தமிழ்க் கேணியில் இதற்கு மேல் இறைக்க முடியாது: அபிலாஷ்

வர வர அபிலாஷின் அதகளம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்போதுதான் முகநூலில் அவரது இந்தப் பதிவைப் படித்தேன். அவருடைய அனுமதி இல்லாமலேயே இங்கே எடுத்துப் போடுகிறேன். எதாவது புக்கர் கிக்கர் கொடுத்தான்கள் என்றால் இதற்கான கட்டணத்தை அவரிடம் கொடுத்து விடுகிறேன். அதுவரை அபிலாஷுக்கு வெறும் நன்றி மட்டுமே. சமீபத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த பதிவு இது. சார்த்தர் இதைத்தான் living intensely என்கிறார். அபிலாஷ் சொல்லும் இன்பத்தை ஒத்திப் போடுதல் (postponing the pleasure) பற்றியும் … Read more

ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் தள்ளுபடி விலையில் என் புத்தகங்கள்…

ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் என்னுடைய புத்தகங்கள் தள்ளுபடி விலையில் இன்னும் எட்டு நாட்களுக்குக் கிடைக்கும். புத்தக விழாவில் கூட பத்து சத தள்ளுபடிதான். ஆனால் இப்போது 25 சதவீதத்திலிருந்து நாற்பது சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. உதாரணமாக, ராஸ லீலாவின் விலை 900 ரூ. அது தள்ளுபடியில் 600 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஒருசில நூல்களுக்கு நாற்பது சதவிகிதத் தள்ளுபடியை விட அதிகம். இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.