நிலவு தேயாத தேசம்

பொதுவாக என் பயணக் கதைகளை நாவலோடு இணைத்து விடுவது வழக்கம். என் பாரிஸ் பயணம் ராஸ லீலாவில் உள்ளது. மற்ற இமாலயப் பயணம் கொஞ்சமாய் எக்ஸைலில் உள்ளது. ஆனால் துருக்கி பயணத்தை அப்படிச் செய்யவில்லை. தனியாகவே அந்திமழையில் தொடராக எழுதினேன். மிக அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட நூல் அது. அது பற்றி அக்னி பிரஸாந்த் தன் முகநூலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. நிலவு தேயாத தேசம் நான் படித்த முதல் பயண நூல். மேலும்  … Read more

136. அடியேனின் முதல் கடிதம், முதல் கதை…

இன்னும் இந்த வணிக எழுத்து விஷயம் கையை விடாது போல் தெரிகிறது.  சுஜாதாவைப் பற்றிய ஒரு முக்கிய விஷயம் சுஜாதா ரசிகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.  சுஜாதாவுக்கு அது வசதியாக மறந்து போய் இருக்கும்.  காரணம், புகழ் என்பது மிகப் பெரிய போதை.  அதை அடித்துக் கொள்ள வேறு எந்த போதையும் இல்லை.  சுஜாதா மறந்து போன, அவரது ரசிகர்களுக்குத் தெரியவே தெரியாத விஷயம் என்னவென்றால், கணையாழியில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதா வேறு; வணிகப் பத்திரிகைகளில் எழுதிக் … Read more

135. அந்தணர் என்போர்…

இன்று முகநூலில் ராஜேஷ் எழுதியிருந்த பதிவு என் மனதைத் தொட்டது.  அவர் தனக்கென்று வாங்கி வைத்திருந்த பரோட்டாவையும் சால்னாவையும் ஒரு நாய் வந்து சாப்பிட்டு விட்டது.  மற்ற சமயமாக இருந்தால் அடி பின்னி எடுத்திருப்பார்.  நேற்று ஏதோ என் ஞாபகம் வந்ததால் விட்டு விட்டார்.  இன்று அந்த நாய்க்கு செம உதை இருக்கிறது.  அதைத் தடுக்கவே இந்தப் பதிவு. எல்லா உயிரிலும் இருப்பது நம்முடைய ஆன்மாதான், எல்லா உயிருமே நாம்தான் என்றெல்லாம் நான் ராஜேஷுக்கு சொல்ல வரவில்லை.  … Read more