புதிய எக்ஸைல் : ஒரு மதிப்பீடு

இந்த வார குங்குமம் இதழில் புதிய எக்ஸைல் பற்றிய ஒரு அருமையான மதிப்பீடு வந்துள்ளது.  பார்க்கவும். இன்று இரவு பதினோரு மணிக்கு சன் நியூஸில் என் வாசகர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கும் நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு ஆகிறது.  இன்று மதியம் மூன்றரையிலிருந்து நான்கு வரை நேரடி ஒளிபரப்பில் கிடைத்தது.  வாசகர்கள் சுவாரசியமான கேள்விகளைக் கேட்டனர். இன்று மாலை ஆறரை அளவில் புத்தக விழாவில் கிழக்கு, உயிர்மை அரங்குகளில் இருப்பேன்.  கையெழுத்து வேண்டியவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

அந்திமழை கேள்வி பதில்கள்

சரியாக 21 வாரமாக அந்திமழையில் கேள்வி பதில் பகுதியை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொரு வாரமும் அதற்கான லிங்கையும் இங்கே சாருஆன்லைனில் கொடுத்து வருகிறேன்.  ஆனால் பல நண்பர்கள் இதைப் படிப்பதில்லை என்று அறிகிறேன்.  முகநூலில் தமிழில் வெளிவரும் மொக்கை படங்களுக்கு 20 வரி விமர்சனம் எழுதித் திட்டும் அவர்களுக்கு இங்கே கொடுக்கும் இணைப்பைத் தட்டி நான் எழுதியிருப்பதைப் படிக்க முடியவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது.  இதே கேள்வி பதில்களை இணைப்பு தராமல் அப்படியே வாசிக்கக் கொடுத்தால் படித்து … Read more

புதிய எக்ஸைல் விழா பதிவுகள் (8) : Fuck

வார்த்தைகளில் எனக்குக் கெட்ட வார்த்தை, நல்ல வார்த்தை என்று எதுவும் கிடையாது.  என் 30-ஆவது வயதில் ஒரு கருத்தரங்கில் Germaine Greer நடத்திய CUNT என்ற பத்திரிகையிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டினேன்.  பெண்கள் தமது யோனியைக் கொண்டாட வேண்டும் என்பது க்ரேரின் கோட்பாடு.  அவருடைய The Female Eunuch என்ற நூலை உங்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன்.  பின்னால் இருப்பது ஜெர்மெய்ன் க்ரேர் பெருமையாகக் கொடுத்த அவருடைய புகைப்படம்.  மேலும் அவரைப் பற்றிய, அவர் எழுதிய … Read more

புத்தக விழா

இன்று புத்தக விழாவில் மதியம் மூன்றிலிருந்து இருப்பேன்.  அநேகமாக உயிர்மை மற்றும் கிழக்கு அரங்குகளில்.  இல்லாவிட்டாலும் அங்கே தான் எங்கேயாவது மேய்ந்து கொண்டிருப்பேன்.  என் புத்தகங்களில் மட்டும் கையெழுத்துப் போடுவேன். நாளை காலை பத்தரை மணி அளவில் கேகே நகரில் உள்ள டிஸ்கவரி பேலஸில் கணேச குமாரனின் மெனிஞ்சியோமா என்ற நாவலைப் பற்றி பேசுவேன்.  இஷ்டமுள்ளவர்கள் வரலாம். இனிமேல் பெண்கள் ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளைப் புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறேன். தமிழச்சி, ரோகினி ஆகியோர் விதிவிலக்கு.

நான் தான் காரணம்!

புதிய எக்ஸைல் நாவலை எல்லோரும் கண்டபடி திட்டுவார்கள்; அப்படித் திட்டினால் நாம் ஒரு நல்ல நாவலை எழுதி விட்டோம் என்று அகமகிழலாம் என்று எதிர்பார்த்தால் நான் சற்றும் எதிர்பாராத வேறோர் அதிரடி ரகளை நடந்து கொண்டிருக்கிறது.  நாவலின் பேப்பர் சரியில்லை; சாணித்தாள், அது இது என்று.  அடப் பாவிகளா?  இது சம்பந்தமாக ஒரு பழமொழி இருக்கிறது.  கல்பூரம் அது இது என்று வரும்.  சரி விடுங்கள்.  விஷயத்தை நேரடியாகச் சொல்லி விடுகிறேன்.  பொதுவாக நான் பதிப்பாளரின் சுதந்திரத்தில் … Read more