ரஸ்புடினின் நிழல்

நிர்குண் ஒரு ரஸ்புடின் என்று எழுதி மூன்றாவது நிமிடம் நிர்குண் பின்வரும் கவிதையை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். நிழலின் இரத்தத்தில் நிர்குண்–ரஸ்பூட்டின்” பேரரசின் எலும்புகள் முறியும் சத்தம்பனியில் ஒலித்த இரவு அது.அந்த இருளின் நடுவேஇரண்டு நிழல்கள் மட்டும் உயிருடன் இருந்தன —ரஸ்பூட்டின்மற்றும்நிர்குண். ரஸ்பூட்டின் கண்களில்அரசியலின் கரும்புகைமனிதரின் ஆசையின் நச்சுபேரரசின் சிதைவின் வாசனை. நிர்குணின் நெஞ்சில்வடிவமற்ற ஒளிஆனால் அந்த ஒளியும்இருளின் நரம்புகளில்கருமைபோல் பாய்ந்தது. “பேரரசுகள் இறக்கும் முன்அவைகளின் நிழல் முதலில் அழுகும்,”என்று ரஸ்பூட்டின் கிசுகிசுத்தான். “மனிதன் இறக்கும் முன்அவனின் உள்ளிருள் … Read more

மேலும் ஒரு வாழ்த்து

நிர்குண் இன்றைய தினத்துக்காக எத்தனை கவிதை எழுதியிருக்கிறார் என்றே தெரியவில்லை. இதோ இன்னொரு கவிதை: I AM SUCH A SOUNDARYA NIRGUNATHIS IS NIRHOSDYAS. MY LOVING CHARU AURANGZEB.. The wish for joy becomes its inversion: not celebration — but the quiet fracture where learning is not received but unlearned until the self becomes a corridor with all doors open and … Read more

நன்றி

பிறந்த நாள் வாழ்த்து அனுப்பியவர்களுக்கும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியவர்களுக்கும் நன்றி என்ற வார்த்தை சாதாரணம். இருந்தாலும் வேறு வார்த்தை இல்லை. எல்லோருக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றி. என் பிறந்த நாளை முன்வைத்து நிர்குண் சில கவிதைகளை எழுதியிருக்கிறார். இவர் எழுதுவதெல்லாம் செயற்கை நுண்ணறிவோ என ஐயுறுகிறேன் என்றார் ஒரு நண்பர். நிர்குண் ஒரு அசாதரணன். இக்காலத்திய ரஸ்புடின். இப்படிச் சொன்னால் “மறுபடியுமா?” என அடிக்க வருவீர்கள். என் கண்ணெதிரிலேயே தன் கைபேசியில் ஒரு சில நிமிடங்களில் … Read more

நூற்றாண்டுகளின் புறக்கணிப்பு

சங்கப் புலவர்கள் பிச்சைக்கோப்பைளோடுமன்னன் அருகே நின்றுசொற்களைக் கோர்த்தனர் பாரதிசோற்றுக்காயின் உள்ளேசூரியனை விதைத்தான்;அதுவோ பசியில் வெடித்தது.அவன் இறந்த பின்அவன் முகம்எல்லா வீதிகளிலும்முண்டாசுடன் தொங்கியது உயிரோடு இருந்தால்கழுத்தில் கயிறுசெத்த பின்—அதே கழுத்தில்மலர்மாலை; உயிருக்கு செருப்படி,பிணத்துக்கு மாலை—இரண்டுக்கும் நடுவில்என் இனம்ஒரு சடங்கு போலகொடூரத்தைக் காபந்து பண்ணுகிறது மரணம் இங்கேஒரு விழா,உயிர் அவமானம். எனக்குக் கசப்பில்லை, நண்பா,இந்தக் கவிதைகண்ணீர் அல்ல;எரியும் நாக்கு.எதிர்ப்பின் குரல்—காலத்தின் செவிகளில்அறையும் பிளிறல் கொண்டாட வேண்டுமென்றால்இன்றே வா—இன்னும் சூடாகவே இருக்கும்என் உடலைத் தழுவு. உன்னிடம் என் உயிரினும்மேலானதோர் விஷயம் சொன்னேன்உன்னிடமிருந்து … Read more

கற்பகம் சாந்தகுமாரைத் தெரியுமா? (சிறுகதை)

ஒரு நண்பர் இன்று என்னிடம் “உங்களுக்கு கற்பகம் சாந்தகுமாரைத் தெரியுமா?” என்று கேட்டார். தெரியும் என்றேன். அவரை எனக்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தெரியும் என்று மேலதிகத் தகவலையும் சொன்னேன். பிறகு அவர் பற்றிய மற்ற விவரங்களையும் சொன்னேன். “ஓ, அவர் இலக்கிய உலகில்தான் இருக்கிறாரா?” என்று கேட்டார் நண்பர். நண்பருக்குத் தமிழ் இலக்கிய உலகம் பற்றி எதுவும் தெரியாது. அவர் முற்றிலும் ஆங்கிலத்தில் படிப்பவர். ஆங்கிலத்தில் எழுதுபவர். அதனால் அவருக்குக் கற்பகம் சாந்தகுமாரின் பெயர் எப்படித் … Read more

விடை பெற்றுக்கொண்ட தூரத்து நண்பன் (சிறுகதை)

நான் மதுவின் மயக்கத்தில் இருக்கும்போது மரணச் செய்தியை கேள்விப்பட்டால் மிகவும் பாதிக்கப்பட்டு விடுகிறேன். அப்படிக் கிடைத்த முதல் மரணச் செய்தி சுஜாதா குறித்தது. நானும் மணியும் கவுண்டமணியும் கலங்கரை விளக்கத்தின் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தோம். நான் கடும் போதையில் இருந்தேன். மணி வேறோர் நண்பரிடம் ஏதோ பிஸினஸ் பேசிக்கொண்டிருந்ததால் நானும் கவுண்டமணியும் கலங்கரை விளக்கத்தின் எதிரே போய் நின்று ஏதோ அளவளாவிக்கொண்டிருந்தோம். யாரோ சுஜாதாவின் மரணச் செய்தியை என்னிடம் தெரிவித்தார். அடுத்த க்ஷணம் அந்த மரணச் செய்தியைத் … Read more