ஸ்ரீவில்லிப்புத்தூர்

நேற்று இரவு எக்ஸைலை முடித்து பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன்.  இனிமேல் அதைத் தொடுவதாக இல்லை.  தில்லி UNI கேண்டீன் பற்றி எழுதிச் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்.  வேண்டாம் என்று தோன்றியது.  வேறு எப்போதாவது எங்காவது எழுதலாம் என்று விட்டு விட்டேன்.  மொத்தம் 1700 பக்கங்கள் அல்லது இரண்டு லட்சம் வார்த்தைகள் உள்ளன.  இதுவே எனக்கு கதைச் சுருக்கம் என்றே தோன்றுகிறது.  பல இடங்களில் விரிவு படுத்த வேண்டும் என்று மன உந்துதல் ஏற்பட்டது.  ஆனாலும் விரிவாக … Read more

புதிய எக்ஸைல் குறித்து…

புதிய எக்ஸைல் குறித்து நிர்மல் இரண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார்.  நாவல் வெளிவருவதற்கு முன்பே மதிப்புரை வரலாமா என்ற நடைமுறையெல்லாம் எனக்குத் தெரியாது.  அவருடைய இரண்டு கடிதங்கள் : நிர்மலிடமிருந்து வந்த முதல் கடிதம்: வாசித்துவிட்டேன், அன்பும் நேசமும் கொண்ட உதயா, உதயாவின் கதையைப்  படிப்பது சுகமான  அனுபவம்.  ஒரு காலத்தில் கலகக்காரனாக உணர்ந்த  உதயா இன்று எப்படித் தன்னை எக்ஸைலாக உணர்கிறான் என்பது கதை. ஆனாலும் தன் வாழ்வின் மீதும், மற்றவர்கள் மீதும் தீராத பிரியமும் காதலும் கொண்டிருக்கிறான். எனது சின்ன விருப்பம் – நாவலை இன்னும் … Read more

புத்தக அறிமுகம்

பின்வரும் பத்திகளை எழுதியிருப்பது கணேஷ் அன்பு: அந்தப் பகுதியின் அரசாங்க உயரதிகாரி நீங்கள். கிட்டத்தட்ட கடவுளுக்கு நிகரான மதிப்பும், அதிகாரமும் கொண்டவர். கடும் சிரமங்களையும், புறக்கணிப்புகளையும், அவமானங்களையும் கடந்தபிறகே இந்நிலைக்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு உயரதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் மீது இன்றளவும் கடுஞ்சினம் உங்கள் ஆழ்மனதில் படிந்துள்ளது. இந்த உயரதிகாரி – சாமானியன் பாகுபாட்டை ஓரளவிற்கேனும் களைந்து எறிந்து மனிதநேயத்தை சகமனிதர்களிடம் விதைக்கவேண்டும் என்பதே உங்கள் அவா! இதைப் பற்றி உங்கள் முன்னாள் உயரதிகாரிகளிடம் ஷாம்பெய்ன் பருகியபடியே விவாதிக்கிறீர்கள். நள்ளிரவு … Read more

தமிழின் முதல் subaltern நாவல்

உப்பு நாய்களைப் பற்றி நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.  சாத்தானையோ கடவுளையோ நேருக்கு நேர் சந்தித்து மீண்டது போன்ற அனுபவத்தைக் கொடுத்த நாவல் உப்பு நாய்கள்.  இந்த நாவல்தான் தமிழில் எழுதப்பட்ட முதல் ஸபால்டர்ன் நாவல் என்று தோன்றியது.  உடனே கட்டுரையை எழுதி விடலாம்.  ஆனால் இப்போது ஜெயமோகனின் காடு நாவலை படிக்கத் துவங்கியிருக்கிறேன்.  முடித்ததும் உப்பு நாய்கள் பற்றிய கட்டுரை வரும்.   காடு நாவலுக்கு எம். வேதசகாயகுமார் எழுதியுள்ள முன்னுரையின் மூலம் எனக்குப் பல தெளிவுகள் … Read more

படித்ததில் பிடித்தது…

என் கட்டுரை ஒன்றில் அந்த நாளைய தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் பற்றிக் குறிப்பிட்டிருப்பேன்.   கணினி வசதியெல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் உலக சரித்திரம், பூகோளம், நாட்டு நடப்பு போன்ற விஷயங்களை எனக்குக் கற்பித்த ஆசான் அவர்.  ஆனால் இப்போது கணினி வந்த பிறகு எல்லாமே விரல் நுனியில் வந்து விட்டது.   ஒரு சினிமா விமர்சனம் எழுதலாம் என்று திட்டமிட்டால் கூட நாம் எழுத நினைத்ததை விட நல்ல விமர்சனம் இணையத்தில் வந்து விடுகிறது.  இந்த நிலையில் … Read more

உலகத் தரமான ஒரு படைப்பு…

லக்‌ஷ்மி சரவணகுமாரின் உப்பு நாய்கள் என்ற நாவலை சற்று முன்னர்தான் படித்து முடித்தேன்.  இப்படி ஒரு வாசிப்பை இரண்டே இரண்டு எழுத்தாளர்கள் மட்டுமே எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.  ஒருவர், மரியோ பர்கஸ் யோசா (Mario Vargas Llosa), இன்னொருத்தர் தருண் தேஜ்பால்.  லக்‌ஷ்மி சரவணகுமார் மூன்றாவது நபர். ஓரான் பாமுக் நோபல் வாங்குவார் என்று எழுதினேன்.  வாங்கினார்.  யோசா நோபல் வாங்குவார் என்று எழுதினேன்.  வாங்கினார்.  இப்போது இந்தியாவிலிருந்து தருண் வாங்கலாம்.  லக்‌ஷ்மி சரவணகுமாரின் உப்பு நாய்களும் கானகனும் … Read more