யாமிருக்க பயமே

சாருவுக்குப் பிடிக்கும் என்று முகநூலில் யுவகிருஷ்ணா சிபாரிசு செய்திருந்த ஒரே காரணத்தால் யாமிருக்க பயமே பார்த்தேன்.  யுவாவுக்கு என் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை.

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் ஒரு காட்சி வரும்.  ஊர் முழுவதுமே எடுப்புக் கக்கூஸ்தான்.  அதையெல்லாம் ஒரு பிரம்புக் கூடையில் அள்ளி ஒரு பெரிய ட்ரம்மில் போட்டு, கடைசியாக பீ சந்து என்ற சந்தில் வைத்து அந்த ட்ரம்மையெல்லாம் லாரியில் கொட்டுவார்கள்.  அந்தப் பீ சந்து சிவன் கோவிலின் இடது பக்கம் உள்ள பிரம்மாண்டமான சிவன் குளத்தின் எதிரில் உள்ளது.  ஒருநாள் என்ன ஆயிற்று என்றால் – எனக்கு இன்னமும் ஞாபகம் உள்ளது – அப்படி ஊர் மக்களின் பீயை அள்ளிக் கொண்டு போன லாரி வெட்டாற்றுப் பாலத்தில் சரிந்து விட்டது.  அதாவது, லாரியின் பின்பக்கம் உள்ள லோடு பகுதி சரிந்து விட்டது.  அப்போது காரைக்காலுக்கும் நாகூருக்கும் உள்ள ஒரே தொடர்பு அந்தப் பாலம் தான்.  அதனால் அவசர வேலை இருப்பவர்களின் வாகனங்கள் அந்தப் பீச்சகதியின் மேல் ஏறிப் போய் ஊரையே நாற அடித்தார்கள்.  ஊரே வாந்தி எடுத்தது.

யாமிருக்க பயமே எனக்கு அந்தப் பீப் புயலை ஞாபகப்படுத்தியது.  படத்திலேயே ஒருவர் பச்சையாக இன்னொருத்தர் மீது வாந்தி எடுக்கிறார்.  fetish என்பதன் உச்சக்கட்டம் இந்தப் படம்.  இப்படி ஒரு அருவருப்பான, ஆபாசமான, வக்கிரமான படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.  மலத்தைக் கரைத்து நம் மூஞ்சியில் ஊற்றியிருக்கிறார் இயக்குனர்.  வன்மையாகக் கண்டிக்கிறேன்…

Comments are closed.