வருகின்ற ஆறாம் தேதி (ஜூன் 6) மாலை ஆறரை மணிக்கு நம்முடைய வாசகர் வட்டச் சந்திப்பு வைக்க முடிவு செய்திருக்கிறேன். வர விரும்பும் வாசகர்கள் எனக்கு எழுதவும். ஓரளவு ட்ரஸ் கோட் பின்பற்றினால் நலம். பப்புக்குப் போகும்போது லுங்கியோடு செல்வதில்லை அல்லவா? அந்த மாதிரி ஒரு சின்ன அட்ஜஸ்ட்மெண்ட். அவ்வளவுதான். ஆண்கள் மற்றும் பெண்கள் முண்டா பனியனைத் தவிர்க்கவும். மற்றபடி காலர் வைத்த சட்டையெல்லாம் தேவையில்லை. பேசும் போது சுய அறிமுகம் என்று பெரிய சொற்பொழிவு செய்யாதீர்கள். ஒரு சின்ன அறிமுகம் போதும்.
charu.nivedita.india@gmail.com