உப்பு நாய்களைப் பற்றி நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். சாத்தானையோ கடவுளையோ நேருக்கு நேர் சந்தித்து மீண்டது போன்ற அனுபவத்தைக் கொடுத்த நாவல் உப்பு நாய்கள். இந்த நாவல்தான் தமிழில் எழுதப்பட்ட முதல் ஸபால்டர்ன் நாவல் என்று தோன்றியது. உடனே கட்டுரையை எழுதி விடலாம். ஆனால் இப்போது ஜெயமோகனின் காடு நாவலை படிக்கத் துவங்கியிருக்கிறேன். முடித்ததும் உப்பு நாய்கள் பற்றிய கட்டுரை வரும். காடு நாவலுக்கு எம். வேதசகாயகுமார் எழுதியுள்ள முன்னுரையின் மூலம் எனக்குப் பல தெளிவுகள் கிடைத்தன. முக்கியமாக, நகுலன், எம்.வி.வெங்கட்ராம், அசோகமித்திரன், ந. முத்துசாமி போன்றோரை வெகுவாக சிலாகித்த நான் ஏன் ஆரம்பத்திலேயே சுந்தர ராமசாமியையும் ஜி. நாகராஜனையும் நிராகரித்தேன் என்பதற்கான விடை அந்த முன்னுரையின் மூலம் கிடைத்தது. எனக்கே என்னுடைய நிலை பற்றிய ஒரு தெளிவு அது. காடு படித்துக் கொண்டிருக்கிறேன்…
சம்பந்தம் இல்லாமல் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. ஒரு மாத காலம் எழுபதுகளின் இந்தி சினிமாவைப் பார்த்து எக்ஸைல் நாவலுக்காக ஒரு அத்தியாயம் எழுதினேன். அந்த அத்தியாயத்தை மட்டும் அராத்துவிடம் காண்பித்தேன். படித்து விட்டு பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருந்தார். எப்படி? என்றேன். ஜெயமோகன் எழுத்து போல் இருந்தது என்றார். அதோடு பேச்சை மாற்றினேன்…
Comments are closed.