சென்னை தினம் – சிறுகதைப் போட்டி

வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது. அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். * சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2017. * வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 4ம் வாரம் அறிவிக்கப்படும். * … Read more

தேசியவாதம்: ஒரு விசாரணை : நிர்மல் (அ) ம்ரின்ஸோ

உண்மையில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.  நம்முடைய வாசகர் வட்டத்திலிருந்து இத்தனை பேர் எழுதுகிறார்களா என்று.  மதியம் நிர்மல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்.  நான் அப்போது சினிமாவில் இருந்தேன்.  இப்போது அழைக்கச் சொன்னேன்.  ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன், படித்துப் பாருங்கள் என்றார்.  தயவுசெய்து உங்கள் ப்ளாகில் எடுத்துப் போட்டு விடாதீர்கள் என்றார்.  ஏன் என்றேன் ஆச்சரியத்துடன்.  கூச்சமாக இருக்கிறது என்று பதில் வந்தது.  ஆனால் இந்தக் கட்டுரை தினமலரிலோ தமிழ் இந்துவிலோ இரண்டு மூன்று தினங்கள் தொடராக வந்திருக்க … Read more

டச் வுட்

உப்புக் கருவாடு என்ற படத்தின் முதல் காட்சியின் போதுதான் ராம்ஜி நரசிம்மனைப் பார்த்தேன்.  பக்கத்தில் இயக்குனர் ராதா மோகன்.  ராம்ஜி பற்றி ஏற்கனவே காயத்ரி மூலம் அறிந்திருந்தேன்.  ஒருபோதும் அவரிடம் பழகி விடக் கூடாது என்று நினைத்திருந்தேன்.  காரணம், அவர் ஒரு தயாரிப்பாளர், ஃபைனான்ஷியர்.   அந்த இரண்டு தொழில்களிலும் இருப்பவர்கள் மீது நமக்கு ஒரு மன பிம்பம் இருக்கிறது அல்லவா, அதுதான் அப்படி நான் நினைத்ததற்குக் காரணம்.  அதனால் கொஞ்சம் ’தள்ளியே’ நின்று பேசினேன்.  படம் எப்படி … Read more