண்ய காண்டத்தில்.  சூப்பர் டீலக்ஸில் அதன் நாய (சமந்தா) தன் கணவன் (ஃபஹத் ஃபாஸில்) வெளியே சென்றிருக்கும் இரண்டு மணி நேரத்தில், தான் கல்லூரியில் காதலித்தவனை வீட்டுக்கு வரவழைத்து உறவு கொள்கிறாள்.  அந்த உறவில் அவன் தோல்வியுறுகிறான். என்னடா ஆச்சு என்கிறாள்.  டென்ஷன் என்கிறான்.  … Read more

ஆர்மோனியா ஸோமர்ஸ்

பிழை திருத்தம் பிழை திருத்தம் என்று நான் உயிரை விடுவது இதற்காகத்தான்.  ஆர்மோனியா ஸோமர்ஸ் என்னுடைய மூல நூலிலேயே ஆர்மீனியா ஸோமர்ஸ் என்று இருந்ததால் அதுவே அடுத்தடுத்த பதிப்பிலும் அப்படியே வந்து விட்டது.  சமயங்களில் நாம் சரியாக எழுதியிருந்தாலும் பத்திரிகைகளிலும் பதிப்பகங்களிலும் பணிபுரியும் அன்பர்கள் திருத்தம் செய்வார்கள்.  அது என்ன ஆர்மோனியா?  தப்பு.  ஆர்மீனியா தான் சரி.  இந்தப் பிழை பற்றி பல நண்பர்கள் விரிவாகக் கடிதம் எழுதியிருந்தார்கள்.  அனைவருக்கும் நன்றி.   இந்தப் புதிய பதிப்பில் திருத்தி … Read more

லத்தீன் அமெரிக்க சினிமா – 1

லத்தீன் அமெரிக்க சினிமா என்ற புத்தகம் 1985-இல் வெளிவந்தது.  அதிலிருந்து ஒன்றிரண்டு அத்தியாயங்கள் இங்கே.  இந்தக் கட்டுரைகளை நான் 1982 வாக்கில் எழுதியதாக ஞாபகம். எல் சால்வடார் EL Salvador: Another Vietnam (1981) & EL Salvador: The Decision to win (1981)   மேற்கண்ட இரண்டு படங்களும் Tete Vasoncelles-இன் தலைமையின் கீழ் Glenn Silber என்ற அமெரிக்கரும், எல் சால்வதோரைச் சேர்ந்த Cero a la Izquierda என்பவரும் சேர்ந்து படமாக்கியவை. … Read more