பாரினிலே நல்ல நாடு!

”நம் நாட்டைப் பற்றி ஏன் லண்டனிலிருந்து வெளிவரும் ArtReview Asia பத்திரிகையில் எப்போதும் இழிவாகவே எழுதுகிறீர்கள்? நல்லதாக எழுத எதுவுமே இல்லையா?” என்று கேட்கும் நல்லிதயங்களுக்கு இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். அந்த நல்லிதயங்களிடம் நான் தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒரு ரெண்டு நிமிடம் செலவு செய்து இந்தக் கட்டுரையைப் படியுங்கள் என்பதுதான். இந்தக் கேடுகெட்ட துப்புக் கெட்ட நாட்டைப் பற்றி நான் எப்படி நல்லதாக எழுத முடியும்? உடம்பே புழுத்து நாறிக் கொண்டிருக்கும் போது ஒருத்தரின் மயிர் … Read more

தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்

இணையத்தில் வாங்க: https://www.amazon.in/dp/9387707172 *** சாதனாவின் ’தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ என்ற இந்த சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுத அமர்ந்த போது அது அத்தனை சுலபமானது அல்ல என்று உணர்ந்தேன். ஏனென்றால், ஜார்ஜ் பத்தாயின் (Georges Bataille) மரணம் பற்றிய கட்டுரையையும், eroticism பற்றிய கட்டுரைகளையும் படிக்காமல் எழுதுவது இந்தத் தொகுதிக்கு நியாயமானதல்ல என்று தோன்றியது. தமிழில் முதல் முதலாக மரணமும் பாலியலும் இணையும் ஒரு பிரதியைப் படிக்கிறேன். சம்பத்தின் இடைவெளி மரணம் … Read more

இலக்கியமும் சினிமாவும்

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களின் முதல் படங்கள் மகத்தான வெற்றியைப் பெற்று, அதற்கடுத்த படங்கள் தோல்வி அடைவதன் காரணம் பற்றி பலமுறை யோசித்திருக்கிறேன்.  முதல் படங்களில், அந்த இயக்குனர்கள் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி அனுபவரீதியாக எடுப்பதால் அந்தக் கதையும் சொல்லும் விதமும் நிஜமாக இருக்கிறது.  ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கைதானே இருக்கிறது?  அதை முதல் படத்தில் சொல்லி விட்ட பிறகு மீண்டும் சொல்ல எதுவுமில்லாமல் வெளிநாட்டுப் படங்களைத் தழுவி எடுக்க முயற்சித்துத் தோல்வி அடைகிறார்கள்.  அப்படி … Read more

காயத்ரியின் பிறந்த நாளான இன்று…

காயத்ரியின் பிறந்த நாளான இன்று இந்தக் கட்டுரையை மீள்பிரசுரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் மிகப் பெரிய உயரத்திலிருந்து விழுந்த போது அந்த அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.  அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும்.  இந்த இரண்டும் நிகழாமல் என்னைக் காப்பாற்றியவர் காயத்ரி.  அதுவும் அப்போது அவர் என்னைச் சந்தித்து ஒரு வாரம்தான் இருக்கும்.  சே, நீ இப்படிப்பட்ட ஆளா என்று என்னை விட்டு அகன்று விடாமல் என்னை நம்பினார். நான் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – 3 முன்வெளியீட்டுத் திட்டம்

பழுப்பு நிறப் பக்கங்கள் தினமணி இணைய இதழில் தொடராக வந்து கொண்டிருந்த போது அது பற்றி எழுத்து காலத்து மூத்த கவிஞர் எஸ். வைதீஸ்வரன் அது பற்றி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அன்புள்ள சாரு… இந்த வாரம் தினமணியில் பழுப்பு நிறப் பக்கங்கள் தொடரில் ‘கு.ப.ரா. 3’ படித்தேன். கு.ப.ரா.வைப் பற்றி இதுவரை கவனிக்கப்படாத அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட பல ஆழமான தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. வெறும் அதிர்ச்சிகளைத் தூண்டும் … Read more