பாரதிராஜாவும் நானும்…

பாரதிராஜாவுடன் என் புகைப்படத்தைப் பார்த்தவுடன் ஒரு ஆசாமி “எவ்ளோ நாள் ஓடுதுன்னு பாப்போம்” என்று முகநூலில் எழுதியிருக்கிறார். பாரதிராஜாவின் படங்களை நான் புகழ்ந்து எழுதி இருக்கும் அளவுக்கு வேறு யாரும் புகழ்ந்ததில்லை. இப்போதும் சொல்கிறேன், என்னுயிர்த் தோழன் என்ற அவருடைய படம் தமிழ்நாட்டு அரசியல் பற்றிய மிக முக்கியமான பதிவு. அவருடைய படங்களில் பாடல்களை நீக்கி, கொஞ்சம் கறாரான எடிட்டிங்கும் செய்தால் அவர் உலக அளவில் பேசப்பட்டிருப்பார். மணி ரத்னத்துக்கு அந்த அதிர்ஷம் இருந்தது. பாரதிராஜாவுக்கு இல்லை. … Read more