ரெண்டாம் ஆட்டம் in kindle

கீழே வருவது ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகப் புத்தகத்துக்கு நான் எழுதிய முன்னுரை.  சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் நடந்த ஒரு நாடக விழாவில் நானும் நண்பர்களுமாக ஒரு நாடகம் போட்டோம்.  நாடகத்தின் பெயர் ரெண்டாம் ஆட்டம். அது நடந்து கொண்டிருக்கும் போதே நானும் நடிகர்களும் தாக்கப்பட்டோம்.  நண்பர்கள் என் பாதுகாப்புக்கு வந்திருக்கவில்லை என்றால் சஃப்தர் ஹஷ்மியைப் போல் கொன்றே போட்டிருப்பார்கள்.  ஆனால் ஒரு அடிப்படையான வித்தியாசம்.  ஹஷ்மி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில அடிதடி … Read more

460 புத்தகங்களில் கையெழுத்திட்டேன்…

நேற்று ஒரு வித்தியாசமான நாள்.  மொத்தம் 460 புத்தகங்களில் கையெழுத்திட்டேன்.  பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 2.  அப்போது அதன் பதிப்பாளர் ராம்ஜியும் நானும் சிலவற்றைக் கதைத்தோம்.  காயத்ரி உட்பட எல்லோருக்கும் மகிழ்ச்சி.  ஆனால் எனக்கு ஆசை அதிகம்.  ஆசை அதிகம் இருப்பவரைத் திருப்தி செய்ய முடியாது.  இந்தப் புத்தகம் தயாரிப்பில் தமிழ்ப் புத்தக உலகைப் பொறுத்த வரை முதல் தரம்.  ஆனாலும் தில்லி தாம்ஸன் பிரஸ் மாதிரி யாராலும் செய்ய இயலாது.  அங்கே அச்சடித்தால் விலை … Read more

நண்பர்கள் – 1

எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் மிகப் பெரிய உயரத்திலிருந்து விழுந்த போது அந்த அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.  அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும்.  இந்த இரண்டும் நிகழாமல் என்னைக் காப்பாற்றியவர் காயத்ரி.  அதுவும் அப்போது அவர் என்னைச் சந்தித்து ஒரு வாரம்தான் இருக்கும்.  சே, நீ இப்படிப்பட்ட ஆளா என்று என்னை விட்டு அகன்று விடாமல் என்னை நம்பினார். நான் இருக்கிறேன் என்று மகத்தான தார்மீக ஆதரவைக் கொடுத்தார். நான் இப்போது உலக அளவில் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – 2 வெளியீட்டு விழா

பழுப்பு நிறப் பக்கங்கள் – 2 வெளியீட்டு விழா எப்போது என்று கேட்டிருக்கிறார் ஒரு நண்பர். இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் எழுதியிருந்தாலும் இன்னொரு முறை எழுதுகிறேன்.  மரியோ பர்கஸ் யோசாவுக்கு நோபல் பரிசு கிடைத்த போது சுமார் நூறு பேர் எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள்.  அது நடந்தது 2010-இல்.  காரணம், நான் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக யோசா பற்றி எழுதி வருகிறேன். சமீபத்தில் விக்தோர் ஹாரா பற்றி குறிப்பிட்டிருந்தேன்.  அவரைப் பற்றி … Read more

நிலவு தேயாத தேசம் – மதிப்புரை

அந்திமழையில், லக்ஷ்மி சரவணகுமார் நிலவு தேயாத தேசம் நூலுக்கு எழுதிய மதிப்புரை இந்த இணைப்பில்: https://zhakart.com/blogs/book-reviews/article-131   இணையம் மூலம் வாங்க: www.amazon.in/dp/B079NZ1N5F/    

The Road to Mecca…

பூமியும் மணலும் எரிந்து கொண்டிருக்கின்றன நேசத்தால் காயப்பட்டவர்கள் அனைவருக்கும் முகத்தில் அதன் தடயங்கள் இருப்பது போல் – தணல் உமிழும் மணலில் கடக்கும் சாலையின் மீது உன் முகத்தை வை, அந்த வடு எல்லோருக்கும் தெரியும் வகையில் இருக்க வேண்டும் இதயத்தின் அந்த வடு அனைவராலும் பார்க்கப்பட வேண்டும் நேசத்தின் பாதையில் செல்கின்ற அந்த மனிதர்கள் அவர்களது தழும்பால் அறியபட வேண்டும்… இது யார் எழுதிய கவிதை தெரிகிறதா?  நபிகள் நாயகம்.  கவிதையாக எழுதினதில்லை.  அவரது வாசகங்கள் … Read more