செப்டம்பர் மாத சினிமாவுக்கான நிகழ்ச்சி நிரல் : தமிழ் ஸ்டுடியோ

தமிழ் ஸ்டுடியோ குறுந்திரையரங்கம் – செப்டம்பர் மாதத் திரையிடல் இத்தாலிய நியோ-ரியாலிசத் திரைப்படங்கள் திரையிடல். நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் குறுந்திரையரங்கத்தில் ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு விவாதிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க திரைப்பட ரசனையை வளர்க்கும் விதமாகவும், கலையின் இன்னொரு பரிமாணத்தை உணர்த்தும் விதமாகவும் நடைபெறும் இந்த திரையிடலில் இந்த மாதம் முழுக்க இத்தாலியில் வெளியான நியோ-ரியாலிசத் திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கிறது. மிக முக்கியமான பல படங்கள் இதில் அடங்கி உள்ளன. நண்பர்கள் தவறாமல் … Read more

மார்த்தினி

(ஐரோப்பிய மொழிகளில் ஆங்கிலத்தைத் தவிர மற்ற மொழிகளில் T என்ற எழுத்தை த என்றுதான் உச்சரிக்கிறார்கள்.  எனவே மார்த்தினி என்றே குறிப்பிடவும்.  அங்கே போய் மார்ட்டினி என்றால் ஏற இறங்கப் பார்க்கிறார்கள்.  அந்தப் பார்வைக்கு நீ என்ன ஆங்கில அடிமையா என்று பொருள் என்று நண்பன் சொன்னான். ) டியர் சாரு, உங்கள் எழுத்தைப் படித்து ரசிப்பதோடு சரி.  உங்கள் கற்றலின் பன்முகத் தன்மையை வியக்கத்தான் முடிகிறது,  நந்தனார் போல.  விஷயம் இது தான்…  உங்களைப் படித்து … Read more

ஆயுர்வேதம் (2)

சென்ற குறிப்பில் ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன்.  நூறு ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழ என்ன செய்ய வேண்டும் என்பதைப் போல் என்னென்ன செய்யக் கூடாது என்பதும் முக்கியம்.  தெருமுக்குகளில் உள்ள டீக்கடையில் நின்று டீ குடிப்பதை உடனே நிறுத்துங்கள்.  அங்கே உபயோகப்படுத்துவது தேயிலையே அல்ல.  தேநீர் அருந்தத் தோன்றினால் ஒரு கோப்பை வெந்நீர் போதும்.  அதில் Cranberry டீ பாக்கெட்டைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் கழித்து பாக்கெட்டை எடுத்துப் போட்டு விட்டு, … Read more

எப்படிப் பாடினரோ…

ஒருவகையில் நான் லிங்குசாமிக்கு நன்றி சொல்ல வேண்டும்.  அவருடைய படத்தில் கர்னாடக சங்கீதத்தை அவமானம் செய்திருந்ததால் எனக்குள் ஏற்பட்ட ஆவேசமும் கோபமும் மும்மூர்த்திகளைப் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்ற அளவுக்கு என்னைக் கொண்டு வந்து விட்டது.  அதனால் என்ன படித்துக் கொண்டிருந்தாலும் எழுதிக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் கர்னாடக சங்கீதம் மெலிதாக ஒலித்துக் கொண்டே இருப்பது போல் வைத்துக் கொண்டிருக்கிறேன்.  எனக்குப் பிடித்தவர்கள் என்று இதில் ஒரு பட்டியலும் உண்டு. சில பேரைக் கேட்பது … Read more