அடிக்‌ஷன்

என்னை வாசிக்கும் யாரும், என்னோடு பழகும் யாரும் என்னைப் பின்பற்றாதீர்கள் என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம்.  ஏனென்றால், நான் அசாதாரணன். இந்த உலகிலேயே அதிக அடிக்‌ஷன் குணத்தைக் கொண்டது அந்த இலை.  அதை இந்தியா உட்பட பல நாடுகள் தடை செய்து வைத்திருக்கின்றன.  ஆனாலும் மலைப்பிரதேச மக்கள் அதைப் புகைக்கிறார்கள்.  இமாலயத்தில் தெருவோரங்களில்கூட அந்தச் செடி முளைத்துக்கிடக்கும்.  முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பான கதை இது.  அப்போது எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் அந்த இலையைப் … Read more

சேவையும் ஆலோசனையும்…(சென்ற கட்டுரையின் தொடர்ச்சி!)

அவந்திகாவை அடிப்பீர்களா சாரு என்று கேட்டார் இல்லையா என் மஹாத்மா நண்பர்? அந்தக் கேள்விக்கு இணையான கேள்வி எது என்று நான் சென்ற கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். காரணம், முப்பது ஆண்டுகளாக நான் அவந்திகாவை புதுமைப்பித்தன் எழுதிய செல்லம்மாள் கதையில் வரும் பிரம்மநாயகம் பிள்ளை எப்படித் தன் மனைவி செல்லம்மாளை கவனித்துக்கொள்கிறாரோ அப்படித்தான் நானும் அவந்திகாவை முப்பது ஆண்டுகளாக கவனித்து அவளுக்கு சேவை செய்து வருகிறேன். சிங்கப்பூருக்கு மூன்று மாத வீசாவில் சென்றிருந்தேன். இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். அவந்திகாவுக்கு … Read more

ஆசிரியனும் சகபயணியும்…

கோவாவில் நடந்த புருஷன் நாவல் வெளியீட்டு விழா உரையில் ஃபாத்திமா பாபு சொல்கிறார்கள் நீங்கள் அராத்துவின் குரு என்று. Grand Narrative பற்றிய ஒரு விடியோ பதிவில் உங்களை குரு, குருநாதர் என்றெல்லாம் சொல்லவேண்டியதில்லை என்று சொல்கிறீர்கள். நான் என்ன சொல்லி உங்களை அழைப்பது? எனக்குப் பெரிய குழப்பமாக இருக்கிறது. பெயர் வெளியிட விரும்பாத ஒரு தோழி. அன்பே, நீ என்னை எப்போதும் இறைவரே என்றுதான் அழைக்கிறாய். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை.  நான் அசோகமித்திரனை என் … Read more

Further Reading: புருஷன், சாரு, சி. மணி

அராத்துவின் புருஷன் படித்துக்கொண்டு இருக்கிறேன். நூற்றைம்பது பக்கங்கள் தாண்டியுள்ளேன். நூறு பக்கங்களைத் தாண்டியுவுடன் ஒளியின் வேகத்தில் செல்கிறது. அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் Further reading என்று மேலும் சில கட்டுரைகளைப் படிக்க இணைப்பு கொடுத்திருப்பார்கள் (bibliography அல்ல). இந்தச் சிறுகுறிப்பை further reading-ஆக அணுக வேண்டுகிறேன். புருஷன் வெளியீட்டு விழாவில் சாருவின் உரையை அராத்து டிவியில் நேற்று பார்த்தேன். சாருவை ஒவ்வொரு முறை படிக்கும்போதும், பேசும்போதும் புதியதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். மன நோய் … Read more

தரமான தாம்பத்திய வாழ்வுக்கான கையேடு (வயது வந்த ஆண்களுக்கு மட்டும்!)

இந்தப் பதிவை பெண்கள் படிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  இதில் நான் சொல்லப் போகும் ஆலோசனைகள் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அரிய உண்மைகள் என்பதால் இதற்கான கட்டணத்தை நன்கொடையாகவோ சந்தாவாகவோ எனக்கு அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.  இல்லாவிட்டால் இது எதுவும் பலிக்காமல் போய் விடக் கூடிய அபாயம் இருக்கிறது. 1.நீங்கள் சுமார் பதின்மூன்று வயதிலிருந்து பாலியல் தளங்களைப் பார்த்து கரமைதுனம் செய்யப் பழகியிருப்பீர்கள். இப்போது இருபத்தெட்டு வயதில் திருமணம் முடித்த பிறகு … Read more