ரஜினிகாந்த் கண்டக்டராக இருந்த போது அவரோடு வேலை பார்த்த சக கண்டக்டர்கள் இருந்திருப்பார்கள். இப்போதும் அவர்கள் கண்டக்டர்கள்தான். என்ன, ரிட்டயர்ட் கண்டக்டர்கள். ரஜினி நல்லவர் இல்லையா? அதனால் ரஜினி அவர்களை மறக்கவில்லை. வருடத்துக்கு ஒரு தபா அவர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து குவாட்டர் ஓல்ட் மாங்க்கும் குவாட்டர் சிக்கன் பிரியாணியும் வாங்கிக் கொடுத்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு, பழைய வாழ்க்கை பற்றி சிரித்துப் பேசி விட்டு அனுப்பி விடுவார். அந்தக் கண்டக்டர்களுக்கு அது ஒரு வாழ்நாள் கொண்டாட்டம்.
ஆனால் நான் அப்படி இல்லை. நான் கண்டக்டராக இருந்தபோது என்னோடு பழகிய சக கண்டக்டர்களுக்கு நான் சூப்பர் ஸ்டார் ஆன பிறகும் ரெமி மார்ட்டினும் சீலே வைனும் வாங்கித் தந்து அவர்களோடு கூடிக் குலாவிக்கொண்டிருக்கிறேன். அதிலும் வருடாந்தரத் திதி மாதிரி அல்ல. எப்போது பார்த்தாலும் அப்போது. அதாவது, சுருக்கமாகச் சொன்னால், கண்டக்டராக இருந்த போது இருந்த அதே சாருதான் இப்போது சூப்பர் ஸ்டார் சாருவும். என்னைப் பொருத்தவரை எந்த மாற்றமும் இல்லை. கண்டக்டரோ சூப்பர் ஸ்டாரோ என்னை அகவயமாகவோ புறவயமாகவோ அது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. நான் எப்போதும் போலவே கல்லறையில் உறங்கும் மனிதனைப் போலவே வாழ்கிறேன்.
அப்படிப்பட்ட பழைய கண்டக்டர் தோழர்களில் ஒருவர்தான் கவிஞர் ராஜ சுந்தர்ராஜன் என்பவர். ஒருமுறை அவரை பிச்சாவரம் வரவழைத்து உலகத்தில் உள்ள எல்லா விலையுயர்ந்த சரக்குகளையும் கொடுத்துப் பாராட்டு செய்தார் அராத்து. சாருவின் பழைய கண்டக்டர் நண்பர் என்பதால் கிடைத்த மரியாதை. அது பிச்சாவரத்தோடு முடியாமல் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.
இதற்கிடையில் ராஜ சு. ஒரு ஃபேஸ்புக் பதிவில் என்னை ங்கோத்தா ங்கொம்மா என்ற ரேஞ்ஜில் திட்டி ஒரு பதிவைப் போட்டிருந்தார். அப்போதே அவரை நான் ப்ளாக் பண்ணி விட்டேன். ஆனாலும் ராஜ சுந்தர்ராஜன் விடாமல் கூட்டங்களிலும் ஃபேஸ்புக்கிலும் என்னைப் பற்றி ஏதாவது பொல்லாங்கு எழுதிக்கொண்டே இருப்பார்.
ஆச்சரியம் என்னவென்றால், அவர் யாரையுமே திட்டும் வழக்கம் இல்லாதவர். மென்மையானவர். எல்லோருக்குமே அவரைப் பிடிக்கும். எல்லோருக்குமே இனியவர். அப்புறம் ஏண்டா என்னை நெருங்கினால் மட்டும் உங்கள் சாமான் நட்டுக்கொண்டு விடுகிறது என்று எனக்குக் கேட்கத் தோன்றுகிறது.
ஆனால் நானே இதற்கு பதில் எழுதியிருக்கிறேன். சோற்றில் கை வைத்தால் சோறு புழுவாக மாறிவிடும் துரியோதன்னின் சாபம் மாதிரி எனக்கு ஒரு சாபம்; வள்ளலாராகவே இருந்தாலும் என்னைக் கத்தியால் குத்தி விடுவான். வெளி ரங்கராஜன் என்று ஒருவர். அவர் வாழ்க்கையில் யாரையுமே விமர்சித்ததோ திட்டியதோ இல்லை. மகாத்மா. அவரும் என்னை அவதூறு செய்து எழுதியிருக்கிறார். இத்தனைக்கும் என்னை அவதூறு செய்து எழுதும் யாரையுமே கோபப்படுத்துவது போல நான் எதுவுமே எழுதியிருக்க மாட்டேன். ஏதோ போகிற போக்கில் கல்லெறிந்து விட்டுப் போவார்கள். அப்படிப் போகிறவர்கள் பெரும்பாலும் வள்ளலார், காந்தி, ரமணர் போன்ற மகாத்மாக்கள். இதுதான் என் சாபம்.
ஒரு இலக்கியக் கூட்டத்தில் சம்பந்தமே இல்லாமல் என் பெயரை இழுத்துத் திட்டி, அந்தக் கூட்டத்தின் நிர்வாகியிடம் செருப்படி வாங்கியவர் இந்த ராஜ. சுந்தர்ராஜன். இது சில மாதங்களுக்கு முன் நடந்தது.
இன்னொரு விஷயம். நீங்கள் ஃபேஸ்புக்கில் ”சாரு நிவேதிதாவை நேற்று பார்த்தேன்” என்று நாலு வார்த்தைகளை எழுதுங்களேன். அந்தப் பொறுக்கியை ஏன் பார்த்தீர்கள் என்று தொடங்கி என்னை ங்கொம்மா, ங்கோத்தா என்று சம்பந்தமே இல்லாமல் நூறு பேர் பின்னூட்டத்தில் என்னை ஆபாசமாகத் திட்டியிருப்பார்கள்.
அப்படித்தான் நேற்றும் நடந்திருக்கிறது. ஜ்யோவ்ராம் சுந்தர் ராஸ லீலாவையும் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் போஸ்ட் ஆஃபீஸ் நாவலையும் குறிப்பிட்டு ராஸ லீலா ப்யூக்கின் நாவலை விட எவ்வளவோ மேல் என்று எழுதினார். உடனே ராஜ சுந்தர்ராஜன் வந்து விட்டார். பின்னூட்ட்த்தில் சாருவின் ராஸ லீலா ப்யூக்கின் போஸ்ட் ஆஃபீஸின் காப்பி என்று எழுதுகிறார். அதுவும் எப்படி?
அதற்குள் செல்வதற்கு முன் இன்னொரு முக்கியமில்லாத, மூட நம்பிக்கை சார்ந்த விஷயம். இதை நம்பாதவர்கள் என்னை முட்டாள் என்று சொல்லி விட்டுக் கடந்து சென்று விடலாம். கவலைப்பட மாட்டேன்.
என்னை அவமதிப்பவர்களுக்கு உடனடியாக
ஏதோ ஒரு தீங்கு வந்து சேர்கிறது. இதைக் கண்கூடாக
நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். என்னுடைய
நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள யாராலும் என்னை அவமதித்துப் பேச முடியாது. ஆனாலும் உரிமை எடுத்துக்கொண்டு அவமதிக்கும் சிலருக்கு
உடனடியாகக் கிடைக்கும் தீமைக்கு நான் சாட்சியாக இருக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக, “நீ ஒரு சுயநலக்காரன்” என்று ஒருவர் என்னைப்
பார்த்துச் சொன்னால் அதை நான் மிகப் பெரிய அவமதிப்பாக எடுத்துக் கொள்கிறேன். வருத்தமடைகிறேன். அப்படிச் சொன்னவருக்கு ஏதும் ஆகி விடக் கூடாதே என்ற
பதற்றம் ஏற்படுகிறது. ஆனாலும் மறுநாளிலிருந்தே
அந்த நபர் டைஃபாய்டில் படுத்து விடுகிறார்.
இப்படி ஒருமுறை நடந்தால் சந்தர்ப்பவசம் என்று எடுத்துக் கொள்ளலாம். எக்கச்சக்கமாகப் பார்த்து விட்டேன். ஸீரோ டிகிரியை நாங்கள்தான் சாருவுக்கு எழுதிக் கொடுத்தோம்
என்று சொன்னவர்களின் இன்றைய நிலை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இப்படி எழுதுவதற்காக பிரபஞ்ச சக்தியிடம் மன்னிப்புக்
கேட்டுக் கொள்கிறேன். இருபத்தைந்து ஆண்டு வலியின்
வெளிப்பாடு இந்த வார்த்தைகள். இன்றைக்கு வந்து
“நான் எழுதிக்கொடுக்கவில்லை” என்று சொல்லலாம்.
இருபத்தைந்து ஆண்டுகளாக ஏண்டா வாயையும் சூவையும் மூடிக்கொண்டிருந்தாய் என்று
எனக்குத் கேட்கத் தோன்றுவது நியாயம்தானே?
அதனால்தான் இறை சக்தியிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். ராஜ சுந்தர்ராஜன் ஏற்கனவே பலவிதமான இன்னல்களிலும் மன நோய்மைகளிலும் வாழ்பவர். அவருக்கு மேலும் இன்னல் நேரக் கூடாது.
இனி அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியது:
போஸ்ட் ஆஃபீஸ் / ராஸலீலா – அவதூறு.
ஜ்யோவ்ராம் சுந்தர், ப்யூக்கின் போஸ்ட் ஆஃபீஸையும் சாருவின் ராஸ லீலாவையும் ஒப்பிட்டு, சாரு ப்யூக்குக்கு பல படிகள் மேலே உள்ளார் என எழுதியிருந்தார். அதற்கு நண்பர் ராஜ சுந்தரராஜன் இப்படி கமெண்ட் இட்டு இருந்தார்.
“அதன் நகல் இது என்று தமிழில் அதிகம் நாவல் வாசித்த ஒரு நூலகர் சொன்னார். இரண்டையுமே வாசித்திராத எனக்குத் தெளிவில்லை.”
இதைப்போல கமெண்ட் இடுபவர் அல்ல ராஜ சுந்தரராஜன். சாரு சொல்வது போல சாரு என்றால் வள்ளலாரும் கொலைகாரராக மாறிவிடுவார் போல 🙂
1. இரண்டையுமே வாசிக்காத ஒருவருக்கு எப்படி தெளிவு வரும் 🙂 இதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவ்வளவுதானே. ஒன்றுமே தெரியாது எனில் என்ன செய்ய வேண்டும்? சும்மா இருந்தால் போதுமானது.
2. ஒரு இலக்கிய படைப்பைப் பற்றி விமர்சனம் வைக்கும்போது, நாம் படித்துப் பார்த்து விட்டு, குப்பை எனக்கூடச் சொல்லலாம். அடுத்த வீட்டு அங்கம்மா சொல்லிச்சி, பக்கத்து வீட்டு பரிமளம் சொல்லிச்சி போன்ற காஸிப்களுக்கும், நூலகர் சொன்னார் எனச் சொல்வதற்கும் என்ன வித்தியாசம்? அதிலும் “அதிகம் நாவல் வாசித்த” என்ற கெத்து வேறு சேர்த்து.
எழுத்தாளன் இயங்குவது கிரியேட்டிவ் ஏரியாவில். அதில் போய் காப்பி என எதுவும் தெரியாமல் யாரோ சொன்னதாகச் சொல்வது அந்த எழுத்தாளனை கேவலமாக அவமானப்படுத்துவது ஆகும். கொஞ்சமும் சென்ஸிபிளிட்டி இல்லாத பொறுப்பற்றத்தனம். உதாரணமாக, பல பேர போட்ட ஒருத்தரு அந்தப் பொண்ணப் பாத்த ஒடனே தேவடியான்னுடாரு, எனக்கு எதும் தெரியாது. அவர் சொன்னதச் சொன்னேன் என்றால் எப்படி இருக்கும்? எதுவாக இருந்தாலும் மேட்டர் உதாரணம் சொன்னால்தான் எல்லோருக்கும் புரியும் என்பதால் இந்த உதாரணம்.
3. சாரு விஷயத்தில் இது ஏனோ தொடர்ந்து நடந்து வருகிறது. ஜீரோ டிகிரி நான்தான் எழுதிக்கொடுத்தேன் என பலகாலம் சொல்லிக்கொண்டும், எழுதியும் இருந்த பிரேம் சமீபத்தில்தான் அதை ஒரு பேட்டியில் மறுத்திருந்தார்.
உலகம் எப்போதும் அவதூறைத்தான் நம்பிக்கொண்டிருக்கும், நம்ப விரும்பும். இப்போது ராஸ லீலாவை படிக்காமலேயே நகல் என கமென்ட் போட்டிருக்கிறார் ராஜ சுந்தரராஜன். இதைப்போன்ற மனங்கள் செயல்படும் விதங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
4. நான் இரண்டையும் படித்திருக்கிறேன். இரண்டிலும் கதை நாயகர்கள் போஸ்ட் ஆஃபீஸில் வேலை செய்வார்கள் என்பதைத் தாண்டி இதற்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை. கதை நாயகன் போலீஸ் அல்லது ரௌடி என்பதாலோ, கதையில் காதல் இருக்கிறது என்பதாலோ காப்பி எனச் சொன்னால், தமிழின் எண்பது சதவீதம் படங்களைக் காப்பி எனச் சொல்லி விடலாம். என்னங்கடா இது இலக்கியத்துக்கு வந்த சோதனை 🙂
5. போஸ்ட் ஆஃபீஸில், முழுக்க முழுக்க ப்யூக்கின் கதை தன்னிலையில் போகும். ராஸலீலாவில் கதாசிரியர்தான் கண்ணாயிரம் பெருமாளை வைத்துக் கதை சொல்லுவார்.
6. போஸ்ட் ஆஃபீஸில் , கதை மரண வேகத்தில் போகும். புது விதமான சம்பவங்கள், இதுவரை சொல்லப்படாத சம்பவங்கள், நிர்வாண உண்மைகள் அப்பட்டமாக இருந்தாலும் அது கொஞ்சமாக டாக்குமெண்டரி ஃபீல் கொடுக்கும். ஆட்டோ ஃபிக்ஷன்தான் என்றாலும் கலைத்தன்மை அதில் கொஞ்சம் குறைவு. இதைச் சொல்வது போஸ்ட் ஆஃபீஸை குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல. அதுவரை சொல்லப்படாத மொழியில், சொல்லப்படாத முறையில் எழுதப்பட்ட அசுரப்பாய்ச்சல்தான் போஸ்ட் ஆஃபீஸ். ஒரு ஒப்பீட்டுக்காகச் சொன்னேன்.
7. ராஸ லீலாவில் கதை அதே மரண வேகத்தில் போகும். எடுத்தால் வைக்க முடியாது. புத்தகத்தில் இருந்து உடலுக்கு மின்சாரம் பாய்ந்துகொண்டே இருக்கும். கண்ணாயிரம் பெருமாள் தவிர இதுவரை தமிழ்ச் சமூகம் பார்த்தேயிராத, (அதாவது நாவல்களில்) கதாபாத்திரங்கள் கணக்கில் அடங்காமல் வரும்.
8. போஸ்ட் ஆஃபீஸும் ஒரு பின்நவீனத்துவப் படைப்புதான் என்றாலும் அது கிட்டத்தட்ட லீனியர் முறை கதை சொல்லல்தான். ராஸ லீலா முழுக்க முழுக்க நான் லீனியர்.
9. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக ராஸ லீலாவில் மொழி விளையாட்டு உச்சத்தில் இருக்கும். இப்படி ஒரு கொண்டாட்டமான துள்ளலான தமிழ் மொழியை நான் இதற்கு முன் வாசித்ததில்லை. கலை சிருஷ்டி எனத் துருத்திக்கொண்டுத் தெரியாமல் பல இடங்கள் கலையின் உச்சத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும். சில பக்கங்கள் வண்ண ஓவியம் போல ஆகி விடும்.
10. கடைசியாக ஒரு நாவல் என்பது கதை மட்டும் அல்ல. அது ஒரு தாட் ப்ராஸஸ். ராஸ லீலா படித்து ரசிக்க மட்டுமல்ல, வாழ்வை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்ளவும் சொல்லிக்கொடுக்கும். மனிதர்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டும். எனக்குத் தனிப்பட்ட முறையில் எழுதவும் சொல்லிக் கொடுத்தது ராஸ லீலா. இதுவரையில் நான் எழுதிய அனைத்து எழுத்துக்களுக்கும் ஆணிவேர் ராஸ லீலா மற்றும் எக்ஸிஸ்டென்ஷனியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்தான். ஆணி வேர் எனில் சாருவின் எழுத்து ஸ்டைலை காப்பியடிப்பது அல்ல. அவரின் ரசத்தை உறிஞ்சிக் கொள்வது. ரசம் எனத் தமிழில் சொன்னது புரியவில்லை எனில் essence என படித்துக்கொள்ளலாம்.
சாருவின் ரசம் என்றால், அவர் கடந்த ஐம்பது வருடங்களாகப் படித்த உலக இலக்கியங்கள், தத்துவங்கள் மற்றும் அதை வைத்து அவர் ப்ராஸஸ் செய்து எழுத்தில் எந்த விதத்தில், எந்தப் பார்வையில், எப்படி வெளிப்படுத்தியது என பலதும் அடங்கும்.