கோமாளி ஆக்குதல்: அராத்து

தமிழ்நாட்டில் ஒரு நோய் இருக்கிறது. எதிராளியை, தன் கருத்துக்கு, ரசனைக்கு ஒவ்வாவதவர்களைக் கோமாளி ஆக்குவது. அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம் என அனைத்திலும் இந்த நோய் பரவியிருக்கிறது. ஏன் தமிழ்நாட்டில் எனச் சொல்கிறேன் என்றால், எல்லோரும் இதைச் செய்கிறார்கள். உதாரணத்திற்கு திமுக ஒருவரை கோமாளியாகச் சித்தரிக்கிறது எனில், பதிலுக்கு எதிர்த்தரப்பு ஸ்டாலின் வாய் தவறதுலாகப் பேசிய விடியோவை பரப்பு பரப்பு எனப் பரப்பி அவரை கோமாளியாகச் சித்தரிக்கிறது. திமுக, அதிமுக இரண்டும் விஜயகாந்தை கோமாளியாகச் சித்தரித்தது நினைவிருக்கலாம். இப்போது சீமான், அண்ணாமலை, திருமா, அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் , உதயநிதி, அன்புநிதி (அன்புநிதிதானே?) என அனைவரையும் கோமாளியாக சித்தரிக்கும் விடியோக்கள்தான் பல பார்வைகளைப் பெறுகின்றன. நரேந்திரா மற்றும் நிர்மலாவை கோமாளிகளாகச் சித்தரிக்கும் விடியோக்கள் எனக்கே பர்ஸ்னலாக பிடித்தவைகள் எனினும், இவை மட்டுமே ஒரு ஆரோக்கியமான சூழலுக்கு உகந்தவைகளா? எல்லோரையும் கோமாளிகளாகச் சித்தரித்து, அவர்களில் எவருக்கோ ஓட்டுப்போட்டு , அவர்களில் எவரோ நம்மை ஆளவைத்துப் பார்க்கும் நாம் கோமாளிகளா? அவர்கள் கோமாளிகளா?

இலக்கிய உலகில் நீண்ட காலமாக சாரு நிவேதிதாவை கோமாளியாகச் சித்தரித்து வந்தார்கள். சிறுபத்திரிகை முதற்கொண்டு விகடன் போன்ற கமர்ஷியல் பத்திரிகை வரை வித்தியாசமே இல்லை. பத்திரிகை அல்லாமல் ஒரு வருடத்தில் 12 புத்தகங்கள் விற்கும் அல்லக்கை அறிவுஜீவி இலக்கியவாதிகள் எல்லாமும் சாரு நிவேதிதாவை கோமாளியாகவே சித்தரித்து வந்தார்கள். ஏன் கோமாளியாக சித்தரிப்பது ஒரு நோய் என்றால்….

1. ஒருவரின் கருத்தையோ, புதுமையாக முன்வைத்தலையோ எதிர்கொள்ளத் துப்பில்லாத மலட்டுத்தனம்.

2. மடாதிபதிகள் போன்ற மேட்டிமைத்தனம். தொடர்ச்சியாக ஒருவர் குஞ்சை ஒருவர் நக்கி நக்கி ஊம்பிக்கொண்டு குழுவாக ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருப்பதை விட தனித்தன்மையுடன் ஒருவன் செய்வது கோமாளித்தனம் எனில் அதுவே இன்றைய தேவை.

இதை ஏன் நோய் எனச் சொல்கிறேன் என்பதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. இப்படி ஏதோ ஒரு கட்சி, இயக்கம், குழுமம் , இலக்கியக் குழு இதிலிருந்து எல்லாம் அடுத்தவரை கோமாளி என சித்தரிப்பவர்களுக்கு எல்லாம் பொதுவாக அடிமை மனோபாவம் ஊறிப்போய் இருக்கும். அந்த அடிமை மனோபாவத்தோடு, சக அடிமைகளோடு இணைந்துதான் அவர்களால் உயிர் வாழ முடியும். தனியாக எதையும் சிந்திக்கவும் முடியாது, செயல்படுத்தவும் முடியாது. ஒரு மாதிரி குரூப் செக்ஸ் என்று வையுங்களேன் 🙂 இனி செக்ஸும் இவர்களுக்குள் இப்படித்தான் ஆகும். தனியா செய்ய முடியல, ஒத்த கருத்துள்ளவங்க ஒண்ணா செய்யலாம் வாங்க என ஏற்பாடு செய்துகொள்வார்கள் என நினைக்கிறேன்.

யாரையாவது போற்றி, வாழ்க போட்டு, ஏதேனும் கொள்கைக்கு , இலக்கிய வழிமுறைக்கு ஜிந்தாபாத் போட்டு, ஜட்டிக்குள் பார்த்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன். எனக்கும் இதேதான் நைஸாக நடந்துகொண்டிருக்கிறது. லேஸு பாஸாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக , ஹி ஹி , ஹா ஹா என சொல்லிக்கொண்டு திரிந்துகொண்டிருக்கிறார்கள். நேரில் பார்க்கையில் எண்சாண் உடம்பு ஐந்து சாண் உடம்பாகக் குறுகி, நல்ல புன்னகையை முகத்தில் தேற்றி, கை கொடுத்து அமுக்கி அன்புடன் பிரிகிறார்கள்.

என்னிடம் நேரிலும், ஆன்லைனிலும் ஒரே மாதிரி இருங்கள். இல்லையெனில் நேரில் செருப்படிதான் என முடிவெடுத்து இருக்கிறேன். நான் சாக்ஸ் போடாமல் ஷூ போடுபவன், கழட்டுவது சுலபம்.

இதோடு ஒரு அராத்து நீதிக்கதை சொல்லி முடிக்கலாம்….

ஒரு ஆசாமி என்னை நான் இல்லாத போது கேவலமாகத் திட்டி இருக்கிறார். என்னை நேரில் பார்க்கையில் என் குறியை சப்பும் அளவுக்குக் குனிந்து அன்பொழுகப் பேசிக்கொண்டு இருந்து அகன்றார். என்னை ஏற்கனவே திட்டி இருப்பதை நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். அவர் அகன்றதும், “ஏன் அராத்து , அவன்தான் இவ்ளோ கேவலமா திட்டி இருக்கான். இப்ப நடிக்கிறான். அவண்ட்ட ஏன் பேசிட்டு இருக்கீங்க?” என்றனர்.

“அவன் நான் இல்லாதப்ப என்ன வேணா திட்டி இருக்கட்டும். நேர்ல பம்முறான் இல்ல, இதான் என் பர்ஸ்னாலிட்டி, அவன் பர்ஸ்னாலிட்டி” என்றேன்.

இனி இந்த நீதிக்கதையையும் அழித்து விடலாம் என்று இருக்கிறேன். அஞ்சி பைசாவுக்கு புண்ணியம் இல்லாத இந்த பொழப்பு ஏண்டா / டி ஒங்களுக்கு 🙂