திடீரென்று ஜெயசீலன் என்னை அழைத்தார். நீண்ட கால நண்பர். அவர் ஒரு யூட்யூப் சேனல் தொடங்கப் போகிறார். அதன் முதல் உரையாடலாக நானும் ஷோபா சக்தியும் பேச வேண்டும் என்பது அவரது விருப்பம். அப்படிப் பேசினால் அந்த உரையாடலை நிச்சயம் ஒரு லட்சம் பேர் பார்ப்பார்கள். சந்தேகமே இல்லை. “ஜெயசீலன், நான் உங்களுக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் அனுப்புகிறேன். அதைப் படித்து விட்டு அழையுங்கள்” என்றேன்.
அவருக்கு நான் அனுப்பிய மெஸேஜ் இதுதான்:
“நான் ‘இளம்’ எழுத்தாளராக இருந்தபோது எனது கொரில்லா நாவலுக்கு சென்னையில் விமர்சனக் கூட்டம். அப்போதெல்லாம் எனக்கும் சாருவுக்கும் தளபதி ரஜினி – மம்முட்டி ரேஞ்சில் நட்பு. (இப்போது ஞான ஒளி சிவாஜி – மேஜர் சுந்தரராஜனளவு நட்பு). கூட்டத்தில் சாரு நாவலை ‘இது இலக்கியமேயில்லை, வெறும் தகவல் தொகுப்பே’ என்று கறாராகப் பேசினார். அந்தக் காலகட்டத்தில்தான் சாரு ஸீரோ டிகிரி, ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்டது என வார்த்தையை விட்டிருந்தார். எனவே நானும் பதிலுக்கு ‘ஈழப் பிரச்சினையை ஸீரோ டிகிரி மாதிரி எழுதுமளவிற்கு எனக்கு இன்னும் அனுபவம் போதாது, மன்னித்துவிடுங்கள்’ என்று சாருவை கூட்டத்திலேயே வாரிவிட்டேன். அதற்குப் பிறகு ராஸ லீலா பிரச்சினையில் இருவருக்கும் முட்டிக்கொண்டது. சண்டையென்றால் அப்படியொரு சண்டை. பாரிஸில் நடுத்தெருவில் நின்று சண்டை போட்டுக்கொண்டோம். ராஸ லீலா கொடுத்த கொதிப்பில், ‘சாருவுக்கு பாலியல் குறித்த அறிவே கிடையாது. அவர் எழுதுவதெல்லாம் பாலியல் வறுமையால் உழல்பவனின் வக்கிரம் மட்டுமே’ என நான் எழுதப்போக, அவரோ ‘என்னுடைய பாலியல் அறிவைப் பற்றி என்னுடைய மனைவியிடம் ஷோபா கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்’ என்று பதில் சொல்லி நான் சொன்னதை முழுவதுமாக நிரூபித்தார். எக்ஸைல், காமரூப கதைகள், தேகம் எனத் தொடர்ச்சியாக எழுதி நான் சொன்னதையே அவர் மறுபடிம் மறுபடியும் நிரூபித்துக்கொண்டிருந்தார். எனது நாவல்களை கடுமையாக விமர்சித்ததால் நான் அவருடன் உறவை முறித்துக்கொண்டேன் என எழுதத் தொடங்கினார். அவ்வளவும் பச்சைப் பொய் என வைத்துக்கொள்ளுங்கள். அவர் உறவு முறிந்துவிட்டது எனத் திரும்பத் திரும்ப கோணல் பக்கங்களில் எழுதிக்கொண்டிருந்த போதுதான் நான் அவரது ஃபிரான்ஸ் விசாவுக்கு ‘ஸ்பொன்சர் பத்திரம்’ தயாரித்துக் கொடுத்தேன். அவருடைய பாபா, நித்தியானந்தா, நல்லி குப்புசாமி, துக்ளக், மோடி பஜனையால்தான் நான் அவரிடமிருந்து தெறித்து ஓடினேன். எதுவாகயிருந்தாலும் சாருவின் முதலிரண்டு நாவல்களும் அவருடைய பாசாங்கான மொழியும் (ஆம், பாசாங்கான மொழிதான்- அதுதான் இலக்கியத்திற்கு அவசியம்) தமிழ் இலக்கியத்திற்கு ஒரு திறப்பு. அ. மார்க்ஸ், ஜெயமோகன் போன்ற கூர்மையான விமர்சகர்கள் கூட இதை மறுப்பதில்லை. என்னைப் போல அன்றைய பல இளம் எழுத்தாளர்கள் அவரது எழுத்துகளிற்கு பரம அடிமைகளாகக் கிடந்தோம் என்பதை இன்று ‘முதிய’ எழுத்தாளர்களாயிருக்கும் எங்களது ‘செட்’டில் என்னைத் தவிர வேறு யாரும் பொதுவில் சொல்வதில்லை என்றே நினைக்கிறேன். தல சொல்லும் பொய்களை, தல மீறும் வாக்குறுதிகளை, தல சொல்லும் முன்பின் முரண்களை எல்லாம் நான் இலக்கியமாகவே எடுத்துக்கொள்வதுண்டு. இலக்கியத்தில் தர்க்கத்தை எதிர்பார்ப்பவன் நானல்ல. எனவே இளம் எழுத்தாளத் தோழர்களே, ஒரு அன்னப் பறவையைப் போல நீங்கள் சாருவைப் பருகவேண்டும். அவர் தண்ணி காட்டுவார்தான். ஆனால் நீங்கள் பாலை மட்டுமே பருகுங்கள். தக்கன பிழைக்கும் என்பதுதானே பிரபஞ்சத்தின் ஆகப்பெரிய மெய்யியல்.”
ஷோபா சக்தி
இதை வாசித்த பிறகு ஜெயசீலன் என்னை அழைக்கவில்லை.
ஒருவரைப் பார்த்து “ஏன் டல்லா இருக்கீங்க?” என்று கேட்பதே உருவ கேலி என்கிற போது, ”சாருவுக்கு பாலியல் குறித்த அறிவே கிடையாது. அவர் எழுதுவதெல்லாம் பாலியல் வறுமையால் உழல்பவனின் வக்கிரம் மட்டுமே” என்று எழுதுவது எத்தனை பெரிய அவதூறு என்பது யாராலுமே புரிந்து கொள்ளக் கூடியதுதான். இதற்காக ஷோபாவை நான் நீதிமன்றத்துக்கு இழுத்து மருத்துவப் பரிசோதனை மூலமாகவோ அல்லது ஏதாவது நேரடிச் செயல்பாட்டின் மூலமோ என் “ஆண்மை”யை நிரூபித்து ஷோபாவிடமிருந்து சில கோடிகளை நஷ்ட ஈடாகப் பெற்றிருக்க முடியும். ஆனால் பன்றிகளோடு பொருதி நீங்கள் வெற்றியே கண்டாலும் நீங்களும் பன்றிதான் என்று ஆகி விடும் என்பதால் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டேன். மேலும், என் பாலியல் போதாமை குறித்துக் கவலைப்படுவதற்கு ஷோபா என்ன என் செக்ஷுவல் பார்ட்னரா? இதோ பாருங்கள், நான் ஒரு animal lover என்பது ஊருக்கே தெரியும், அப்படியிருக்கும்போது நான் ஒரு விலங்கோடு கலவி கொள்வதெல்லாம் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத விஷயம். அந்த அளவு வக்கிரம் கொண்டவன் அல்ல நான்.
வேறு எப்படி நான் என்னுடைய பாலியல் ’திறன்’ பற்றி ஷோபா சக்தியிடம் நிரூபிக்க முடியும்? சராசரி மனிதர்கள் இந்த வசையை எப்படி எதிர்கொள்வார்கள் என்று உங்களுக்குத் தெரியும். “உன் அக்காளைக் கொண்டு வா, உன் அம்மாளைக் கொண்டு வா, உன் பொண்டாட்டியைக் கொண்டு வா, அவர்கள் உன்னிடம் சொல்வார்கள் நான் படுக்கையில் எப்படி என்று.” இதுதான் ஷோபாவின் அவதூறுக்கு சராசரிகளின் பதிலாக இருக்கும். ஆனால் நான் என் உயிரே போனாலும் பெண்களை அவமதிக்க மாட்டேன். ஷோபாவிடம் என் ‘ஆண்மை’யை நிரூபிக்க இன்னொரு வழி இருக்கிறது. என் தோழிகள் யாராவது முன்வந்து என் பாலியல் “திறன்” பற்றி ஷோபாவிடம் சொல்லலாம். ஆனால் இது தமிழ்நாடு. ஃப்ரான்ஸ் அல்ல. மேலும், நான் ஓவியா மாதிரி ஒரு நடிகையாக இருந்தால் விடியோவை வெளியிட்டு நிரூபிக்கலாம். துரதிர்ஷ்டவசமாக நான் எழுத்தாளன். இங்கே தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு மட்டுமே அந்த லக்ஷுரியெல்லாம் உண்டு. நடிகர்கள் என்றுகூட சொல்ல முடியாது. நடிகைகளுக்குத்தான் அந்த லக்ஷுரி. சென்ற வாரம்கூட என்னால் இந்த எழுபத்து மூன்று வயதில் ஒரு மணி நேரம் ‘செயல்பட’ முடிந்தது என்றால் அது ஒரு மெடிகல் மிராக்கிள். நடைமுறையில் சொன்னால் இதற்கெல்லாம் காரணம், மூலிகைகள்தான். என் பதினைந்தாவது வயதிலிருந்து என் உடலின் ரத்தத்தில் மூலிகைகள் கலந்திருக்கின்றன. மிளகை தேனில் பதினைந்து நாள் ஊற வைத்து அதற்குப் பின் தினமும் காலையில் மூன்று மிளகை வெறும் வயிற்றில் மெல்ல மெல்லக் கடித்து எச்சிலோடு விழுங்க வேண்டும். இப்படி ஒரு வாரம். அடுத்த வாரம், ஒரு வெங்காயம், நாலு பல் பூண்டு இரண்டையும் தூளாக வெட்டி, எட்டு தேக்கரண்டி தேனில் எட்டு மணி நேரம் ஊறப் போட்டு, பிறகு அந்தக் கரைசலை மிக்ஸியில் அடித்து திரவமாக்கிக் கொண்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட வேண்டும். இப்படி ஒரு நூறு குறிப்புகள் என்னிடம் உள்ளன. அவற்றை விடாமல் செய்துகொண்டு வருகிறேன்.
இதற்கு மேல் சித்த மருத்துவர் பாஸ்கரனின் மூலிகை மருந்துகள்.
இப்போது இந்த எழுபத்து மூன்று வயதில் என் உடம்பை அறுத்துப் பார்த்தால் இதயம் தவிர மற்ற உள்ளுறுப்புகள் யாவும் ஒரு முப்பத்தைந்து வயது மனிதனைப் போல்தான் இருக்கும். ஒரு மணி நேரம் “இயங்க” முடிந்தது ஒரு உதாரணம். நிரூபிக்க வழியில்லை. ஆனால் திருவண்ணாமலையில் நான் நிகழ்த்திய அதிசயத்தை நீங்கள் யூட்யூப் மூலம் இப்போதும் காணலாம்.
இரவு முழுவதும் வைன் அருந்தி விட்டு காலை ஐந்து மணிக்குப் படுத்து, ஏழு மணிக்கு எழுந்து, ஒன்பது மணிக்கு அரங்கத்துக்கு வந்து பத்து மணியிலிருந்து மாலை ஆறரை வரை (மதிய உணவு அரை மணி நேரம் போக) எட்டு மணி நேரம் நின்றபடியே சர்வதேச சினிமா பற்றி பாடம் எடுத்திருக்கிறேன். வயது எழுபத்து மூன்று. ஒரு துளி களைப்போ அலுப்போ இல்லை என்பதை நீங்கள் அந்த யூட்யூப் காணொலியிலேயே கண்டு களிக்கலாம்.
மீண்டும் ஷோபா சொல்லும் என்னுடைய பாலியல் வறுமை பற்றிப் பார்ப்போம். இதுவரை நான் porn நாவல் எழுதியதில்லை. எக்ஸைல் எல்லாம் சும்மா ஜுஜுபி. இப்போது உல்லாசம் உல்லாசம் நாவலை ஒரு porn நாவலாக மாற்றிவிடக் கூடிய அனுபவம் கிடைத்துள்ளது. ரகளை பண்ணலாம். ஆனால் என்ன, தியாகராஜா மூலம் கிடைத்த நற்பெயரை அது சுத்தமாக அழித்து விடும். பரவாயில்லை, கலைஞர்கள் இதற்கெல்லாம் அஞ்ச முடியாது.
மேலும் தர்க்க ரீதியாக ஒரு கேள்வி. ஷோபா சொல்வதை ஒரு வாதத்துக்கு ஒப்புக்கொண்டாலும், பாலியல் அனுபவம் இல்லாதவர்கள் பாலியல் கதையை எழுதக் கூடாதா, எழுத முடியாதா? செக்ஸ் என்பதை ஒருவன் அல்லது ஒருத்தி, ஒரு ஃபாண்டஸியாக அனுபவம் கொண்டு அதை எழுதக் கூடாது என்று ஏதாவது விதி இருக்கிறதா? கிரிக்கெட் ஆட்டம் பற்றி எத்தனையோ அற்புதமான நூல்கள் வந்துள்ளன. அதை எழுதிய பலரும் கிரிக்கெட் மட்டையைத் தொட்டுக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால் இதெல்லாம் திருடன் மணியன் பிள்ளை மாதிரி அனுபவக் கதைகள் எழுதும் ஜூனியர் விகடன் நிருபர் எழுத்தாளரான ஷோபா சக்தியின் அறிதல்/புரிதல் எல்லைக்கு அப்பாற்பட்டது.
ஷோபா சக்தி என் பாலியல் வறுமை பற்றிய கண்டுபிடிப்பை எழுதி பல மாதங்கள் ஆகி விட்டன. நான் அதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. இப்போது ஏன் எழுதுகிறேன் என்றால் அதற்குக் காரணம், என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த வினித்தும் சேகரும்தான்.
வாசகர் வட்டச் சந்திப்புகளில் என்னை நாலு பேராக சேர்ந்து கொண்டு விவாதம் என்ற பெயரில் சூத்தடிப்பார்கள். நானோ விவாதத்தில் பூஜ்யம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு ஒரு கட்டத்தில் குதம் கிழிந்து குருதி வழிய தூங்கப் போகிறேன் என்று சொல்லி விட்டு ஓடி விடுவேன். இதன் பெயர் ஜனநாயகம். ஒன்று, குரு சிஷ்யன் என்றால் மடம் மாதிரி இருக்கும். அப்படி இல்லாமல் ஜனநாயகம் என்றால் குருவின் சூத்தை நாலு சிஷ்யர்கள் ஒரே நேரத்தில் குப்பியடித்துக் கிழிப்பது. இதன் பெயர் பின்நவீனத்துவ ஜனநாயகம். (இந்தக் காரியத்தில் சேகர் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.)
இப்படிப்பட்ட பின்நவீனத்துவ ஜனநாயக வாசகர் வட்டத்தைச் சேர்ந்த வினித்தும் சேகரும் சீனியுடன் சேர்ந்து தி.நகர் சங்கம் ஓட்டலின் மொட்டை மாடியில் உள்ள மதுபான விடுதிக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கே ஒரு ஓரத்தில் ஷோபா சக்தியையும் அவரது பூமர் நண்பர்களையும் கண்டு விட்டு இவர்கள் இன்னொரு பக்கம் ஒதுங்கியிருக்கிறார்கள். இவர்களைப் பார்த்ததும் ஷோபா சக்தி எழுந்து வந்து இவர்களைத் தன் பக்கம் அழைத்திருக்கிறார். சீனி போகவில்லை. மற்ற இரண்டு அசடுகளும் சென்றிருக்கின்றன. அங்கே போனதும் ஷோபா என்னைப் பற்றி கடும் தூஷணைகளைச் சொல்லியிருக்கிறார். இந்த அசடுகளுக்கு ஏற்கனவே ஷோபா என்னுடைய ’பாலியல் வறட்சி’ பற்றி எழுதியதெல்லாம் தெரியும். இருந்தாலும் ஜனநாயகம் ஆயிற்றே? அதனால் போயிருக்கிறதுகள். அங்கே விட்டு ஷோபா என்னை செருப்பால் அடித்திருக்கிறார். சாரு என்ன எதிர்ப்பு இலக்கியம் பண்ணியிருக்கிறார்? எல்லாம் அதிகாரத்துக்கு ஜால்ரா. இத்யாதி. இத்யாதி. இந்த அசடுகள் ஷோபாவை எதிர்த்து வாதம் செய்திருக்கின்றன. அதற்கு ஷோபா அடப் போங்கடா சாருவின் அல்லக்கைகளா என்று இதுகளையும் செருப்பால் அடித்துத் துரத்தி விட்டார்.
இந்த ரெண்டு அசடும் வீடு திரும்பிய மறுநாள் மற்ற சில அசடுகளையும் சேர்த்துக்கொண்டு ஷோபா சக்தி ஏழு ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதைகளையெல்லாம் எடுத்து விவாதித்து வியந்து ஓதிக்கொண்டிருந்திருக்கின்றன. உடனே சீனி வந்து “டேய், இது சாரு வாசகர் வட்டமா? ஷோபா சக்தி வாசகர் வட்டமா?” என்று கேட்டு அந்த விவாத அரங்கின் பெயரையும் “ஷோபா சக்தி வாசகர் வட்டம்” என்று மாற்றி விட்டார். உடனே வினித் அசடு வந்து அதைத் திரும்பவும் சாரு வாசகர் வட்டம் என்றே மாற்றி, “நாம் எல்லோரையும்தானே விவாதிக்கிறோம்?” என்று பின்நவீனத்துவ ஜனநாயகம் பேசியிருக்கிறது.
ஏண்டா டேய், ஒருத்தன் உன் அப்பனை ஆண்மையற்றவன், செக்ஸ் தெரியாதவன் என்று தூஷணை செய்து எழுதுகிறான். உன்னை அல்லக்கை என்று திட்டுகிறான். அவனுக்கு ஏண்டா குண்டி கழுவுகிறீர்கள்? உங்களுக்கெல்லாம் ரோஷம் மானம் கிடையாதா? உங்கள் வீட்டுப் பெண்களை எவனாவது வன்கலவி செய்து விட்டால், அந்த ரேப்பிஸ்டின் சமூகவியல் பின்னணி பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதுவீர்களா? பின்நவீனத்துவம், ஜனநாயகம் என்றால் சுரணை கெட்டதனம் என்று எவண்டா உங்களுக்குச் சொன்னது? என் எழுத்திலிருந்து இதைத்தான் கற்றீர்களா? ரௌத்ரம் பழகு என்றெல்லாம் கேள்விப்பட்டதில்லையா? உன் ஆசானை ஒருத்தன் அவமானப்படுத்தினால் அவனை அந்த இடத்திலேயே செருப்பால் அடிக்க வேண்டாமா? ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ஒரு வெள்ளைக்காரத் தடிப்பயல் சீனியை ரேஸிஸ்ட் அட்டாக் செய்த போது அவனைப் பொது இடத்தில் நான் அடிக்கப் போனேனா, இல்லையா? அவன் கைது நடவடிக்கைக்குப் பயந்து வேனிலிருந்து இறங்கி ஓடினானா இல்லையா? முதலில் உங்கள் ஆசானை ஒருத்தன் ஆண்மையற்றவன், செக்ஸ் தெரியாதவன் என்று சொன்னதற்காகவே அவன் உங்களை அழைத்தபோது செருப்பை எடுத்துக் காண்பித்திருக்க வேண்டும்.
என்னுடைய இன்னொரு தோழி ஷோபா சக்தியை புத்தக விழாவில் கண்டு அவர் நூலில் அவரிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறாள். “உன் ஆசானை தூஷணை செய்தால் உனக்குக் கோபம் வராதா?” என்று அவளிடம் கேட்டேன். “நீங்கள்தானே ஷோபா சக்தி மீது நட்பு பாராட்டிப் பேசுவீர்கள்?” என்றாள். நான் பேசுவேன். அது வேறு. ஆனால் ஜெயசீலன் என்னை சந்திப்புக்கு அழைத்த போது ஷோபாவின் அவதூறைத்தானே அவருக்கு அனுப்பினேன்? எதார்த்தத்தில் ஜனநாயகம் மயிர் மட்டை என்று சொல்லிக்கொண்டு உங்களுக்கெல்லாம் சுயமரியாதை போய் விட்டது என்பதுதான் என் அவதானம். எத்தனை அடித்தாலும் ரௌத்ரம் பழகாமல் அடியை வாங்கி வாங்கி உங்கள் தோல் தடித்து விட்டது. அவ்வளவுதான்
எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், இப்படியெல்லாம் என்னைப் பற்றி தூஷணை எழுதும் ஷோபா சக்தி என்னை நேரில் கண்டால் எஸ் வடிவத்தில் ஏன் வளைந்து நெளிந்து குழைகிறார் என்பதுதான்.
சங்கம் ஓட்டல் சம்பவத்துக்குப் பிறகு மறுநாள் ஷோபா சக்தி என்னை புத்தக விழாவில் பார்த்தபோது மீண்டும் எஸ் வடிவில் குழைந்தார். டேய், அந்த அளவுக்கு நான் கேனக்கூதி இல்லடா என்று நினைத்தபடி மூஞ்சியைத் திருப்பிக்கொண்டு போய் விட்டேன்.
ஷோபா சக்திக்கு என் எழுத்து பிடிக்கவில்லை. பாலியல் வறட்சியில் சிக்குண்டு பாலியல் வக்கிரக் கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். பாலியலுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. அதிகாரத்துக்குக் கூஜா தூக்குகிறேன். சரி. இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளனைப் பார்த்தால் ஏண்டா எஸ் வடிவத்தில் உங்கள் உடம்பை வளைத்து நெளித்து வணக்கம் போடுகிறீர்கள்? உங்களுக்கு உங்களை நினைத்தே வெட்கமாக இல்லையா? நான் என்ன அரசியல் கட்சியா நடத்துகிறேன், என்னைப் பார்த்துக் கூழைக் கும்பிடு போடுவதற்கு? விட்டால் எடப்பாடி போல் நாலு காலில் நடந்து மேஜைக்கு அடியில் வந்து காலைத் தொடுவீர்கள் போலிருக்கிறதே? ஒரு எழுத்தாளனைப் பிடிக்காவிட்டால் அவனைப் பார்த்து மூஞ்சியைத் திருப்பிக்கொண்டு போக வேண்டியதுதானே மனிதனாகப் பிறந்ததன் அடையாளம்? சராசரி மனிதன் கூட அப்படித்தானே நடந்து கொள்வான்? அரசியல்வாதி மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு. காரணம், பதவி, பணம். இலக்கியத்தில் என்ன நொட்டுகிறது? என்னைப் பார்த்து எஸ் வடிவத்தில் நெளிந்து வணக்கம் போட்டு விட்டு என் அசட்டு நண்பர்களைப் பார்த்தால் என்னைப் பற்றி தூஷணை செய்வது எடப்பாடி காரியம் என்று ஷோபா சக்திக்குத் தெரியவில்லை?
தர்மு சிவராமுவை ஒருமுறை சந்திக்கச் சென்றிருந்தேன். நீ என்னைத் திட்டி எழுதியிருக்கிறாய், உன்னை நான் சந்திக்க விரும்பவில்லை என்றார். இல்லை, அப்படி நடந்ததே இல்லை, சான்று இருந்தால் காண்பியுங்கள் என்றேன். அவர் சொன்ன கட்டுரையில் அப்படி எதுவும் இல்லை. மாறாக, அவரை நான் பாராட்டி எழுதியிருந்ததுதான் இருந்தது.
பிறகு நட்பாகப் பேசினார். பிறகு தேநீர் அருந்தினோம். தேநீருக்குக் காசு கொடுக்கப் போனேன். தர்மு நண்பர்களின் பண உதவியில் வாழ்ந்து கொண்டிருந்தார். “இல்லை, நீ பணம் கொடுக்க வேண்டாம், நீ எங்கோ என்னைத் திட்டி எழுதியிருப்பதாக என் மனதில் படிந்திருக்கிறது, அது போகும் வரை உன் காசில் நான் தேநீர் அருந்த மாட்டேன்” என்றார்.
ஆனால் இன்றைய இலக்கிய உலகம் அரசியல் அளவுக்குத் தரம் தாழ்ந்து கிடக்கிறது. ஷோபா சக்தி மதுபான விடுதியிலும், பத்திரிகையிலும் என்னை செக்ஸ் அறியாதவர் என்று எழுதுகிறார், அவதூறு செய்கிறார். ஆனால் நேரில் பார்த்தால் எடப்பாடி போல் மண்டியிட்டு நெளிகிறார், குழைகிறார். அரசியலிலாவது அப்படிக் குழைவதற்கான லாபம் இருக்கிறது. இலக்கியத்தில் என்னய்யா இருக்கிறது? ஏன் இந்த ரெட்டை வேஷம்? நான் எப்படி இருக்கிறேன்? இவர் மதுபான விடுதியில் என்னைத் திட்டினார் என்று அறிந்ததுமே மூஞ்சியைத் திருப்பிக்கொண்டு போனேனா இல்லையா?
என்னைப் பற்றியும், என் குஞ்சைப் பற்றியும், என் எழுத்து பற்றியும் ஷோபா என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ள அவருக்குப் பூரண உரிமை உண்டு. அது அவர் சுதந்திரம். ஆனால் நேரில் பார்த்தாலும் அதே வெறுப்போடு இருப்பதுதானே நியாயம்? இது எத்தனை எளிமையான விஷயம். இதை ஏன் போட்டு இத்தனை குழப்பிக்கொள்கிறார் ஷோபா சக்தி?
கடந்த பத்து ஆண்டுகளாக ஒவ்வொரு புத்தக விழாவிலும் என்னைப் பார்க்கும் ஷோபா சக்தி என்னைக் குடிக்க அழைப்பார். குடிப்பதை மிக விரும்பும் நான் ஷோபாவுடன் குடிப்பதை எப்போதும் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஏனென்றால், 2006இல் பாரிஸில் வைத்து அவர் ஒரு மதுபான விடுதியில் என்னைத் தரக் குறைவாகத் திட்டியதால் “இனிமேல் உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டேன். அதை இப்போதும் கடைப்பிடித்து வருகிறேன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தக விழாவில் வைத்து ஷோபா என்னைக் குடிக்க அழைத்தார். அப்போது அவர் குடித்திருந்ததால் என்னை மிகவும் வற்புறுத்தினார். கையைப் பிடித்து இழுத்தார் என்றே சொல்ல வேண்டும். எத்தனை வற்புறுத்தியும் நான் மூர்க்கமாக மறுத்து விட்டேன். எதற்கு? குடி போதையில் அவர் என்னைத் திட்டுவதை, அவதூறு பேசுவதை என்ன மயிருக்கு நான் கேட்க வேண்டும்? இதைத்தானே இருபது ஆண்டுகள் சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என் மீது செய்துகொண்டிருந்தார்கள்? எனக்கான ஒரு வாசகர் வட்டம் வந்த பிறகுதானே அந்த சிறுபத்திரிகை வெறுப்பாளர்களிடமிருந்து தப்பினேன்? இப்போதும் எதற்கு இந்த நரகலை மிதிக்க வேண்டும்? தலையெழுத்தா?
என் பாலியல் வறட்சி பற்றிய ஷோபாவின் தூஷணைக்கு நான் இதுவரை ஏன் பதில் சொல்லவில்லை? காரணம், அதற்கு அவசியமில்லை என்று நினைத்தேன். ஏனென்றால், ஆண்மைக் குறைவுக்கும் erectile dysfunctionக்கும் தமிழ்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளாக படுபயங்கரமான மூலிகை மருந்துகள் உண்டு. நிலப்பனைக் கிழங்கை உண்டால் தொண்ணூறு வயதிலும் நாலு குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனாலும் இப்போது எழுதுவதன் காரணம், என் வாசகர் வட்ட அசடுகளுக்கு ரௌத்ரம் பற்றிய பாடம் சொல்லிக்கொடுப்பதற்காகத்தான்.
இதற்கிடையில் இன்னொரு மகா பெரிய ஜோக் என்னவென்றால், சேகர் ஷோபா சக்தியின் இருக்கைக்குச் சென்றதும் தன் பாக்கெட்டிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார். இது அம்பானியின் கார் டிரைவர் அம்பானியிடம் ஆயிரம் ரூபாய் கிஃப்ட் கொடுக்கும் அசட்டுச் செயலுக்கு ஒப்பானது என்று சேகருக்குத் தெரியவில்லை. ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு ஷோபா சக்தி ஒரு அம்பானிதான். காரணம் சொல்கிறேன். ஷோபா இதுவரை ஒரு நூறு தேசங்கள் சுற்றியிருப்பார். குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள். கூபாவுக்கு மட்டுமே ஒரு பத்து முறை சென்றிருப்பார். எனக்கு இது எல்லாமே ஒரு கனவு. கூபா பற்றியும் சே குவேரா பற்றியும் நான் என்னுடைய இருபத்தைந்தாவது வயதில் படிகள் பத்திரிகையில் ஒரு இருபது பக்க கட்டுரை எழுதினேன். இப்போது என் வயது எழுபத்தைந்தை நெருங்குகிறது. நான் செத்து மடிவதற்குள் கூபாவையும் கிழக்கு ஐரோப்பாவையும் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஹங்கேரிய சினிமா பற்றி என்னால் ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் ஒரு மாத காலம் பாடம் எடுக்க முடியும். ஜப்பான் எப்படி பூலோக சொர்க்கமோ அப்படி கூபா ஒரு பூலோக நரகம். இண்டர்நெட் கிடையாது. கைத்தொலைபேசி கிடையாது. ஒரே ஒரு பியர் வாங்கிக் கொடுத்தால் ஒரு இளம் பெண் உங்களோடு இரவு முழுவதும் நடனமாடத் தயார். இப்படி ஒரு நரகத்தை உலகில் காண முடியுமா? சில ஆஃப்ரிக்க நாடுகள் இருக்கின்றன. ஆனால் கூபா என்பது அப்படியா? கம்யூனிஸ்டுகளின் கனவு நாடு இல்லையா அது?
ஷோபா சக்தியால் எப்படி இத்தனை நாடுகளையும் சுற்ற முடிகிறது?
பாண்டிச்சேரி மீன் மார்க்கெட்டுக்குச் செல்லுங்கள். புரிந்து கொள்ளலாம். பாண்டிச்சேரியில் ஆசிரியர்களுக்கு ரெண்டாயிரம் ரூபாய் மாத ஊதியம் கிடைத்துக்கொண்டிருந்த காலத்தில் – நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு – சொல்தா குடும்பங்களுக்கு ஃப்ரெஞ்ச் உதவித் தொகை முப்பதாயிரம் ரூபாய். மீன்காரப் பெண் ஒரு கூறு மீன் எட்டணா சொன்னால் ஒரு ரூபாயைக் கொடுத்து வாங்கிக்கொண்டு போவார் சொல்தா குடும்பத்துக்காரர். அவருடைய அப்பனோ தாத்தனோ ஃப்ரெஞ்ச் சோல்ஜராக (சொல்தா) இருந்திருப்பார். அதற்கான உதவித் தொகை அந்த முப்பதாயிரம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்.
இங்கே தமிழ்நாட்டில் இலங்கை அகதி முகாம்களில் வாழும் வாழ்க்கையா ஃப்ரான்ஸின் அகதி வாழ்க்கை? இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஷோபா சக்தி இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து என்னை பாரிஸுக்கு வரவழைத்தார். அது மட்டும் நடந்திருக்கவில்லை என்றால், இன்றைய தினம் வரை ஃப்ரான்ஸுக்கும் நான் சென்றிருக்க முடியாது.
டேய் சேகர் தம்பி, நீ ஷோபா சக்தியிடம் கொடுத்த ஆயிரம் ரூபாய் நம் இயக்கத்துக்கானது என்றாவது உனக்குத் தெரியுமா? சமீபத்தில் நான் ஜப்பான் சென்று வந்த பயணத்துக்கு எட்டு லட்சம் ரூபாய் ஆனது. யார் காசு? உன்னிடமும் உன்னைப் போன்ற வாசகர்களிடமும் நான் குலுக்கிய உண்டியல் காசுதான். அந்தப் பயணம்தான் ரொப்பங்கி இரவுகளாக எழுதப்பட்டு வருகிறது.
ஷோபா சக்தி சேகரிடம் “என்னிடம் நிறைய பணம் இருக்கிறது, இதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லித் திருப்பிக்கொடுத்திருக்கிறார்.
சேகர் தம்பி என்ன நினைத்து விட்டது என்றால், மணியன் பிள்ளையைப் போய் அது பார்த்த போது மணியன் பிள்ளைக்கு ரெண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறது. மணியன் பிள்ளை வாட்ச்மேன் வேலை பார்க்கிறார். சோற்றுக்கே திண்டாட்டம். அங்கே ரெண்டாயிரம் கொடுக்கலாம். ஆனால் திருடன் மணியன் பிள்ளை போல் எழுதுபவரையெல்லாம் வாட்ச்மேன் போல் நினைத்துப் பணம் கொடுக்கலாமா, தம்பி?
கொஞ்சம் கூர்மையாக வாழப் பழகுங்கள். ஜனநாயகம், பின்நவீனத்துவம் என்ற பெயரில் எதிரிகளுக்குக் குண்டி கழுவி விடாதீர்கள். கொஞ்சமாவது ரௌத்ரம் பழகிக் கொள்ளுங்கள்.