என் கட்டுரை ஒன்றில் அந்த நாளைய தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் பற்றிக் குறிப்பிட்டிருப்பேன். கணினி வசதியெல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் உலக சரித்திரம், பூகோளம், நாட்டு நடப்பு போன்ற விஷயங்களை எனக்குக் கற்பித்த ஆசான் அவர். ஆனால் இப்போது கணினி வந்த பிறகு எல்லாமே விரல் நுனியில் வந்து விட்டது. ஒரு சினிமா விமர்சனம் எழுதலாம் என்று திட்டமிட்டால் கூட நாம் எழுத நினைத்ததை விட நல்ல விமர்சனம் இணையத்தில் வந்து விடுகிறது. இந்த நிலையில் அறிவு சார்ந்த எந்த விஷயத்தைப் பற்றியும் எழுதுவது தேவையில்லாத ஒன்று எனவே நினைத்து வந்தேன். ஆனால் சமஸ்-இன் கட்டுரைகளை தி இந்துவில் தொடர்ந்து வாசித்த போது என்னதான் இணைய வசதியெல்லாம் வந்தாலும் நம்முடைய உழைப்பையும், அணுகுமுறையையும், அனுபவ ஞானத்தையும் சேர்த்தால் அந்த விஷயம் வேறு ஒரு தளத்துக்குப் போய் விடுவதை உணர்ந்தேன். குறிப்பாக அவரது தொடர் கட்டுரையான நீர், நிலம், வனம். தனுஷ்கோடி பற்றியும் அதில் எழுதியிருக்கிறார்.
நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ்கோடி சென்று என் அனுபவங்களைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீச்சல் காளியைச் சந்தித்தது பற்றி அதில் எழுதியிருந்தேன். சமஸின் தனுஷ்கோடி புகைப்படங்கள் மிகவும் அரிதானவை. இதுவரை இந்தப் புகைப்படங்களை நான் பார்த்ததில்லை.
சமஸ் தி இந்துவில் (தமிழ்) எழுதி வரும் கட்டுரைகளை அவரது தளத்திலும் படிக்கும் வசதியைத் தந்திருக்கிறார்.
Comments are closed.