மேற்கண்ட நாடகம் மலையாள மொழிபெயர்ப்பில் வெளிவருகிறது. மொழிபெயர்ப்பு ரியாஸ் முஹம்மது. பொதுவாக என் மொழிபெயர்ப்பாளர்கள் யாருமே புத்தகத்தை மொழிபெயர்த்து முடிக்கும் வரை என்னைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மொழிபெயர்ப்பு முடிந்த பிறகு அது எனக்கும் பதிப்பாளருக்கும் போய் விடும். ஏதாவது தவறு இருந்தால் நான் பதிப்பாளருக்குத்தான் எழுத வேண்டி வரும்.
ரியாஸிடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அவர் தினந்தோறும் எனக்கு ஃபோன் செய்து சந்தேகங்களைக் கேட்டுக் கொள்வார். அவர் எனக்கு இறைவன் தந்த வரம். அந்தோனின் ஆர்த்தோ நாடகத்தை மலையாளம் தெரிந்தவர்கள் மலையாளத்தில் வாசித்துப் பாருங்கள். ஃபெப்ருவரியில் வெளியாகிறது.
அட்டைப் புகைப்படம்: பிரபு ராமகிருஷ்ணன்