இசை பற்றிய சில குறிப்புகள் – 2

இந்தியாவைப் பற்றிய அறிஞர்கள் எல்லோருடைய ஒருமித்த கருத்து என்னவென்றால், இந்தியாவின் மிகப் பழமையான கலை கவிதைக்கும் நாடகத்துக்கும் முன்னாலிருந்தே மிக உன்னதமான நிலையில் இருந்தது இசைதான்.  அது மட்டுமல்லாமல் இன்று வரை அந்த இசை மரபு பலப் பல நூற்றாண்டுகளாக தொய்வே இல்லாமல் தொடர்ந்து மிகுந்த உயிர்ப்புத்தன்மையோடும் சிருஷ்டிகரத்தன்மையோடும் இருந்து கொண்டே வருகின்றது.  ஔரங்கசீபின் காலத்தைப் போல வரலாற்றில் இதற்கு ஒருசில விதிவிலக்குகளே இருந்தன.  இலக்கியத்தில் கூட இப்படிப்பட்ட தொடர்ச்சி இல்லை.  இலக்கியம் சமூக மதிப்பீடுகளைக் கேள்வி … Read more

144. ஓர் எதிர்வினை : வளன் அரசு

SPB விஷயத்தில் சாரு சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமல் பதிலடி தருகிறேன் பேர்வழிகள் அனைவரும் ஒருவிதமான பதற்றத்துடன் இருப்பதைக் காண முடிகிறது. ஒட்டு மொத்த சமூகமும் சிந்திக்காமல் ஒரு எழுத்தாளனை இப்படிப் பந்தாடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பயத்தினால் ஒரு எழுத்தாளன் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமல் தாக்கலாமா? உண்மையில் தமிழ் சமூகம் வெட்கப்பட வேண்டும். சாருவை வசை பாடுவதன் வழி மீண்டும் மீண்டும் சாருவின் குற்றச்சாட்டை நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது இந்த சமூகம். ஒரு சமூகம் எப்படியிருக்கிறது என்பதன் அடையாளம் எழுத்தாளன். … Read more