ஒரு லெஜண்ட் பற்றி மற்றொரு லெஜண்ட்!

நாளை தில்லி செல்கிறேன்.  அங்கிருந்து நாளை மறுநாள் காலை ஆறு மணிக்கு புதுதில்லி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் ரயிலில் நைனிட்டால் செல்கிறேன்.  அடுத்த மூன்று தினங்களும் ஆஷிஷ் நந்தியுடன் கலந்துரையாடல்.  அமார்த்யா சென் பொருளாதாரத்துக்கு என்றால் ஆஷிஷ் நந்தி சமூகவியல் மற்றும் உளவியல் துறையில்.  நோபல் கிடைத்திருக்க வேண்டும்.  இனிமேலும் கிடைக்கலாம்.  வங்காளம் தான் இப்படி அறிஞர்களையும் கலைஞர்களையும் உருவாக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறது.  தாகூர், ரித்விக் கட்டக், சத்யஜித் ரே, மஹாஷ்வேதா தேவி, எம்.என் ராய், … Read more

எஸ்.வி. சேகர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற காமெடியன்களுக்குப் பதில் சொல்வதா என் வேலை?

ஹலோ சாரு, என் பேர் ———————– உங்க கிட்ட ஒரு தடவ பேசிருக்கேன்.  இன்னிக்கு உங்கக் கட்டுரை நல்லா இருந்தது.  தொடர்ந்து தீவிரமா இந்த மாதிரி உருப்படியான விஷயங்கள எழுதுங்க.  நன்றி… என் வாட்ஸப்பில் இப்படி ஒரு குறுஞ்செய்தி இன்று காலையில் வந்திருந்தது.  இது பற்றிக் கொஞ்சம் சொல்ல இருக்கிறது.   நான் நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.  கடித நபரின் வயதே அத்தனை இருக்குமா தெரியாது.  இதுவரை 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  அதில் ஆறு நூல்களே நாவல்கள்.  … Read more

அடிப்படைவாதிகள் சொல்லும் செய்தி!

இன்று எனக்கு வந்த ஒரு வாசகர் கடிதத்தைப் படித்து மிகவும் அதிர்ந்து போனேன்.  ”எஸ்.வி.சேகர் அப்படி ஒரு முகநூல் குறிப்பைப் பகிர்ந்தது தப்புதான்.  அதற்குத்தான் அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரே, அப்புறம் என்ன?  ரொம்பத்தான் ஓவரா பண்றாங்க எல்லாரும்.” இதை எழுதியிருப்பது ஒரு பெண்.  எஸ்.வி. சேகர் பகிர்ந்து கொண்ட குறிப்பு என்ன சொன்னது தெரியுமா?  அதை விட அசிங்கமாக பெண்களை யாரும் பேசி விட முடியாது.   பத்திரிகைகளில் வேலை செய்யும் பெண்களை மட்டும் அது குறிக்கவில்லை.  … Read more