பூச்சி – 18

ஜெயமோகன் பள்ளி, சாரு நிவேதிதா பள்ளி என்றெல்லாம் குறிப்பிட்டேன்.  அதில் சில விஷயங்களைக்  குறிப்பிட மறந்து போனேன்.  ஜெ. பள்ளி ஊட்டி கான்வெண்ட் மாதிரி.  எஸ்.ரா. பள்ளி டூன் ஸ்கூல்.  அது பற்றிப் பேசவே நமக்குத் தகுதி இல்லை.  என்னுடைய பள்ளி ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளி.  ஆனால் இதிலும் பல பிராமணர்கள் படிப்பதுண்டு.  நிஜமான ஆதி திராவிடர் பள்ளியில் அய்யங்கார் பையனான அராத்து பதினொன்னாங்கிளாஸ் வரை படிக்கவில்லையா, அது போல.  ஆனால் அப்படிப் படிக்கும் பிராமணர்கள் … Read more

பூச்சி 17

”நியாய சாஸ்திரம் செய்த கௌதம மஹரிஷிக்கு ‘அக்ஷபாதர்’ என்று ஒரு பேர். அவர் அறிவால் ஓயாமல் சிந்தனை பண்ணிக்கொண்டே இருப்பாராதலால் வெளி உலகேம அவர் கண்ணுக்குத் தெரியாதாம். ஒருமுறை எதையோ பலமாக யோசித்துக் கொண்டே போய் ஒரு கிணற்றில் விழுந்து விட்டாராம். அப்போது பகவானே அவரை மேலே ஏற்றி விட்டு அவருடைய காலிலேயே கண்ணையும் வைத்து விட்டாராம்! பாதத்திலே அக்ஷம் (கண்) ஏற்பட்டதால் இவருக்கு அக்ஷபாதர் என்று பெயர் வந்தது என்று கதை.” இன்று மொபைலைப் பார்த்துக் … Read more

பூச்சி – 16

நேற்று முழுநாளும் பூச்சியின் பக்கம் வரவில்லை.  வர முடியாமல் வேறு ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்தேன்.  இப்போது கொஞ்சம் எழுதி விட்டு அந்த வேலையின் பக்கம் போக வேண்டும். எல்லா உயிர்களும் பிரம்மத்தின் அம்சங்களே.  ஒரு கூழாங்கல் கூட ஏதோ ஓர் அர்த்தத்தில்தான் இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் அம்சமாக நம் காலடியில் கிடக்கிறது.  இது பற்றிய ஒரு வசனத்தை ஃபெலினியின் La Strada (தெரு) படத்தில் காணலாம்.  அப்படியானால் கூழாங்கல்லும் வைரமும் ஒன்றா?  என்னைப் பொறுத்த வரை … Read more

அரூ- மின்னிதழ்

அரூ என்ற பெயரில் வெளிவரும் இணைய சஞ்சிகையின் ஏழாவது இதழ் இத்துடன். இதில் கடவுளுடன் ஒரு சுற்றுலா என்ற என்னுடைய ஒரு கட்டுரையும் உண்டு. இது கட்டுரையாக எழுதியது அல்ல. அரூ இதழ் நடத்திய அறிவியல் சிறுகதைகளின் நடுவராக இருந்து நான் தேர்ந்தெடுத்த கதைகளுக்கு எழுதிய முன்னுரை. போட்டிக்கு வந்த கதைகள் 98. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் 15. என்னுடைய முன்னுரை அறிவியல் புனைவு எழுதுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அரூ ஆசிரியர் குழு நண்பர்கள் … Read more

பூச்சி – 15

மோடி மஸ்தான் வேலை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே?  அது ஒரு எழுத்தாளனையும் பாதித்து விட்டது.  இல்லாவிட்டால் பாருங்களேன், ப்ளாட்ஃபார்ம் படத்தில் வரும் நாயகன் கையில் வைத்திருப்பது ஒரு நாவல்.  அதுவும் எப்படிப்பட்ட நாவல், அதைப் போன்ற புகழ்பெற்ற ஒரு நாவல் உலகிலேயே இலை.  செர்வாந்தேஸ் எழுதிய தோன் கெஹோத்தே (Don Quixote).  அதைப் போய் மறந்து விட்டு, அவன் கையில் வைத்திருந்தது மெழுகுவர்த்தி என்று எழுதியிருக்கிறேன்.  மோடி வித்தையின் பலம் புரிகிறதா?  இதைத்தான் மஸ்தான் சாதிக்க நினைக்கிறார்.  சாதித்தும் … Read more