இன்று ஒன்று நன்று

விகடனின் ‘இன்று ஒன்று நன்று.’ ஜூலை 9 முதல் ஜூலை 15 வரை, 044-66802911 என்ற எண்ணுக்கு அழைத்தால், அடியேன் பேசுவதைக் கேட்கலாம்.  புகைப்படத்தில் சாரு நிவேதிதா என்ற பெயருக்குக் கீழே இருப்பது Zorro.  பக்கத்தில் இருப்பது நான்.  புகைப்படம்: விகடன் புகைப்படக் கலைஞர்: தி. குமரகுருபரன் http://www.vikatan.com/article.php?module=magazine&aid=108082

உ.வே.சா.வும் பாரதியும்

ஐயா, வணக்கம். உவேசா குறித்த உங்கள் கட்டுரையை படித்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். தமிழ் மொழிக்குப் பெரும் தொண்டாற்றிய மாமனிதரைப் பற்றிய பல அரிய, பயனுள்ள விஷயங்களை மிக்க சுவையுடன் எடுத்துச் சொல்கிறது உங்கள் கட்டுரை. வாழ்த்துக்கள். இங்கு எனக்கு எழுந்துள்ள சந்தேகம் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். இந்தக் கட்டுரையில், பாரதியாரைப் பற்றியும் உவேசா கட்டுரை எழுதியிருக்கிறார் என்றுகுறிப்பிட்டுள்ளீர்கள். (நீல நிறம் இட்டிருக்கிறேன்). இது உண்மையா? பாரதியார் வாழ்ந்த காலத்தில், அவரது மேதாவிலாசத்தை, கற்றவர்கள், பெரிய தமிழ் அறிஞர்கள் பலரும் கூட அறிந்துகொள்ளவில்லை என்பது தான் … Read more

முகநூல்

முகநூலால் எவ்வளவோ பயன்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அனைவரும் அறிவோம்.  அதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை.  எனக்கு செய்தித்தாள் படிக்க நேரமில்லை.  முகநூல் மூலம் தான் என்ன முக்கிய செய்திகள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.   ஆனால் ஆயிரக் கணக்கான மொக்கைகளும் முகநூலில் உலவிக் கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றன.  புகைப்படத்தைப் போட்டு ஆயிரம் லைக்ஸ் அள்ளும் அழகி மொக்கைகளின் அட்டகாசம் அதில் ஒன்று.  அது பற்றி ஜ்யோவ்ராம் சுந்தர் முகநூலில் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். … Read more

புத்தக விழாக்கள்

நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 3 முதல் 12 வரை நடைபெறுகிறது.  அங்கே உயிர்மை மற்றும் கிழக்கு அரங்குகளில் நான் எழுதிய புத்தகங்கள் கிடைக்கும். இடம்: Book Fair Grounds (Lignite Hall Premises), Block -11, Neyveli. நேரம்: வார நாட்களில் காலை பதினொன்று முதல் இரவு ஒன்பது வரை. வார இறுதிகளில் காலை பத்து முதல் இரவு ஒன்பது வரை. கிழக்கு அரங்க எண் – 160 உயிர்மை அரங்கு எண் – 5 … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் : எஸ். சம்பத்

இதுவரையிலான என்னுடைய பரந்து பட்ட உலக இலக்கிய வாசிப்பில் எஸ். சம்பத்தின் இடைவெளி நாவலுக்கு மிஞ்சிய ஒரு இலக்கியப் படைப்பு இல்லை என்று முடிவுக்கு வந்துள்ளேன்.  நான் மட்டும் அல்ல.  சி. மோகனும் அப்படியே அபிப்பிராயப்படுகிறார். இடைவெளி நாவலை விருட்சம் வெளியீட்டில் படித்தால் புரிந்து கொள்ள முடியாது.  அது எடிட் செய்யப்படாத முதல் பிரதி.  தெறிகள் பத்திரிகையில் அப்படித்தான் வந்தது.  அதை சி. மோகன் செவ்வனே செப்பனிட்டு க்ரியா மூலமாக 1984-இல் வெளிவந்தது.  அதன் பிடிஎஃப் பிரதி … Read more

என் புத்தகங்கள் மின் புத்தகங்களாக…

எனக்கு புத்தகமாகப் படிப்பதை விட ஐ பேடில் அல்லது கணினியில் படிப்பதே வசதியாக உள்ளது.  அதற்காக ஒரு நண்பர் சமீபத்தில் ஐபேட் வாங்கிக் கொடுத்தார்.  இனிமேலான காலம் மின்நூல் வடிவில்தான் இருக்கும்.  காகிதப் புத்தகங்கள் வழக்கொழிந்தும் விடலாம். என் புத்தகங்கள்  சில மின்நூல்களாகக் கிடைக்கின்றன.  தகவல்: விண்டோஸ் 8 கணினியிலும், ஸ்மார்ட் ஃபோனிலும் நியூஸ் ஹன்ட்(newshunt)  app டவுன்லோட் செய்து, சாரு நிவேதிதா / charu nivedita என்று தேடினால், சாருவின் புத்தகங்கள் வருகிறது. விலைப்பட்டியல்:    … Read more