காதலர் தினச் செய்தி

Ullasa: An Erotic Tale நாவலில் சுமார் எண்பது பக்கங்களை எழுதி முடித்தேன். அதில் ஒரு இருபது பக்கங்களை மூன்று நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். நாவல் மொத்தமாக இருநூறு பக்கங்கள் வரலாம். இந்த எண்பது பக்கங்களில் காமம் கொஞ்சம்தான். காதல்தான் நிரம்பி வழிகிறது. கடைசி ஐம்பது பக்கங்கள் காமம் மட்டுமே இருக்கும் என்கிறது நாவலுக்கான வரைபடம். ஒரு வரைபடத்தோடுதான் இந்த நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதனால் தலைப்புகூட கடைசியில் மாறலாம். பதிப்பாளர் என்ன சொல்கிறாரோ அதுவே நடக்கும். நாவலின் … Read more

குகை வாழ்க்கை

ஆம், குகை வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும்.  வெளியுலகத் தொடர்பே இல்லை.  யாரோடும் பேசுவதில்லை.  வழக்கமாக சீனியோடு தினமும் பேசுவேன்.  ஆனால் உல்லாசம் நாவலுக்கான ’ஃபீல்ட் வொர்க்’ முடிந்து திரும்பிய பிறகு சீனியோடும் பேசவில்லை. காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கொள்கிறேன்.  ஒரு மணி நேரம் என்னுடைய காலை வேலைகள், பூனைகளுக்கு உணவிடுதல் போன்றவற்றில் போய் விடும்.  பிறகு ஏழு மணி வரை எழுத்து (தியாகராஜா).  ஏழிலிருந்து எட்டரை வரை நடை.  கோடை வந்தால் இந்த நடை … Read more

தங்க பஸ்பம்

ஒரு வார காலம் ஒரு மலைவாசஸ்தலத்துக்குச் சென்றிருந்தேன். அதன் விவரங்கள் யாவும் என்னுடைய உல்லாசம் நாவலில் விரிவாக இடம் பெறும். Ullāsa : An Erotic Novel என்ற தலைப்பில் அதை நான் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்திய ஆங்கில இலக்கிய உலகம் நூறு ஆண்டுகள் பழமையில் வாழ்வதால் அதை ஆங்கிலத்தில் வெளியிடுவார்களா என்று தெரியாது. பிரிட்டனிலோ அமெரிக்காவிலோ வெளியிடுவதற்கான தொடர்புகள் எனக்கு இல்லை. ஆனால் பெண்கள் எழுதினால் உடனடியாக இந்தியாவிலேயே வெளியாகும். அதற்கு எந்தத் தடையும் இல்லை. … Read more