என்னா சார் டல்லா இருக்கீங்க? (இன்னொருவர் தொடர்கிறார்)


இந்த அடையாறு காந்தி நகர் வீட்டுக்குக் குடிபெயர்ந்து மூணு நாலு மாதம் ஆகியிருக்கும். பழைய சாந்தோம் வீட்டின் தொடர்பு விடவில்லை.  அங்கே வளரும் பத்து பூனைகளுக்குமான உணவு போய்க்கொண்டுதான் இருக்கிறது.  உணவு இடும் வேலை அந்தக் குடியிருப்பில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் அந்தோனியினுடையது.  அதற்கும் அவருக்கு உரிய ஊதியம் கொடுத்து விடுகிறேன்.  எல்லாம் அவந்திகா மூலம் நடக்கிறது.  பணம் கொடுப்பது மட்டுமே நான்.

இரண்டு தினங்களுக்கு முன்பு அந்தோனி என் வீட்டுக்கு வந்தார், பொங்கல் பணம் வாங்குவதற்காக. இப்படியான பொதுஜனம் வரும்போது நான் என் அறையை விட்டு வெளியே வராமல் நான் பாட்டுக்கு எழுதிக்கொண்டிருப்பதே வழக்கம்.  அன்றும் அறையிலிருந்தே ”வாங்க அந்தோனி, சௌக்கியமா?” என்று கேட்டு விட்டு என் பணியைத் தொடர்ந்தேன்.  என் அறை எப்போதும் திறந்தே இருக்கும்.  அவர் என் அறைக்குள் வந்தார்.  மிகவும் அன்பான மனிதர்.  அவரைப் பார்த்தே நாலு மாதம் இருக்கும்.  அதனால் நேரில் குசலம் விசாரித்து விட உள்ளே வந்திருக்கிறார்.  எழுந்து நின்றேன்.

“என்ன சார், டல்லா இருக்கீங்க?”

இதுதான் அவர் கேட்ட கேள்வி.

இப்படிக் கேட்டால் எங்கள் ஊரில் அம்மாவை இழுத்துச் சொல்லும் ஒரு வசையைத்தான் பதிலாகச் சொல்லுவார்கள்.  எனக்கும் அதுதான் தோன்றியது.  ஏற்கனவே நான் புத்தக விழாவில் இப்படி பல நல்லாத்மாக்களிடம் குப்பி (assfuck) வாங்கி நொந்து போயிருந்ததால் கொலைவெறியில் இருந்தேன்.  ஆனாலும் நான் கனவான்.  அப்படியெல்லாம் கெட்ட வார்த்தை பேசக் கூடாது.  பேசினால் அவந்திகா வேறு பர்வெர்ட் என்று என்னைத் திட்டுவாள்.  அதனால் பேசாமல் pimp மாதிரி சிரித்துவிட்டு என் வேலையைத் தொடர்ந்தேன்.

இந்த நிலையில் என் வாசகி செந்தமிழ் அனுப்பியுள்ள வாட்ஸப் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   

 
ஹாய் சாரு ப்ளாகில்,  ‘டல்’ குறித்து பத்து நாட்களுக்குள் மூன்று  கட்டுரைகள் வந்துவிட்டன. முதலில் ‘டல்’ என்றால் என்ன என்று எனக்கொரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ‘டல்’ என்பதற்கு வெவ்வேறு அர்த்தங்களை என்னைச் சுற்றியுள்ளவர்கள் வைத்திருக்கிறார்கள். வழக்கம்போல் இல்லாமல் முகம் சற்று வாடியிருந்தால் ‘டல்’ என்று பொதுவாகச் சொல்வார்கள். இம்முறை பொங்கலுக்கு வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் என்னைக் குறிப்பிட்டு, “ஏன் டல்லாய்ட்டா பாப்பா?” என்று என் அம்மாவிடம் கேட்டார். எனக்கொன்றும் புரியவில்லை. நல்லாத்தான இருக்கோம் என்று நினைத்துக் கொண்டேன். “பொங்கல் வேல ஜாஸ்தி. அதான் கொஞ்சம் எளச்சிட்டா” என்று அம்மா அவரிடம் கூறினார். அவர்கள் ஊரில் உடல் இளைத்திருந்தால் ‘டல்’ என்று சொல்வார்களாம். 

இன்று தோழி ஒருவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவளைப் பார்த்ததும் உறவினர் ஒருவர் “ஏன் டல்லா இருக்க” என்று கேட்டாராம். எனக்கு உங்கள் ஞாபகம் வந்து அவர் எந்த அர்த்தத்தில் டல் என்று கேட்டார், அதற்கு நீ என்ன சொன்னாய் என்று கேட்டேன். “இன்னைக்கு மூஞ்சிக்கு எதும் போடல. அதான் அப்டி இருக்கு ” என்று சொன்னாளாம். மூஞ்சிக்கு பவுடர் கூட அடிக்காம இருந்தா அப்டி கேப்பாங்க என்றாள். நீங்கள், ஒருவரைப் பார்த்து “ஏன் டல்லா இருக்க?” என்று கேட்பது body shaming என்கிறீர்கள். உங்கள் கட்டுரையை வாசிக்கும் வரை எனக்கு அப்படி ஒரு விஷயமே தெரியாது. உங்களைப் பார்த்து எந்த அர்த்தத்தில் அவர்கள் ‘டல்’ என்கிறார்கள் சாரு. நேரமிருக்கும் பொழுது ‘டல்’ என்றால் என்ன என்று எனக்கு கொஞ்சம் விளக்க முடியுமா? உண்மையிலே எனக்கு அதன் அர்த்தம் தெரியவில்லை.

செந்தமிழ்

அம்மா செந்தமிழ், எனக்கும் அதன் அர்த்தம் விளங்கவில்லை.  ஆனால் ஒன்று விளங்குகிறது.  ஏன் இந்தியர்கள் மேற்கத்திய நாடுகளுக்குப் போனால் செருப்படி வாங்குகிறார்கள் என்று.  இப்படித்தான் அவர்களிடம் ஏடாகூடமாக ஏதாவது கேட்டு அவமானப்பட்டு நம் தேசத்தின் பெயரையும் கெடுக்கிறார்கள்.  சமயங்களில் கொலை வரை கூட போகிறது.  ஒரு மதுபானக் கூடத்தில் சத்தம் போட்டுப் பேசிய ஒரு தெலுங்கு இளைஞனை ஒரு அமெரிக்கன் சுட்டுக் கொன்றது அப்படித்தான். 

ஒன்று மட்டும் நிச்சயம்.  தமிழ் சமூகம் ஒரு மனநோய் பீடித்த சமூகம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. 

***

நேற்று ஒரு வாசக நண்பர் ஒரு நன்கொடை அனுப்பியிருந்தார். பெயர் இல்லை. ஊர் இல்லை. பணம் மட்டும் வந்திருந்தது. அப்போதுதான் எனக்கு சமீப காலத்தில் நான் சந்தா/நன்கொடை பற்றி எழுதி யாருக்கும் ஞாபகப்படுத்தவில்லை என்பது ஞாபகம் வந்தது.

முடிந்தவர்கள் அனுப்புங்கள். மாதம் முப்பதாயிரத்துக்குக் கீழே ஊதியம் வாங்குபவர்கள், வருமானம் இல்லாத குடும்பத் தலைவிகள், மாணவர்கள், என் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் யாரும் பணம் அனுப்ப வேண்டாம். என் நண்பர்கள்தான் என் வாழ்வை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் முடிந்தால் அனுப்புங்கள்.

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai