மூடர் உலகம்

  michael769513@gmail.com ஒன்றுமே தெரியாத மூடர்கள் பலர் முகநூலில் வந்து ஏதாவது பேண்டு விட்டுப் போவது வழக்கமாக இருக்கிறது.  தமிழின் மூத்த கவிகளில் ஒருவரான கலாப்ரியாவைக் கூட அவர் யார் எவர் என்ற விபரமே தெரியாமல் சில மூடர்கள் முகநூலில் கலாய்ப்பதைப் பார்த்திருக்கிறேன்.  முழுமையானஎன்றே தமிழ்நாட்டு வாசிப்புச் சூழல் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது.  இவர்களுக்கு எழுத்தாளன் என்றால் யார் என்றே தெரியவில்லை.  வாழ்க்கையில் ஒரு புத்தகத்தையாவது இந்த மூடக் கும்பல் படித்திருக்காது.  குமுதம் விகடனே படித்திருப்பார்களா என்பது … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு

பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியை முன்பதிவு செய்ய இந்த லிங்கைத் தொடரவும்: https://tinyurl.com/pazhuppu2 பின்வரும் முன்பதிவுத் திட்ட சலுகை ஜூன் 5-ஆம் தேதி வரை மட்டுமே. இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி வெளிவர இருக்கிறது.  வெளியீடு: ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் தமிழ்ப் பிரிவான எழுத்து பிரசுரம். ஒரு பிரதியின் விலை ரூ. 350/-  முன்பதிவுத் திட்டத்தில் விலை ரூ.250/- முன்பதிவுத் திட்டத்தின் கீழ் புதிய எக்ஸைல் வெளியான போது 900 … Read more

பாலகுமாரன் – அஞ்சலி

பாலா என்ற சித்த புருஷன் ஜூலை 2016 (பாலகுமாரனின் எழுபதாம் பிறந்தநாள் சிறப்பு மலர் ‘எழுத்துக்கு எழுபது’-வில் வெளியான கட்டுரை) எழுபதுகளின் பிற்பகுதியில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் ரோட்டில் இருந்த சாந்தி மேன்ஷனில் தங்கியிருந்தேன். ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் தொகுதி வந்திருந்த நேரம். சுப்ரமண்யராஜு, பாலகுமாரன் போன்ற கோபக்கார இளைஞர்களின் காலம். அப்போது கணையாழியில் ஒரு கவிதை படித்தேன். உனக்கென்ன கோவில் குளம் சாமி பூதம்  ஆயிரமாயிரம் இனிமையாய்ப் பொழுதும் போகும் வலப்பக்கம் கடல் மணலை இடப்பக்கம் … Read more

நிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை

தமிழ்நாட்டில் எழுத்தாளர் என்றால் கூட அர்த்தம் புரிந்து விடும். ஆனால் புத்திஜீவி என்றால் அப்படி ஏதும் புதியவை ஆர்கானிக் காய்கறி வந்துள்ளதா என்று கேட்பார்கள். தமிழ்நாட்டில் நான் வெகுவாக மதிக்கும் புத்திஜீவிகளில் ஒருவர் டி. தர்மராஜ். அவர் முகநூலில் எழுதியிருந்த இந்தச் சிறிய கட்டுரை நிர்மலா தேவி பிரச்சினையில் என் எண்ணத்தை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த விஷயம் என்னைப் பெரிதும் பாதித்து விட்டது. அந்த நான்கு மாணவிகளும் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப மறுத்தும் அந்த … Read more

Towards a Third Cinema

Towards a Third Cinema என்ற என் புதிய புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.  இதில் பேசப்பட்டுள்ள இயக்குனர்களைப் பற்றி கூகிளில் கூட அதிக விபரங்கள் கிடைக்காது.  இவர்கள் இயக்கிய படங்களுக்கு ஆங்கிலத்தில் கூட விமர்சனங்கள் இல்லை.  உலகின் மிக முக்கியமான படங்கள் அத்தனைக்கும் விமர்சனம் எழுதும் ரோஜர் எபெர்ட் கூட என்னுடைய இந்த நூலில் விவாதிக்கப்பட்டுள்ள படங்கள் பற்றி எழுதவில்லை என்றால் இந்தப் படங்கள் உலக அளவில் எந்த அளவிற்குப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  ஆனால் … Read more