4. வெற்றிடம்

நீ இல்லாமல் போனால் நீ இருந்த இடத்தை என்ன செய்யட்டும் எனக் கேட்கிறாய் தஸ்தயேவ்ஸ்கி அனா இருவரின் கதை சொன்னேன் திரும்பவும் கேட்கிறாய் ”நீ இல்லாத வெற்றிடத்தை என்ன செய்யட்டும் நான்?” என் பெயர் நிகானோர் பார்ரா என்கிறேன்

3. எப்போதாவது எழுதுபவனின் கவிதை

”எழுதாதவன் எழுதியிருக்கும் கவிதை எப்படியிருந்ததென்று சொல்” என்றேன். ”நட்சத்திரங்களின் காலம் கற்பனையில் எட்டாதது புழுக்களின் காலம் கண் சிமிட்டலில் முடிந்து போகும் கண் சிமிட்டும் காலத்தில் நட்சத்திரங்களை வாழ்ந்திருக்கிறாய் ஒரு அதிசயத்தை எப்படியென்று யாரால் விளக்க முடியும் அன்பே?” என்கிறாய்.

கனவு

எனது நிறைவேறாத கனவு ஒன்று உண்டென்றால் அது பியானோ கலைஞனாக வேண்டும் என்பதுதான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட அது பற்றி மிகவும் யோசித்தேன். சாந்தோமில் என் வீட்டுக்கு எதிரே பியானோ கற்பிக்கும் பள்ளி இருந்தது. அலையவே வேண்டாம். ஆனால் தினமும் நான்கு மணி நேரம் பயிற்சி எடுக்க வேண்டும். ஆரம்பப் பயிற்சி ஸ்கேல்ஸ், விரல் பயிற்சி மற்றும் டெக்னிக். இரண்டாவதுதான் கடினம், ஸைட் ரீடிங். இது முன்னதாகவே பயிற்சி எடுக்காமல் கண் முன்னே நோட்ஸை வைத்துக்கொண்டு … Read more

2. நிழலிலி

1 வாழ்நாள் எல்லாம் எழுதுகிறேன் சிலருக்குப் பிடித்தது சிலருக்குப் பிடிக்கவில்லை 2 பைத்தியம் பிடிக்காமலிருப்பதற்காகக் குடித்தேன் குடிகாரன் என்றார்கள் தனிமையை விரட்டப் பெண்கள் நாட்டம் ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஆயிரம் நிழல்கள், ஆயிரம் கவலைகள் எனக்கே எனக்கென ஒருத்தி கிடைத்தாளில்லை கிடைத்தவளும் அன்பைக் கையிலெடுத்துக்கொண்டு சுழற்றிச் சுழற்றி அடித்தாள் படுகாயமுற்றேன். 3 கேட்டதைக் கொடுக்கும் என் கர்த்தாவிடம் ’அதிகாலையின் ஆதவனைப் போல நிலவின் சஞ்சாரத்தைப் போல நட்சத்திரங்களின் மினுமினுப்பைப் போல தென்றலின் இனிமையைப் போல குழந்தையின் முதல் … Read more

நாமறுதல் – 1

நமக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்னவெல்லாம் பிடிக்காது என்று சொல்லி விளையாடும் ஆட்டமொன்றை ஆடினோம் முடிக்கும் தறுவாயில் சொன்னேன் மீண்டுமொருமுறை இதே ஆட்டத்தை ஆடினால் எனக்கு எதுவுமே நினைவிலிருக்காது தெரியுமல்லவா? எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பது மட்டுமே ஞாபகங்களை நிறைத்துவிடுகிறது எனைத் தவிர மற்ற யாருக்குமே என்ன விருப்பு வெறுப்பென்பதெதுவும் எனக்குத் தெரியாது நானென்ன செய்யட்டும்? ஆட்டம் முடிந்ததும் ‘உன்னை ஒன்று கேட்டால் எனக்காகத் தருவாயா?’ என்றாய். நிச்சயமாகத் தருகிறேன் என்றதும் எனக்கே எனக்கென்று மட்டுமாய் ஒரு … Read more

ஒரு நவீனத்துவ காதல் காவியம்

Mariage d’Amour என்ற தலைப்பில் ஒரு நவீன காலத்துப் பாடல் உள்ளது. இதை சாப்பின் இயற்றியதாகப் பலரும் நினைத்து வருகின்றனர். இதை இயற்றியது Paul de Senneville என்ற ஃப்ரெஞ்ச் இசைக்கலைஞர். இயற்றிய ஆண்டு 1979. இந்தப் பாடல் ஸிம்ஃபனி இல்லை. ஒரே ஒரு பியானோ. இந்தப் பாடலை பிரபலப்படுத்தியவர் பியானிஸ்ட் ரிச்சர்ட் க்ளேடர்மேன். க்ளேடர்மேன் பற்றிப் பல முறை எழுதியிருக்கிறேன். லிங்க்: https://www.youtube.com/watch?v=1ej1SI4BRv8 இதே பாடலை ஆர்க்கெஸ்ட்ராவுடனும் இசைத்திருக்கிறார்கள். ஆனால் இதைக் கேட்கும்போது நீங்கள் யாரும் … Read more