26 ஜனவரி: ஹிந்து இலக்கிய விழா

இன்று ஒரு இளம் நண்பனைச் சந்தித்தேன். மருத்துவ மாணவன். 26ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் ஹிந்து இலக்கிய விழாவில் நான் பேசுகிறேன், வந்து விடுங்கள் என்றேன். அப்படியா, எனக்குத் தெரியாதே என்றார். அப்படியானால் நீங்கள் என் இணையதளத்தைப் படிப்பதில்லையா என்று கேட்டேன். இல்லை என்றார். காரணத்தைப் பிறகு சொல்கிறேன் என்றார். எனக்குக் காரணம் தேவையில்லை. என் இணையதளத்தை தினமும் படிக்க ஐந்து நிமிடம் ஆகும். நான் இலவசமாக இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன். மாதம் பத்து பேர்தான் சந்தா … Read more

பயன் பெறுங்கள்…

இன்று புத்தக விழாவின் மூத்திர சந்தில் அமைந்துள்ள ஸீரோ டிகிரி அரங்கில் அமர்ந்திருந்தபோது என் சக எழுத்தாளர் ஒருவர் ஒரு நண்பரிடம் தனக்கு முப்பது ஆண்டுகளாக சர்க்கரை வியாதி இருப்பதாகவும், அதனோடுதான் தான் வாழ்ந்து வருவதாகவும் சொன்னபோது மிகவும் வருத்தம் அடைந்தேன். நான் இங்கே என்னுடைய இந்த இணையதளத்தில் சர்க்கரை வியாதி உள்ள எல்லோரையும் கூவிக் கூவி அழைத்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பர் சித்த மருத்துவர் பாஸ்கரன் ஒவ்வொரு சர்க்கரை வியாதிக்காரரையும் சவால்விட்டு குணப்படுத்திக்கொண்டிருக்கிறார். சர்க்கரை வியாதி முற்றி … Read more

இன்றைய புத்தக விழா

இன்று (18.1.2024) புத்தக விழாவுக்கு மாலை நான்கு மணிக்கு வருவேன். எட்டரை வரை ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். ஸீரோ டிகிரி அரங்கை எளிதில் கண்டுபிடித்து விடலாம். புத்தக விழாவிலேயே எலிப் பொந்து மாதிரி ஒரு அரங்கு இருக்கும். அதுதான் ஸீரோ டிகிரி அரங்கு. இன்னொரு அடையாளம், அரங்கு எதிரிலேயே கக்கூஸ் இருக்கும். அரங்கு எண் 598 C.