அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்
அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் நாடக நூல் வெளியாகி உள்ளது. இணைப்பு கீழே: https://tinyurl.com/Antonin-Artaud-oru நாடகம் பற்றி ஜெமோகன் எழுதியது: http://charuonline.com/blog/?p=13705
அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் நாடக நூல் வெளியாகி உள்ளது. இணைப்பு கீழே: https://tinyurl.com/Antonin-Artaud-oru நாடகம் பற்றி ஜெமோகன் எழுதியது: http://charuonline.com/blog/?p=13705
பெங்களூருவில் Book Brahma என்ற கன்னட இலக்கிய அமைப்பு உள்ளது. www.bookbrahma.com இந்த அமைப்பினர் சென்ற ஆண்டிலிருந்து கன்னடத்தில் சிறந்த நாவலையும் சிறந்த சிறுகதைகளையும் போட்டி மூலம் தேர்ந்தெடுத்து பரிசு அளிக்கிறார்கள். நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய். முதல் பரிசு மட்டும் அல்ல. மற்றும் பல பரிசுகள். சென்ற ஆண்டு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் தாமோதர் மாஸோ. பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற கொங்கணி எழுத்தாளர். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் அடியேன். (என்னை அவர்களுக்கு … Read more
நயநதினி திடீரென்று “உன்னுடைய மார்ஜினல் மேன் நாவலைப் படித்திருக்கிறேன்” என்றாள். இலங்கையில் என் ஆங்கில நூல்கள் கிடைக்க வாய்ப்பு இல்லையே எனக் குழம்பினேன். அடிப் பாவி, ஏன் இதை நீ முன்பே சொல்லவில்லை? இப்போதுதானே படித்தேன்? ஆமாம், உனக்குப் புத்தகம் எங்கிருந்து கிடைத்தது? இப்போதுதானே நானே என் பதிப்பாளர் நண்பரிடமிருந்து உனக்கான ஒரு பிரதியை வாங்கி வைத்திருக்கிறேன். இதற்குப் பதில் இல்லை. நானும் எதையும் ஒரு தடவைக்கு மேல் கேட்பதில்லை. ஆனால் நாவலுக்கு உள்ளேயிருந்து பல விஷயங்களைப் பேசினாள். … Read more
என் வாழ்க்கையில் நான் யாருக்கும் பாடை கட்டியதில்லை. என் முதுகில் குத்திய ஒரு துரோகிக்கு நான் சென்னை வநததும் பாடை கட்டப் போகிறேன். சென்னையில் வசிக்கிறான். வினித்தின் நண்பன். வயது 75. அவனுக்கு இருக்கிறது என் கையால் பாடை. முதுகில் குத்தினால் அதுதான் வினை. இலங்கையில் அவனைக் கண்டதும் ஒரு குழந்தையைப் போல் ஓடிப் போய் கை கொடுத்தால் கையை விலக்கிக்கொண்டு மூஞ்சியைத் திருப்பிக் கொண்டான் துரோகி. அவனை 25 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்க முனைந்தேன். … Read more
மதுரை ஆசைத்தம்பி எழுதியது: சாருவை நீங்கள் பெண்ணாகப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் நான் பார்த்தேன். தான் மாறியதோடு நில்லாமல் உங்களையும் ஒரு பெண்ணாக மாற்றி இருப்பார். எங்கே? எப்படி? என்று எழும் வினாக்களுக்கான விடை ஒரு சிறிய கட்டுரையில் உள்ளது. அந்தக் கட்டுரை பெயர். NH -10. பெண்களின் வலிகளை வரிகளாக வரைந்திருக்கும் அந்தக் கட்டுரை சாருநிவேதிதாவின் நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற புத்தகத்தின் இரண்டாம் கட்டுரை. எழுத்தாளர்களுக்கு சாதி மதம், இனம், தேசம் குடும்பம் என்ற … Read more
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல சீனி ஒரு கதையை அனுப்பிப் படித்துப் பார்க்கச் சொன்னார். சு. வேணுகோபால் எழுதிய உள்ளிருந்து உடற்றும் பசி என்ற கதை. எல்லோராலும் சிலாகிக்கப்பட்ட அந்தக் கதையைப் படித்தேன். கோவில் வாசலில் தன் சீழ் வடியும் புண்ணைக் காண்பித்துப் பிச்சையெடுக்கும் காட்சிதான் நினைவு வந்தது. கதை அத்தனை அருவருப்பு. கடைசி வாக்கியத்தில் வரும் இன்செஸ்ட் அல்ல; அதில் வரும் ஜவுளிக்கடை வர்ணணை. ஞாபக சக்தி உள்ள ஒரு ஒம்பதாம் கிளாஸ் … Read more