விழா பதிவுகள் – 26

நிர்மல், முகநூலில்: புத்தக வெளியிட்டு விழாவில் நான் கவனித்த இன்னோரு விஷயம் கட்டித்தழுவல். மிக எளிதாகவும் இயல்பாகவும் கட்டித்தழுவிக் கொண்டோம் . ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது கட்டித்தழுவது எளிதான காரியமல்ல – மற்றவரின் உடல் மொழி புரிந்து அதற்கு ஏற்றவாறு நடக்க வேண்டியது முக்கியம். ஆனால் எல்லோரும் மிக எளிதாக கட்டித் தழுவியது ஒரு யூனிக்கான செயல் என்றே தோனுகிறது. நிர்மல் ஓவியர் ஸ்ரீனிவாசன். புகைப்படங்கள்: பிரபு காளிதாஸ்

விழா பதிவுகள் – 25

பூர்ண சந்திரன் முகநூலில்: கேசரி வடை போண்டா என இனிப்பாகவும் காரசாரமாகவும் ஆரம்பித்தது விழா. அரங்கம் நிறைந்த கூட்டம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தினையும் கொடுத்தது. இறையன்பு அவர்கள் அடுத்தடுத்த விழாக்கள் இருப்பதாக சற்று முன்னதாக வந்து வாழ்த்திவிட்டு போனார். புகைப்படங்கள்: பிரபு காளிதாஸ் சமஸ்,திருப்பூர் கிருஷ்ணன்,லெனின் சிறப்பாக பேசினர். மனுஷ், பல்கலைக்கழகங்களில் பாடநூலாக சிறந்த இலக்கிய புத்தகங்களை சேர்க்கவேண்டும் என்று குறிபிட்டதற்கு, சாரு இப்போதைக்கு நடக்காது, நீங்க கல்வி மந்திரி ஆகி இதச் செய்ய்யனும் என்றார். மேலும் சாருவின் … Read more

கோவை புத்தக வெளியீட்டு விழா பற்றி கார்ல் மார்க்ஸ்

உயிர்மையின் கோவை புத்தக வெளியீட்டு விழா: விழா மிக அருமையாக நடந்தது. குறிப்பாகச் சொல்லவேண்டியது, சரவணன் சந்திரனின் நண்பர்கள். அட்டகாசம். பலரும் வக்கீல்கள். இவ்வளவு நல்ல வக்கீல்களை நான் பார்த்ததே இல்லை. விழா முடிந்த மறுநாள் மசினக்குடிக்கு அவரது நண்பர் பிரசன்னாவின் காரில் நான், சாரு, பிரபு காளிதாஸ் ஆகியோர் சென்றோம். முதல் நாளிரவு கொண்டாட்டம், இலக்கிய விவாதம் என தூங்கும்போது 4.30 மணி. சாரு என்னை எழுப்பி கிளம்பலாம் என்று சொன்னபோது 6.30 மணி. வெறும் … Read more

இன்னும் ஒன்று…

வளன் அரசு முகநூலில் எழுதியது:   ஃபூக்கோ மற்றும் பின்நவீனத்துவம் பற்றி சாரு சொல்வது உண்மையிலும் உண்மை… என் பின்நவீனத்துவ வகுப்பின்போது என்னுடைய பேராசிரியர் என்னைப் பார்த்து வியந்துபோனார். இதை நீ எங்கே கற்றுகொண்டாய் என்று ஒவ்வொருவரும் முறையும் கேட்டார் குறிப்பாக தெரிதா பற்றிய வகுப்பில் பாடம் நடத்தும் போதே தெரிதாவின் சித்தாந்தங்களை விவரித்து அவரை மூக்கில் விரல் வைக்க செய்தேன். எல்லாவற்றிற்கும் காரணம் சாருதான். நம் காலத்தில் இப்படி ஒருவருடன் வாழ்வது நம் பெருமை. அவரைக் … Read more

ஓர் எதிர்வினை

ஜெர்மன் செந்தில் என்று ஒரு நண்பரைப் பற்றி ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோணல் பக்கங்களில் அதிகம் எழுதியிருப்பேன்.  அவர் ஒரு வாட்ஸப் மெஸேஜ் அனுப்பியிருந்தார். ”20 ஆண்டுகளுக்கு முன்னர் சாதுக்களோடு பேசிக் கொண்டு இருந்த போது எனக்கு ஒரு மகான் சொன்னது: ஆழமான வாசிப்பு மனதை அமைதிப்படுத்தும்.  அன்பை வெளிப்படுத்தும்.  தன்னைப் பண்டிதன் என நிறுவாது.  அதிலிருந்து விலகியே செல்லும். ஒரு இரவில் நிறைய சொன்னார்.  இப்போது உங்கள் கட்டுரையில் அதே குரல். ஒரு ப்ராணிக் மாணவனாக … Read more