just illusions…

Pasha, Dublin, 10 Downing  எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுகிறாற்போல் ஒரு பப் வந்துள்ளது.  ராதாகிருஷ்ணன் சாலையையும் மைலாப்பூரையும் இணைக்கும் சந்திப்பில் உள்ளது.  கடைசி கடைசியில் என் மைலாப்பூரிலேயே இப்படி ஒரு சொர்க்க பப் வந்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது.  உள்ளே நுழைந்தால் ஏதோ கந்தர்வ லோகத்தில் நுழைந்தாற்போல் உள்ளது.  (ஆனால் நான் லிஃப்டில் மட்டும் ஏறுவதில்லை).  Illusions என்று பெயர். Queen of french pop என்று கருதப்படும் இந்த அழகியைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு Illusions … Read more

எக்ஸைல் பற்றி – குழலோன்

அன்புள்ள திரு.சாரு நிவேதிதா அவர்களுக்கு, குழலோன் எழுதிக்கொள்வது. உங்களின் இத்தனை ஆண்டு கால எழுத்துப் பணிக்கு மரியாதையும், பணிவும் செலுத்தி இக்கடிதத்தைத் (கட்டுரையைத்) துவங்குகிறேன். ****—-***— வடிவ ரீதியாகவும், தகவல் கூறுகளின் அடிப்படையிலும் அனுபவங்களைத் தெளிவாக சொல்ல முடியுமா? கடினமான மொழியினால் மட்டுமே ஒரு நிலப்பரப்பையோ அல்லது ஒரு மனித சமூகத்தையோ விரிவுபடுத்த வேண்டுமா? மேற்கண்ட இந்த இரண்டு கேள்விகளுக்கும் முறையே வரிசையாக “சொல்ல முடியும்” மற்றும் “அதன் மூலமாக மட்டுமே விரிவுபடுத்த வேண்டியதில்லை”என்று உங்களுடைய எக்சைல் பதில் சொல்லுகிறது. வடிவ நேர்த்தியில் … Read more

புதியவர்கள் (2)

சாரு ஆன்லைனை ரொம்பப் பேர் ஆர்வத்துடன் வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  புதியவர்களை எழுதி முடித்த அரை மணி நேரத்தில் ஒரு கடிதம்.     ”நீங்கள் வராவிட்டாலும் அவந்திகா வீட்டைப் பூட்டி விட்டுக் கிளம்பலாமே?”  அட்ரா சக்கை.  தம்பி, நான் இரண்டு நாய்களை வளர்க்கிறேன்.   பப்பு, ஸோரோ.  இரண்டையும் வீட்டில் அப்படியே விட்டு விட்டு வீட்டைப் பூட்டி விட்டு அவந்திகா கிளம்ப மாட்டாள்.  நான் வந்தால்தான் கிளம்புவாள்.  நான் அப்படி இல்லை.  இரண்டையும் விட்டு விட்டுக் கிளம்புவேன்.  அதிக … Read more

புதியவர்கள்

வாசகர் வட்ட சந்திப்பில் புதியவர்களைச் சேர்க்க எப்போதுமே தயக்கமாக இருக்கும்.   மீறி சேர்த்தால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விபரீதம் வந்து சேரும்.  நேற்று செல்வா, அராத்து, டிமிட்ரி ஆகியோரை செல்வா வீட்டில் சந்தித்தேன்.  அவந்திகா காலை பத்தரை மணிக்கு ஒரு ஆன்மீக சந்திப்புக்குச் செல்ல வேண்டியிருந்தது.  எப்படியும் பத்து மணிக்கு வந்து விடுவேன் என்று ஆயிரம் முறை சத்தியம் செய்து விட்டுக் கிளம்பினேன்.  காலை நான்கு மணி வரை பேச்சும் விவாதமும்.  ஒன்பதுக்கு எழுந்தேன்.  பரபரவென்று கிளம்பினேன்.  … Read more

ஒரு சொம்பு தூக்கியும் வெள்ளைக் காக்காவும்…

பின்வருவது கணேஷ் அன்பு எழுதியது: காமாலைக் கண் கொண்டவனுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியுமாம். வாழ்நாளெல்லாம் சொம்பையே தூக்கி தூக்கி நசுங்கிப் போனவனுக்கு அடுத்தவனைப் பார்த்தாலும் சொம்பு தூக்குறாங்களோ என சந்தேகிக்கத்தான் தோன்றும். ஒரு சொம்பு நசுங்கிப் போய் சொன்னது இது // வெள்ளை காக்கா பறக்கிறது என்று சாரு சொன்னால், “ஆமாம். வெள்ளை காக்காதான் பறக்கிறது” என்று அராத்து ஒப்புக் கொள்வார். “ஆமாம், ஆமாம். வெள்ளை காக்கா கூட்டமாக பறக்கிறது” என்று கூடவே பஜனை செய்ய நான்கு … Read more

குயிலின் முதல் பாடல்

என் தெருவில் அடர்த்தியான மரங்கள் அதிகம்.  அதிகாலை நாலரை மணிக்கு குயிலின் முதல் பாடல் கேட்டுக் கண் விழிப்பேன்.  உடனே இஞ்சிச் சாறு குடித்து விட்டுக் கொஞ்ச நேரம் மின்னஞ்சல்.  இன்று ராஜகுரு என்ற வாசகரிடமிருந்து நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த ஒரு கட்டுரையின் இணைப்பு வந்திருந்தது.  படித்தேன்.  நீங்களும் அவசியம் படித்துப் பாருங்கள்.  நீங்கள் மறக்கவே முடியாத கட்டுரையாக அது இருக்கும்.  ஆங்கிலம் என்பதால் விட்டு விடாதீர்கள்.  அந்தக் கட்டுரையில் சொல்லியிருப்பது போல் தான் எனக்கும் தருண் … Read more