பாரதிராஜாவும் நானும்…

பாரதிராஜாவுடன் என் புகைப்படத்தைப் பார்த்தவுடன் ஒரு ஆசாமி “எவ்ளோ நாள் ஓடுதுன்னு பாப்போம்” என்று முகநூலில் எழுதியிருக்கிறார். பாரதிராஜாவின் படங்களை நான் புகழ்ந்து எழுதி இருக்கும் அளவுக்கு வேறு யாரும் புகழ்ந்ததில்லை. இப்போதும் சொல்கிறேன், என்னுயிர்த் தோழன் என்ற அவருடைய படம் தமிழ்நாட்டு அரசியல் பற்றிய மிக முக்கியமான பதிவு. அவருடைய படங்களில் பாடல்களை நீக்கி, கொஞ்சம் கறாரான எடிட்டிங்கும் செய்தால் அவர் உலக அளவில் பேசப்பட்டிருப்பார். மணி ரத்னத்துக்கு அந்த அதிர்ஷம் இருந்தது. பாரதிராஜாவுக்கு இல்லை. … Read more

அமேத்திஸ்டில் பூனையுடன் ஒரு விருந்து…

அமேத்திஸ்டில் சமீபத்தில் அராத்துவைச் சந்தித்தேன்.  அது பற்றி அவர் முகநூலில் எழுதிய பதிவு இது: “சாருவின் மனநிலையைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். முந்தா நாள் அவரைப் பார்க்க அமேதிஸ்ட் சென்றிருந்தேன். அவரை பார்க்க மட்டும் தான் அங்கே செல்வது! நவீன கிளியோபாட்ராக்களைக் கூட சாலையோர தேநீர்க்கடைகளில் தான் சந்திப்பது. சாரு, ஒரு சாண்ட்விச் ஆர்டர் செய்தார். ரூ 495 /- நான் ஒரு மரினாரா பீட்சா ! அதுவும் 495 /- சாப்பிட ஆரம்பித்தோம். ஒரு … Read more

Other is Hell

இளையராஜா ரமணர் பற்றியும் இயேசு பற்றியும் உளறியிருப்பதைப் படித்தேன். இதைப் போலவேதான் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாப் மார்லி பற்றியும் உளறினார். அதை உளறல் என்று நான் சொன்னதும்தான் இளையராஜா பைத்தியத்திலிருந்த தமிழ்நாடே என்னைப் போட்டுத் துவைத்து எடுத்தது. இப்போது இளையராஜா பைத்தியம் கொஞ்சம் விலகி விட்டதால் அவருடைய உளறல்களை பலரும் உளறல் என்று புரிந்து கொள்கிறார்கள். அவருக்கு சாஸ்த்ரீய சங்கீதம் தவிர வேறு எதுவுமே தெரியாது. இப்படிப்பட்டவர்கள் நம் சமூகத்தில் எதைப் பற்றியும் கருத்து சொல்லலாம் … Read more