இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் ஒரு விஞ்ஞானி

செப்டெம்பர் 27, 2016 எழுத்தாளர்களெல்லாம் அடித்துக்கொள்கிறார்கள் என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் யாரும் இலக்கியம் படிக்காமல் இருப்பதற்கு அதுதான் காரணம் என்று சொல்லி, உங்களுக்குள் ஒற்றுமையாக இருங்கள்; ஒருநாள் நீங்கள் ப்ரஸீல் போகலாம் என்று ஒரு பிரபல விஞ்ஞானி எனக்கு அருள் வாக்கு சொன்னார். இன்றைய இந்துவில் வந்திருந்தது இது: இளையராஜா அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கே சிலர், ஏ.ஆர். ரஹ்மான் உங்களிடமிருந்து இசையைத் தொடர்கிறார்; அவர் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்க அதற்கு … Read more

ரெண்டு தஞ்சாவூர்க்காரன்கள் – குறுங்கதை

செப்டெம்பர் 25, 2016 ஒருத்தன் இன்னொருத்தனைத் தேடி வந்தான். இன்னொருத்தன் தன் பூனைக்கு தோட்டத்தில் வைத்து மீன் போட்டுக் கொண்டிருந்தான். ரெண்டு கையிலும் மீன். பூனை சாப்பிட நேரமாயிற்று. அவனோடு கொஞ்சிக் கொண்டும் மிஞ்சிக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஊடே ஊடே ஏதாவது பெரிய மிருகம் வந்து தன் வாயிலிருக்கும் மீனைப் பிடுங்கிக் கொள்ளுமோ என்ற சந்தேகத்தில் சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்ளவும் செய்தது. தனக்குப் பிரியமான இந்த மனிதன் நிற்கும் போது எந்த மிருகமும் குறுக்கே வர … Read more

ஞானக்கூத்தன்: பாரதிக்குப் பிறகு தோன்றிய மகத்தான கவிஞன்

ஜூலை 23-ஆம் தேதி இரவு எட்டு மணி அளவில் ஞானக்கூத்தனைப்போய் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன்.  காரணம் , சில தினங்களுக்கு முன்புதான் அவரிடம் ஒரு சமஸ்கிருத பாடலில் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தேன். அப்போது உங்களைப் பார்க்க  நேரில் வருகிறேன் என்று சொன்னபோது, “இல்லை , இல்லை . நான் உங்களைப் பார்க்க வருகிறேன்,” என்று சொன்னார். இந்த அடக்கம் ஞானக்கூத்தனுக்கே உரிய தனிப்பண்பு . ஆனால் அந்த அடக்கமே ஞானக்கூத்தனை தமிழ் சமூகம் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: ப. சிங்காரம் (பகுதி 4)

இலக்கியத்திலும் ‘பரோக்’ பாணி உண்டு என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்பு கூப எழுத்தாளர் அலெஹோ கார்ப்பெந்த்தியரின் (Alejo Carpentier) நாவல்களைப் படித்தபோது உணர்ந்தேன். ‘புயலிலே ஒரு தோணி’யை சந்தேகமில்லாமல் ஒரு ‘பரோக்’ பாணி நாவல் என்று சொல்லலாம். ஒருவகையில் சிங்காரம் கார்ப்பெந்த்தியரையும் விஞ்சிவிட்டார்; எப்படியென்றால், ‘புயலிலே ஒரு தோணி’யில் ‘பரோக்’ பாணியோடு கூட பின்நவீனத்துவப் பகடியும் சேர்ந்து கொண்டுவிட்டது. மேலும் படிக்க: தினமணி இணையதளம்  

காவிரி – கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியது: காவிரிப் பிரச்சினையை ஒட்டி கர்நாடகாவில் நடக்கும் வன்முறைகளை ஆராய்ந்தால், ‘தண்ணீர்’ என்பதைத் தாண்டி நாம் கவனம் செலுத்த நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது; எவ்வாறு ஒரு கலவரம் எளிதாக உருவாக்கப்படுகிறது என்பதும் மேலும் முழுவீச்சில் அது எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதும். இவை தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் என்று யாரேனும் சொல்ல முயல்வார்களானால் அவர்கள் நெஞ்சறிய பொய் சொல்கிறார்கள் என்று பொருள். உதிரிகளைக் கட்டமைத்து களமிறக்குவதில் கர்நாடகம் வெற்றியடைந்திருக்கிறது. இந்த வெற்றி … Read more