ஐரோப்பாவுக்கும் துருக்கிக்கும் இடையேயான தூரம்…

பல அந்நிய மொழிப் பெயர்கள் இங்கே தமிழில் தப்புத் தப்பாகவே உச்சரிக்கப்பட்டு, எழுதப்பட்டு அப்படியே நினைவிலும் தங்கி விட்டன. அதில் ஒன்று, இஸ்தான்புல் என்று தவறாகச் சொல்லப்படும்/எழுதப்படும் இஸ்தம்பூல்.  துருக்கியும் துனீஷியாவும் இஸ்லாமிய நாடுகள் என்றாலும் கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளை ஒத்த கலாச்சார சாயல்களைக் கொண்டவை.  இஸ்தம்பூல் சென்னையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியது.  அதில் ஐரோப்பியப் பகுதியும் ஆசியப் பகுதியும் உண்டு.  இரண்டையும் கடக்க ஃபெர்ரியில் போக வேண்டும். ஐரோப்பிய இஸ்தம்பூல் கிட்டத்தட்ட ஐரோப்பா.   … Read more

இறைவனுக்கு ஒரு கடிதம் – விவாதங்கள் (2)

டியர் சாரு இது நான் உங்களுடைய புது எக்ஸைல் வாசித்துவிடுட் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதியனுப்பிய கடிதம். [உங்களிடமே கேட்பது சரியில்லை என்று தோன்றியது. நெகட்டிவாக என்ன சொல்கிறார் என்றுபார்ப்போமே என்று கேட்டேன்] திரு ஜெ., நான் சாருநிவேதிதா என்பவரின் எக்ஸைல் என்ற ஆயிரம் பக்க நாவலை வாசித்தேன். அது எனக்கு பெரிய அளவிலே மன அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. கிழித்து வீசவேண்டும் என்று நினைத்தேன். இதையெல்லாம் இலக்கியம் என்று சொல்லலாமா? ஆறு.கணேசன். அன்புள்ள ஆறு. கணேசன், ஒன்று … Read more

விவாதங்கள் – 1

அன்புள்ள சாரு, தோப்பில் முகமது மீரான் எழுதிய “ஒரு கடலோர கிராமத்தின் கதை” நாவல் வாசித்தேன். கிளாசிக். கடற் பகுதி முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை வேரிலிருந்து நுனி வரை அலசிச் செல்கிறது. இந்த நாவல் ஆங்கிலத்திலும், ஜெர்மனிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. நேற்று மீரானைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. எத்தேச்சையானதுதான். என் வீட்டிலிருந்து நாலு கிலோமீட்டர் தொலைவில்தான் மீரான் வசிக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் தமிழை விட மலையாள இலக்கியங்களே அதிகம் … Read more

கேள்வி பதில் (5)

கேள்வி: விதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (அன்புள்ள சாரு, மேலே உள்ள கேள்விக்கு விரிவாக பதில் தேவை.  இந்தக் கேள்வி நாம் எதை அந்தரங்கம் என்று சொல்கிறோமோ அதன் அடிப்படையில் கேட்கப்பட்டது அல்ல.  என் பெயரையோ ஊரையோ தெரிவிக்க வேண்டாம்.) பதில்: சமீபத்தில் ஈரோட்டில் ஒரு சுவடி ஜோதிடரை சந்தித்தேன்.  நம் பகுத்தறிவுவாதிகள் இதையெல்லாம் படுமூடத்தனம் என்று சொல்வார்கள்.  நானும் இதை மூடத்தனம் என்றே நம்ப விரும்புகிறேன்.  ஆனால் எதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது.  அந்த ஆளுக்கு … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – 2

மீண்டும் நினைவுறுத்துகிறேன்.  இன்றைய தினம் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.  முடிந்தால் பார்க்கவும். பிரதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் புதிய தலைமுறை இதழில் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் தொடரைப் படித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.  இந்த வாரம் சென்னை அஞ்சல் தலைமை அலுவலகம் பற்றி எழுதியிருக்கிறேன்.  ராஸ லீலாவின் தொடர்ச்சி… தினமணி இணைய இதழில் பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற தலைப்பில் இன்று இரண்டாவது கட்டுரை வெளியாகி உள்ளது.  படித்துப் பார்க்கவும்.  படிப்பதோடு நிறுத்தி விடாமல் … Read more

கேள்வி பதில் (4)

அன்புள்ள சாரு, சாமானியர்களை விடக் கொஞ்சம் அதிகமாகப் படித்து விட்டேன். இப்பொழுது  எது சரி எது தவறு என்று சுத்தமாகப் புரிய மாட்டேன் என்கிற‌து.   முன்பை விட எல்லாவற்றிற்கும் நிறைய யோசிக்கிறேன்.  இப்பொழுது நான் என்ன பேச அல்லது எழுத அல்லது கேட்க நினைத்தாலும்,  இயல்பாக வர மறுக்கிறது.  அதாவது, நிறைய படிக்கப் படிக்க நான் முட்டாள், நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்னும் எண்ணம் தோன்றுகிறது. உங்களைப் படித்துப் பலமுறை awe factor அடைந்திருக்கிறேன். … Read more